siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

இந்தியாவில் இருந்து மிகப்பெரிய வர்த்தகப் பட்டாளம் இலங்கையை நோக்கி!

 
புதன்கிழமை, 25 யூலை 2012
இந்திய வர்த்தகர்களை உள்ளடக்கிய ஒரு உயர் மட்டக்குழு, அடுத்த வாரம் இலங்கையில் நடைபெறவுள்ள வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக, இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 க்கு மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் தற்போது 105ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தகம் அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் மூத்த இந்திய அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் என்ற பகுதியினரே இலங்கை வர்த்தகக் கண்காட்சியில்கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

0 comments:

கருத்துரையிடுக