siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

மன்னார் ஊடகவியலாளர்கள் மூவர் சீ.ஐ.டி யினரால் விசாரணை

 _
25.07.2012.மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கொழும்பு 4 ஆம் மாடியில் இருந்து மன்னாருக்கு வருகை தந்துள்ள விசேட குற்றத்தடுப்பு பிரிவு (சி.ஐ.டி) பொலிஸார் மன்னார் ஊடகவியலாளர்கள் மூன்று பேரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிவரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூன்று பேருக்கும் தனித்தனியே அவர்களுடைய தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்திய ஒருவர் தாம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் இருந்து கதைப்பதாகவும் கொழும்பு 4 ஆம் மாடியில் இருந்து வருகைதந்துள்ளதாகவும் ஊடகவியலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திற்கு அமைய காலை 10.30 மணி முதல் இரவு 8 மணிவரை குறித்த 3 ஊடகவியலாளர்களும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் கோந்தைப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் விடுதியில் விசாரணைகள் இடம் பெற்றன.

குறித்த அதிகாரிகள் தம்மை 4 ஆம் மாடியில் இருந்து வருகை தந்த சீ.ஐ.டி என அடையாளப்படுத்திய நிலையில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது கடந்த 18 ஆம் திகதி இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் முழுமையான வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதோடு சம்பவ தினம் ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்காட்சிகளையும் சீ.ஐ.டி யினர் பெற்றுக்கொண்டனர்.

ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் காலை 10.30 மணிமுதல் 1.30 மணிவரையுமான 3 மணித்தியாலங்களும், ஊடகவியலாளர்களான ஏ.ரி.மார்க் மற்றும் என்.ஜெ.பெலிஸ்டஸ் பச்சக் ஆகியோர் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையுமான 4 மணி நேரமும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக