siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 18 நவம்பர், 2012

சிறிலங்கா படையினரால் ஏமாற்றப்பட்ட தமிழ்ப்பெண்கள்

       
By.Rajah.சிறிலங்கா இராணுவத்திடம் 109 தமிழ் இளம் பெண்கள் நேற்று பெற்றோரால், கண்ணீருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரத்தில் நேற்று நடந்த நிகழ்விலேயே, சிறிலங்கா இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவில் இணைவதற்காக இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குடியியல் பணிகளுக்காகவே தம்மை சேர்த்துள்ளதாகவும், தமக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்படமாட்டாது என்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாகவும், நேற்று படையில் இணைந்து கொண்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கள மொழிப்பயிற்சி உட்பட மூன்று மாதப் பயிற்சியின் பின்னர், தமது கிராமத்திலேயே தொழில் வழங்கப்படும் என்று இவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவர்களுக்கு நேற்று கிளிநொச்சியில் உள்ள 57வது டிவிசனின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் மேலதிக காலாற்படை பயிற்சிப் பாடசாலையில் மூன்று மாதகால அடிப்படைப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது.

வறுமை, வேலையின்மை காரணமாகவும், 30 ஆயிரம் ரூபா மாதாந்த ஊதியம்,மற்றும் வசதிகள் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் காரணமாகவுமே, தாம் படையில் சேர முன்வந்ததாகவும், இராணுவப் பயிற்சி பெறுவதற்கு தாம் விரும்பமில்லை என்றும் நேற்று படையில் சேர்க்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.

எனினும், அவர்களின் விருப்பத்துக்கு மாறாகவே, மூன்று மாத அடிப்படைப் பயிற்சிக்காக காலாற்படைப் பயிற்சி பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

0 comments:

கருத்துரையிடுக