siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 18 நவம்பர், 2012

எங்களை கேவலமாக நடத்துகின்றனர்: கர்ப்பிணிகள்?

 
அவுஸ்திரேலியாவில் கர்ப்பிணிகளை கேவலமாக நடத்தும் நிலை உள்ளது என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் கர்ப்பிணிகளின் நிலை குறித்து புள்ளியியல் துறை கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 500 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதில் தெரியவந்த தகவல்களை, அடிலெய்ட்நவ் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, அவுஸ்திரேலியாவில் வேலை செய்யும் இடங்களில் கர்ப்பிணிகளை சக ஊழியர்கள் கேவலமாக நடத்துகின்றனர்.
வேலை செய்யும் இடங்களில் தங்களை மற்றவர்கள் பிரித்து பார்ப்பதாகவும், கேவலமாக நடத்துவதாகவும் கூறியுள்ளனர். இதனால் 29 சதவிகிதம் பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும் கர்ப்பம் அடைந்ததால் பதவி உயர்வு மறுக்கப்படுவதாகவும் பலர் கூறியுள்ளனர். கர்ப்பம் அடைந்தால் தங்களை கேட்காமலேயே பணியை மாற்றி விடுகின்றனர் என்று பலர் கூறியுள்ளனர்.
எனினும், குழந்தை பிறந்த பிறகு 3 மாதங்களுக்குள் 29 சதவிகிதம் பேர் வேலைக்கு மீண்டும் செல்ல தொடங்கி விடுகின்றனர். 28 சதவிகிதம் பேர் ஆறு மாதங்கள் கழித்து வேலைக்கு செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக