01.10..2012.By.Rajah.ஆப்கானிஸ்தானில் கடந்த 11
ஆண்டுகளாக நடந்து வரும் மோதல்களில், இதுவரை 2000 அமெரிக்க வீரர்கள்
கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா
தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இருப்பினும் அங்கு அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்களும், தாக்குதல்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த தாக்குதல்களில் ஏராளமான நேட்டோ படை வீரர்கள் பலியாகின்றனர். இந்நிலையில் சையத் அபாத் மாவட்டத்தில் ஆப்கான் மற்றும் அமெரிக்க வீரர்களை நோக்கி நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் பலியாயினர். இந்த தாக்குதலில் உயரிழந்தவர்கள் அமெரிக்க வீரர்கள் தான் என்பது உறுதியாகிறது. இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் மட்டும் 2000 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. எதிர்வரும் 2014ஆம் ஆண்டுடன் அமெரிக்க படைகள் வெளியேற திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. |
முகப்பு |