தேன் சேகரிக்கும் தேனீயிடம் இருந்து உதிரும் மகரந்த துகள்களை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியம் அளிக்கும் என்கின்றனர் இங்கிலாந்து டாக்டர்கள். தேனீக்கள் பல பூக்களிலும் அமர்ந்து தேன் சேகரிக்கின்றன. அப்போது, அவற்றின் கால்களில் பூவின் மகரந்த தூள்கள் ஒட்டிக்கொள்கின்றன.
அடுத்த பூவில் உட்காரும்போது, தூள்கள் அந்த மலரில் விழுகின்றன. இவ்வாறு பூ இனப்பெருக்கத்துக்கு தேனீக்கள் உதவிகரமாக இருக்கின்றன. இடம் விட்டு இடம் போகும்போது, தேனீயின் உடம்பில் இருந்து உதிரும் மகரந்த துகள்களுக்கு நோய் நீக்கும் மருத்துவ குணமும் இருப்பதாக இங்கிலாந்து டாக்டர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி டாக்டர் சாரா ஷெங்கர் கூறியிருப்பதாவது:
தீங்கு ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்களால் நமது செல்கள் பாதிக்கப்படுகின்றன. நல்ல செல்கள் அழிந்து தீய செல்கள் அதிகரிப்பதுதான் கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாகின்றன. ஃப்ரீ ரேடிகல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் தடுக்கின்றன. இந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் மலர்களின் மகரந்த துகள்களில் அதிகம் உள்ளன.
மகரந்த துகள்களை காய்கறி அல்லத பழ சாலட்கள் மீது தூவியோ, கேப்சூலாகவோ எடுத்துக் கொள்ளலாம். தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த துகள்கள் சுத்திகரிக்கப்பட்டு பாக்கெட்களில் அடைத்து தற்போது லண்டனில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது.
அலர்ஜி இருப்பவர்கள் தவிர்த்துவிடலாம். மகரந்த துகளின் மருத்துவ குணங்கள் பற்றி விரிவாக ஆய்வு நடத்தினால், அதன் அரிய குணங்கள், நோய்களை தீர்க்கும் குணங்கள் பற்றி தெரியவரும். இவ்வாறு சாரா கூறினார்
0 comments:
கருத்துரையிடுக