siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

பிரான்சில் சூரிய மின் சக்தியில் இயங்கும் விமானத்தின் பயணம் தொடக்கம்

புதன்கிழமை, 25 யூலை 2012
சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட சூரிய மின்சக்தியில் இயங்கும் சோலார் விமானம், தென்மேற்கு பிரான்சில் உள்ள டோலோஸ் விமான நிலையத்தில் தனது பயணத்தை தொடங்கியது. இந்த விமானம் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் வழியாக சென்று, வடக்கு ஆப்ரிக்காவின் மொராக்கோ நாட்டின் தலைநகரத்தை சென்றடையும்.
உருவத்தில் பெரியதாகவும், எடையில் குறைவாகவும் காணப்படும் இந்த விமானம் 12,000 சோலார் செல்களுடன், நான்கு மின்சார இயந்திரங்களை கொண்டுள்ளது.
விமானி பெட்ராண்ட் பிக்கார்ட் இந்த விமானத்தை ஓட்டிச் சென்றார். இவர் ஏற்கெனவே சூடான காற்றை பலூனில் நிரப்பி, அதன் உதவியுடன் உலகை பறந்த படியே சுற்றி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் மற்றொரு விமானியான ஆண்டிரி போர்ஷ்பெர்கும் சென்றார்.
தற்போது சூரிய சக்தியால் இந்த விமானம் சென்றது ஓர் ஒத்திகை போல அமைகிறது. 2014ஆம் ஆண்டில் இந்த விமானத்தை இன்னும் சிறப்பாக உருவாக்கி, சூரிய சக்தியால் உலகம் முழுக்கச் சுற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக