siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 25 ஜூலை, 2012

பூவின் மகரந்த துகள் கேன்சரை தடுக்கும் ஆய்வில் தகவல்


 
தேன் சேகரிக்கும் தேனீயிடம் இருந்து உதிரும் மகரந்த துகள்களை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியம் அளிக்கும் என்கின்றனர் இங்கிலாந்து டாக்டர்கள். தேனீக்கள் பல பூக்களிலும் அமர்ந்து தேன் சேகரிக்கின்றன. அப்போது, அவற்றின் கால்களில் பூவின் மகரந்த தூள்கள் ஒட்டிக்கொள்கின்றன.

அடுத்த பூவில் உட்காரும்போது, தூள்கள் அந்த மலரில் விழுகின்றன. இவ்வாறு பூ இனப்பெருக்கத்துக்கு தேனீக்கள் உதவிகரமாக இருக்கின்றன. இடம் விட்டு இடம் போகும்போது, தேனீயின் உடம்பில் இருந்து உதிரும் மகரந்த துகள்களுக்கு நோய் நீக்கும் மருத்துவ குணமும் இருப்பதாக இங்கிலாந்து டாக்டர்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி டாக்டர் சாரா ஷெங்கர் கூறியிருப்பதாவது:

தீங்கு ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்களால் நமது செல்கள் பாதிக்கப்படுகின்றன. நல்ல செல்கள் அழிந்து தீய செல்கள் அதிகரிப்பதுதான் கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாகின்றன. ஃப்ரீ ரேடிகல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் தடுக்கின்றன. இந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் மலர்களின் மகரந்த துகள்களில் அதிகம் உள்ளன.

மகரந்த துகள்களை காய்கறி அல்லத பழ சாலட்கள் மீது தூவியோ, கேப்சூலாகவோ எடுத்துக் கொள்ளலாம். தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த துகள்கள் சுத்திகரிக்கப்பட்டு பாக்கெட்களில் அடைத்து தற்போது லண்டனில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது.

அலர்ஜி இருப்பவர்கள் தவிர்த்துவிடலாம். மகரந்த துகளின் மருத்துவ குணங்கள் பற்றி விரிவாக ஆய்வு நடத்தினால், அதன் அரிய குணங்கள், நோய்களை தீர்க்கும் குணங்கள் பற்றி தெரியவரும். இவ்வாறு சாரா கூறினார்

மைதா-ரவா சோமாஸ்

 

 

மேல் மாவிற்கு:
மைதா - அரை கப்;
ரவை பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்;
உப்பு - கால் டீஸ்பூன்;
நெய் - 1 டீஸ்பூன்;
பொரிப்பதற்கு - தேவையான அளவு எண்ணெய்.

பூரணத்திற்கு:
ரவை - அரை கப்;
துருவிய கொப்பரைத் தேங்காய் -அரை கப்;
பொடித்த அல்லது பொடியாக நறுக்கிய முந்திரி - 15;
சர்க்கரை - அரை கப்;
ஏலக்காய்த்தூள் - சிறிது; நெய் - அரை கப்.
திராட்சை - 5;
மேல் மாவிற்கு கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசைந்து கெட்டியாக ஈரத்துணியில் மூடி வைக்கவும். நெய்யில் ரவை, முந்திரி, திராட்சை, தேங்காய் சேர்த்து வறுத்துக்கொண்டு ஆறியதும் ஏலக்காய்த்தூள், சர்க்கரைத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன அப்பளமாகத் தட்டி நடுவில் இந்த பூரணத்தை வைத்து தண்ணீர் தொட்டு மடித்து விருப்பமான வடிவத்தில் மூடி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: இதை இரண்டு நாட்களுக்குமுன் கூட செய்து வைக்கலாம்.

ஜோதிட முதல்பக்கம்இன்றைய ராசி பலன்கள் - 7/26/

மேஷம்

மேஷம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

ரிஷபம்

ரிஷபம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந் தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக் கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மிதுனம்

மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். நட்பு வட்டம் விரியும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்தது நிறைவேறும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கடகம்

கடகம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியூர்
பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

சிம்மம்

சிம்மம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப் பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனஉளைச்சல் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

விருச்சிகம்

விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள்
வரக்கூடும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி
வெல்லும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

தனுசு

தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
சிறப்பான நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மகரம்

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில்
புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள் வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். குடும்பத்தில் உள் ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. முன் கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பேச்சில் இங்கிதம்
தேவைப்படும் நாள்

வவுனியாவில் பெண் தொழிலதிபர் சடலமாக மீட்பு

 _
25.07.2012.வவுனியா கோவில்குளத்தில் உள்ள விடுதியொன்றிலிருந்து பெண் தொழிலதிபர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், தெஹிவளை, வவுனியா ஆகிய இடங்களில் ‘வி கெயார்’ என்ற பெயரில் அழகுக்கலை நிலையத்தினை நடத்திவந்த கேதாரலிங்கம் விசாகினி (31) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

வவுனியா ஹோட்டலுக்கு நேற்றிரவு இளைஞர் ஒருவருடன் விசாகினி தங்கியிருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த இளைஞரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இரவுப்பொழுதில் அவருடன் தங்கியிருந்ததாகவும் காலையில் விழித்துப்பார்த்தபோது விசாகினி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பது தெரியவந்ததாகவும் அந்த இளைஞர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

சுன்னாகத்தில் 28 ஆம் திகதி பொலிஸாரின் நடமாடும் சேவை

 _
25.07.2012.சுன்னாகம் பொலிஸாரின் நடமாடும் சேவை எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்தா தலைமையில் நடைபெறவுள்ளது.

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பெறுமதியான ஆவணங்களை தொலைத்தவர்களுக்கான பொலிஸ் முறைப்பாடுகள் செய்தல் ,வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பயிற்சிகள், மருத்துவ சேவை உட்பட பல்வேறு சேவைகளும் இடம் பெறவுள்ளன.

உடுவில் பிரதேச செயலகத்தைச சேர்ந்த ஜே.185 உடுவில் மத்தி வடக்கு ஜே.186 உடுவில் வடக்கு ஜே.195 சுன்னாகம் வடக்கு ஜே.196 சுன்னாகம் தெற்கு ஜே.197 சுன்னாகம் கிழக்கு ஜே. 198 சுன்னாகம் மத்தி ஜே.199 சுன்னாகம் மேற்கு ஜே. 200 கந்தரோடை ஜே. 202 ஏழாலை தென்மேற்கு கிரம அலுவலர் பிரிவுகளைச் சோந்த மக்களைக் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளார்கள்.

12 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவர் இல்ல அதிகாரி கைது _

_
25.07.2012.மாவனெல்லை பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகள் ஐவரையும்; எம்பிலிப்பிட்டிய எஹலியகொட பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்;கியிருந்த சிறுமிகள் ஏழு பேருமாக 12 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவர் இல்லப் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத் துர்நடத்தைக்கு துணை புரிந்ததாகக் கூறப்படும் பெண் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இவர்கள் இருவரும் இன்று மாவனெல்லை நீதிமன்றம் முன் ஆஜர் செய்யப்பட்டனர்.

சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கையை அடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்

மஞ்சட் கடவையை தவிர்க்கும் பாதசாரிகள் சட்டத்தின் பிடியில்

 _
25.07.2012பாதசாரிகள் பாதையைக் கடக்கும் போது வீதி விபத்துக்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு பொலிஸ் தலைமையகம் பல சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளது.

பாதசாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், வீதி விபத்துக்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காகவும் பாதசாரிகள் பாதையை மஞ்சள் கோட்டினூடாகவே கடக்க வேண்டுமென்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றை மீறி வேறு இடங்களில் பாதையைக் கடக்க முயன்றால் அவரைக் கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

பேஸ்புக் மீதான தடையைத் தளர்த்தும் ஈரான்?

 _
25.07.2012.பேஸ்புக் சமூகவலையமைப்பின் மீதான தடையைத் தளர்த்தும் நடவடிக்கையை ஈரான் சிறிது சிறிதாக ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இணையக்குற்றங்களைத் தடுத்தல், பாலியல் சம்பந்தமான விடயங்களைத் தவிர்த்தல் போன்ற காரணங்களுக்காக பேஸ்புக்கின் உதவியை நாடும் பொருட்டே அதன் மீதான தடை தளர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக அந்நாட்டு பொலிஸார் பேஸ்புக்குடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஈரானியர்களால் பேஸ்புக்கில் உருவாக்கப்பட்டுள்ள பாலியல் மற்றும் விபச்சாரம் தொடர்பான பக்கங்களை அகற்றும் நடவடிக்கையையும் ஈரான் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது.

ஈரானில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பேஸ்புக் மீது தடை ஏற்படுத்தப்பட்டது.

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அங்கு ஏற்பட்ட அமைதியின்மைக்கு பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற இணையத்தளங்கள் பங்களிப்புச் செய்ததாக குற்றஞ்சாட்டியே ஈரான் பேஸ்புக் மீது தடை விதித்தது.

ஈரானிய சமூக ஆர்வலர்கள் பேஸ்புக்கினைப் பயன்படுத்தியே ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குசெய்தமை குறிப்பிடத்தக்கது

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு

_
25.07.2012மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு மலையக மக்கள் கலை அரங்கின் ஏற்பாட்டில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலையக மக்கள் கலை அரங்கின் தலைவரும் ஆசிரியருமான ஹெலன் வரவேற்புரையும், கவிஞர் சு.முரளிதரன் தலைமையுரையையும், கலாநிதி .ந.இரவீந்திரன் ,பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆய்வு நோக்கு எனும் தலைப்பில் சிறப்புரையும், லெனின் மதிவாணம் நினைவுப்பதிவுரையும், மல்லியப்பு சந்தி திலகர் நினைவுப்பகிர்வும், மலையக மக்கள் கலை அரங்கின் சார்பில் ஆசிரியர் வே.இராமர் கவிதை வாசிப்பும் இடம்பெற்றன.


மேலும் கலாநிதி.ந.இரவீந்திரன் மற்றும் மலையக மக்கள் அரங்கக் குழுவினர் பேராசிரியர்.கா.சிவத்தம்பிக்கு மரியாதை செலுத்ப்பட்டதோடு, இந்த நிகழ்வை முன்னிட்டு நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் பரிசுபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை முன்னாள் கல்வி பணிப்பாளர் திரு.நாகலிங்கம் வழங்கிவைத்தார்

யாழ். நல்லூர் கொடியேற்றம் இன்று (பட இணைப்பு)

_
25.07.2012.
வரலாற்றுப் புகழ் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தக் கொடியேற்ற நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அடியார்களின் அரோகரா ஒலியுடன் இடம்பெற்றது.

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்த அடியார்கள் பெரும் எண்ணிக்கையில் ஆலயத்தில் காலை முதல் காணப்பட்டார்கள். கொடியேற்றம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான ஆண்கள் அங்கப்பிரதட்ணம் செய்ததுடன் பெண்கள் அடிஅழித்தார்கள்.

ஆலயச் சுற்றாடலில் பொலிசாரும் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் பலரும் சேவையில் ஈடுபட்டிருந்தார்கள்.
___