மேஷம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
ரிஷபம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந் தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக் கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். நட்பு வட்டம் விரியும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்தது நிறைவேறும் நாள்.
கடகம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
சிம்மம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப் பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.
தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிறப்பான நாள்.
மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.
கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள் வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். குடும்பத்தில் உள் ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. முன் கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்
குறிப்பு: பிரசுரிப்புக்களுக்கு வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. அக்கருத்துக்களுக்கு வாசகர்களே பொறுப்பு. அவதூரான கருத்துக்களை அடையாளம் காட்டினால் அவை நீக்கப்படும். கருத்துக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கும் வாசகரே பொறூப்பாவார்.அன்பான வாசகர்களே! அர்த்தமுள்ள கருத்துக்களைப் பதிவு செய்திடுங்கள்.
நிர்வாகி தேவன் ராஜா
எமது இந்த இணையச் செய்திச் சேவையை கடந்த 14-01-2012.ஆம் ஆண்டு ஆரம்பிக்கபபட் டு நடாத்தி வருகின்றேன் . இந்தஇணைய சேவைகள் மேலும் தொடந்து நடாத்த உங்களுடைய ஒத்துழைப்புக்களும் ஆதரவும் எனக்கு தேவை.என்னால் முக்கியமான எங்கள் ஊர் இணையங்கள் நவற்கிரி .கொம் நவக்கிரி ,கொம் நிலாவரை.கொம் ஆகியன முக்கிய இணையத்துடன் இன்னும் .பல இணையங்கள் உள்ளன அவை பல விதமான செய்திகளை
உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றது தொடர்ந்தும் ஆதராவாக இருக்கும் அனைவருக்கும் அன்பு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்
0 comments:
கருத்துரையிடுக