புதன்கிழமை, 25 யூலை 2012,இந்தோனேஷியாவில் இன்று இரு
இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை
விடப்படவில்லை.
இந்தோனேஷியாவின் தென்மேற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள சிம்யூலு தீவில் கடலுக்கு
அடியில் 45 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆக
பதிவானது. இந் நிலநடுக்கத்தால் சிம்யூலு தீவை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக குலுங்கின என்றும் ஆனால் உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட வில்லை என அவுஸ்திரேலியா வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று தென்மேற்கு சுமத்ராவிலுள்ள மேற்கு கடற்கரையின் மடோன் தீவுப்பகுதியிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்க அதிர்ச்சியில் ஒரு பலியானார். |
புதன், 25 ஜூலை, 2012
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: ஒருவர் பலி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக