siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்குதல்: 14 பேர் பலி _

 _
25.07.2012.பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானில் அமைந்துள்ள ஷவால் பள்ளத்தாக்கில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நேற்று இரவு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதில் 8 ஏவுகணைகள் டிரீ நிஷ்டார் கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீது விழுந்துள்ளன. இதன்போது வீட்டிலிருந்த 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பலர் தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நோன்பு திறக்க பொதுமக்கள் கூடியிருந்த வேளையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வடக்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் பலர் பதுங்கியிருப்பதாக அமெரிக்கா சந்தேகிக்கின்றது

எனவே அமெரிக்கப் படைகள் இப்பகுதியில் அடிக்கடி விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

குறிப்பாக அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்களில் சிக்கி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அரசாங்கம் அமெரிக்கப்படைகளின் இத்தகைய தாக்குதலுக்கு தொடர்ச்சியாக கண்டனம் வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

0 comments:

கருத்துரையிடுக