siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

ஆபாசப்படங்களை தொலைபேசியில் வைத்திருந்த இளைஞர்கள் கைது

 _
25.07.2012.வவுனியா நகரப் பகுதியில் ஆபாசப்படங்களை கையடக்கத் தொலைபேசியில் சேமித்து வைத்திருந்த இளைஞர்கள் இருவர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

போக்குவரத்துக்கடமையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை மறித்து சோதனையிட்டதுடன் கையடக்கத் தொலைபேசியையும் சோதனையிட்ட வேளையில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்கள் சேமித்து வைத்திருந்த சம்பவம் வெளியானது.

இதனைத் தொடர்ந்து இரு இளைஞர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள்

0 comments:

கருத்துரையிடுக