01.10.2012.By.Rajah.இந்த வீடியோவைப் பார்த்தால் இப்படியும் நடக்குமா என்று எண்ணத்தோன்றும். ரஷ்யாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்து இது. சுமார் 60 மைல் வேகத்தில் சென்ற பார ஊர்தி ஒன்று இடதுபக்கமாக திரும்பியுள்ளது. ஆனால் இந்த வீதியில் நேராக வந்த வாகனம் ஒன்று பார ஊர்தியோடு மோதியுள்ளது. அதன் ஓட்டுனர் அப்படியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.
விபத்தின் விசை காரணமாக தூக்கி வெளியே வீசப்பட்ட நபர் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வரும்போது, தனது கைகளால் எதனையோ இறுக்கப் பிடித்துவிட்டார். இதனால் அவர் தூக்கி வீசப்படும்போது வீதியில் விழாமல் தப்பித்துவிட்டார். வீடியோவைப் பாருங்கள் விடயம் புரியும் !