| ||||||||
கொடியேற்ற நேரம் ஏற்பட்ட சன நெரிசலைச் சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள் மிகவும் நுட்பமான முறையில் இந்தத் திருட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள். கொடியேற்றம் முடிந்து வெளியே வந்த பின்னரே தமது தங்க நகைகள் திருடு போயுள்ளதை உரியவர்கள் கண்டுள்ளார்கள். சுமார் ஏழு பவுண் நிறையுடைய தாலிக்கொடி ஒன்று மற்றும் முறையே ஒன்றரைப்பவுண்; இரண்டு பவுண் நிறையுடை தங்கச்சங்கிலிகளும் திருட்டுப் போயுள்ளன. இது சம்பந்தமாக ஆலயத்தில் உள்ள தற்காலிக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. |
புதன், 25 ஜூலை, 2012
நல்லூர் கொடியேற்றம்: திருடர்கள் நுட்பமான முறையில் கைவரிசை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக