siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 25 ஆகஸ்ட், 2012

தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட பொலிசார்:

25. 08. 2012. by.rajah
கொழும்பில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் சமீபத்தில் கொள்ளை இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. பல பெறுமதிமிக்க அரிய பொருட்கள் களவாடப்பட்டது. இதனை அடுத்து பொலிசாரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். இருப்பினும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து பொலிசார் சிறப்பு அனுமதியைப் பெற்று சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்டுள்ளனர். இதனூடாகவே அவர்கள் சில தகவல்களைப் பெற்றுள்ளனர் எனப் பொலிசார் இன்று(25) தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கலாக சுமார் 8 லட்சம் உரையாடலை ஒட்டுக்கேட்ட பொலிசார் பின்னரே, சூத்திரதாரிகளைக் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தற்போது பொலிசார் கைதுசெய்துள்ள நபர்கள் நூதனசாலை கொள்ளையோடு உண்மையாகச் சம்பந்தப்பட்டவர்களா என்பது சந்தேகமாக உள்ளதாகவும் சில அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்
16:40 25.08.2012