siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

ஒண்டோரியாவில் வீடுகளின் விலை உயர்வு

புதன்கிழமை, 25 யூலை 2012கனடாவின் ஒண்டோரியா மாகாணத்தில் வீடு விற்பனை விலை கடந்த நான்கு வருடங்களில் 17 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. The Municipal Property Assessment Corporation எடுத்த ஆய்வின் மூலமே இத்தகவல் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் கடந்த Jan. 1, 2008 ஆம் ஆண்டிலிருந்து Jan. 1, 2012 ஆண்டு வரையான நான்கு ஆண்டு காலத்தில் வீடுகளின் விலையில் ஏற்றம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒண்டோரியாவில் வீடு வாங்கும் நபர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியளிக்க கூடிய செய்தியாக இல்லாவிடினும், டொரண்டோ போன்ற நகரங்களின் வீடு விலையைக் காட்டிலும் குறைவாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விலை எப்பொழுது வேண்டுமானாலும் வீழ்ச்சி அடையலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒண்டோரியோவில் ஒரு வீட்டின் விலை கடந்த Jan. 1, 2008 ஆம் ஆண்டில் $350,000 என்று இருந்தது. அந்த விலை Jan. 1, 2012 $409,500 என்ற விலையில் உள்ளது. அதாவது சரியாக 17 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக