siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 1 அக்டோபர், 2012

அடுத்த 8 ஆண்டுகளில் பெண்களே நிர்வாகம் செய்வர்: ஆய்வில் தகவல்

01.10.2012.By.Rajah.பெண்கள் வீட்டுக்குள் முடங்கி கிடந்த காலம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் ஆண்களுக்கு நிகராக.. ஏன் ஆண்களை விட மேலாகவே பல பணிகளில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் 2020ஆம் ஆண்டுக்குள் பெரும்பாலும் பெண்களே முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை ஏற்படும் என கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
லாய்ட்ஸ் டிஎஸ்பி என்ற நிறுவனம் இங்கிலாந்து, ஜேர்மனி, சீனா ஆகிய 3 நாடுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இது பற்றி கருத்து கணிப்பு நடத்தியது.
அதன் முடிவுகள், பெண்களிடம் நிதி நிர்வாகம் உள்ள 10ல் 9 வீடுகளில் சேமிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் 82 சதவீத வீடுகளில் பண விவகாரங்களை ஆண்களே கவனித்து வருகின்றனர்.
எல்லா வயது பிரிவினரையும் ஆராய்ந்தால் இன்னும் 8 ஆண்டுகளில் அதாவது 2020ஆம் ஆண்டுக்குள் பெண்களே நீண்டகால முக்கிய நிதி முடிவுகளை மேற்கொள்பவர்களாக இருப்பார்கள்.
தற்போது 45 வயதுக்கு உள்பட்ட தம்பதிகள் உள்ள குடும்பங்களில் 52 சதவீதம் வீடுகளில் நீண்டகால நிதி திட்டங்களை பெண்களே முடிவெடுக்கின்றனர்.
45 வயதுக்கு மேற்பட்ட வயதுள்ள தம்பதிகளின் வீடுகளில் ஆண்கள் நிதி நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.
இந்த நிலை இன்னும் 8 ஆண்டுகளில் தலைகீழாக மாறிவிடும். இளம் வயது பெண்கள் தங்களின் அன்றாட செலவுகளை நன்கு நிர்வாகம் செய்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.