| ||||||||
இணையக்குற்றங்களைத் தடுத்தல், பாலியல் சம்பந்தமான விடயங்களைத் தவிர்த்தல் போன்ற காரணங்களுக்காக பேஸ்புக்கின் உதவியை நாடும் பொருட்டே அதன் மீதான தடை தளர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக அந்நாட்டு பொலிஸார் பேஸ்புக்குடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ஈரானியர்களால் பேஸ்புக்கில் உருவாக்கப்பட்டுள்ள பாலியல் மற்றும் விபச்சாரம் தொடர்பான பக்கங்களை அகற்றும் நடவடிக்கையையும் ஈரான் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது. ஈரானில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பேஸ்புக் மீது தடை ஏற்படுத்தப்பட்டது. தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அங்கு ஏற்பட்ட அமைதியின்மைக்கு பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற இணையத்தளங்கள் பங்களிப்புச் செய்ததாக குற்றஞ்சாட்டியே ஈரான் பேஸ்புக் மீது தடை விதித்தது. ஈரானிய சமூக ஆர்வலர்கள் பேஸ்புக்கினைப் பயன்படுத்தியே ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குசெய்தமை குறிப்பிடத்தக்கது |
புதன், 25 ஜூலை, 2012
பேஸ்புக் மீதான தடையைத் தளர்த்தும் ஈரான்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக