By.Rajah.அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவன
ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் சில்லறை வர்த்தகத்தில்
முதலிடத்தில் உள்ளது. குறைவான சம்பளம், ஊழியர்களை சரியாக நடத்தாதது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கறுப்பு வெள்ளி தினமான வருகிற 23ஆம் திகதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த வால்மார்ட் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் பாரம்பரியமாக கறுப்பு வெள்ளி தினத்தில் தான் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருள்களை மக்கள் வாங்கத் தொடங்குவார்கள். எனவே அந்தநாளில் விற்பனை களைகட்டும். இந்த சூழ்நிலையில் நிறுவனத்துக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்பு வெள்ளி நாளை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஊழியர்கள் தெரிவு செய்துள்ளனர். கலிபோர்னியா, வாஷிங்டனில் நவம்பர் 21ஆம் திகதி முதலே வால்மார்ட் சேமிப்புக் கிடங்கு, கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்குச் செல்ல மாட்டார்கள். அதற்கு அடுத்த நாள்களில் சிகாகோ, நியாமிஸ தலாஸ், லாஸ் ஏஞ்சலீஸ் ஆகிய நகரங்களையும் வேலைநிறுத்தம் எட்டும். மொத்தம் 1,000 கடைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்தப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று வால்மார்ட் ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. தங்களுக்கு நிறுவனம் இழைக்கும் அநீதிகளை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் விளக்கப் போவதாகவும் வால்மார்ட் ஊழியர்கள் கூறியுள்ளனர். |
ஞாயிறு, 18 நவம்பர், 2012
வேலை நிறுத்த போராட்டம் நடத்த வால்மார்ட் ஊழியர்கள் முடிவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக