| கொலிவுட்டில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. |
|
ரஜினி, கமல், அஜித், கார்த்திக் என்று முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்த ரம்பா
சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து திரைத்துறையிலிருந்து விலகினார். சிரஞ்சீவி, பரிசுரி பிரதர்ஸ், இயக்குனர் சித்திக் ஆகியோரிடம் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் என்பவரை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்குனராக அறிமுகப்படுத்துக்கிறார். இதில் நாயகனாக நகுல் நடிக்கிறார். இப்படத்தை காதல் கலந்த நகைச்சுவை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும். தற்போது நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களின் தெரிவு நடைபெற்று வருகிறது. |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
ஞாயிறு, 2 செப்டம்பர், 2012
கொலிவுட்டில் படம் தயாரிக்கும் ரம்பாவின் அண்ணன்
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
செய்திகள்
நீ தானே என் பொன் வசந்தம் இசை வெளியீடு கோலாகலம்
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
செய்திகள்
| நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கான இசை வெளியீடு நேற்று கோலாகலமாக நடந்தது. |
|
கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான 'நீ தானே என் பொன் வசந்தம்' படத்தின்
இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்தது. விழா நாயகன் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் 'நீ தானே என் பொன் வசந்தம்' பட பாடல்கள் உருவான விதம் பற்றி பேசினர். கௌதம் விரும்பிக் கேட்ட பாடல்களை இளையராஜா பாட, அரங்கம் அதிர்ந்தது. திரையுலகினர் உள்ளிட்ட ரசிகர்கள் பாடல்களை ரசித்து கை தட்டினர். இளையராஜா தலைமையில் ஐரோப்பிய இசைக்கலைஞர்களின் இசையில் 'ராசாவின் பாடல்கள்' ஒலித்தன. நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் இசைக்குறுந்தகடை இயக்குனர் கே.பாலச்சந்தர் வெளியிட, சூர்யா பெற்றுக்கொண்டார். விழாவில் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, சுந்தர்ராஜன் உள்ளிட்ட இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய கொலிவுட் பிரபல இயக்குனர்கள் தங்களின் பட உலக அனுபவங்களைக் கூறி இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர். |
ரஜினி, கமலுடன் மீண்டும் நடிப்பேன்: ஸ்ரீதேவி
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
இணைய செய்தி
| நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன் என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். |
|
கொலிவுட்டில் தொடங்கி பாலிவுட்வரை முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து
கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி ஊடகத்தினரிடம் கூறுகையில், இத்தனை காலம் நடிக்காமல் இருந்ததற்குக் காரணம், என் மகள்கள் இருவரும் சின்ன குழந்தைகளாக இருந்தார்கள். அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. தற்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன், என்றார். ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீதேவி, நிச்சயமாக நடிப்பேன். இரண்டு பேரையும் சமீபத்தில் கூட சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நியாயமாக இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றும் பொருத்தமான சூழல் அமைய வேண்டும் எனவும் கூறியுள்ளார் |
மலேசிய நண்பர்களோடு பிறந்தநாளை கொண்டாடிய மோனிகா
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
இணைய செய்தி
| கொலிவுட்டில் நஞ்சுபுரம், வர்ணம் மற்றும் குறும்புக்காரப் பசங்க படங்களில் நடித்தவர் 'அழகி' மோனிகா. |
|
தற்போது மலையாளப் படவுலகிலும் நன்கு அறியப்பட்ட நாயகியாக '916' என்கிற படத்தில்
நடித்து வருகிறார். சமீபத்தில் மாயன் டிரீம் சிட்டியினை தொடங்கி வைக்க மலேசியா சென்றிருந்தார் மோனிகா. அங்கேயே அவரது மலேசிய ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மோனிகாவைத் தங்களுடன் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்று வற்புறுத்தினர். அதற்கு மோனிகாவும் சம்மதிக்கவே பிறந்த நாளை அமர்க்களமாக அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வட்டம் கொண்டாடி மகிழ்ந்தது. இது குறித்து மோனிகா கூறும் போது, மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதே பெரிய சந்தோஷம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அவர்கள் ஆவலாக இருந்தார்கள். அவர்களது சந்தோஷத்திற்காக நானும் சம்மதித்தேன். எனது பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடியதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாது என்றார். |
காலி சிறையில் தாக்கப்பட்ட கணவனைக் காப்பாற்றும்படி ஜனாதிபதிக்கு மனைவி கடிதம்
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
இணைய செய்தி
02.09.2012.BY.rajah.காலி சிறைச்சாலையில் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் காலி கராபிட்டிய
வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட தனது கணவர்
சுந்தரம் சதீஷ்குமாரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை ௭டுக்கும்படியும் காலி சிறைத்
தாக்குதல் குறித்து நடவடிக்கை ௭டுக்கும் படியும் சதீஷ்குமாரின் மனைவி கவிதா
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில்
மேலும் கூறப்பட்டுள்ளதாவது,௭னது கணவர் சுந்தரம் சதீஷ்குமார் 2008 ஆகஸ்ட் 15 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ௭துவித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். புதிய மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் 2012 ஆகஸ்ட் 21 ஆம் திகதி காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவென காலி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவருக்கு ௭துவிதமான சுகயீனமும் இருக்கவில்லை. நல்ல சுகதேகியாகக் காணப்பட்டார். 2012 ஆகஸ்ட் 23 ஆம் திகதி காலி பொலிஸார் காலி சிறைச்சாலைக்கு வரும்படி ௭னக்கு தகவல் அனுப்பினர். ௭னது ௭ட்டு வயது மகனுடன் காலி பொலிஸ் நிலையம் சென்றேன். அவர்கள் ௭ன்னை சிறைச்சாலைக்கு செல்லும்படி கேட்டனர். நான் அங்கு சென்றேன். சிறைச்சாலை அதிகாரி ௭ன்னை ௭னது கணவர் காலி கராபிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
௭ன்ன நடந்ததென நான் அவரிடம் கேட்டேன். அவர் அதற்கு வாயே திறக்கவில்லை. கராபிட்டிய வைத்தியசாலைக்கு நான் சென்று ௭னது கணவரைப் பார்த்து அதிர்ந்து போனேன். மூக்கிலும் வாயிலும் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. நானும் மகனும் ஐயோ, ஐயோ ௭ன்று அழுதோம். அவர் ௭துவித அசைவுமின்றி இருந்தார். தலையிலும் வலது காலிலும் பெரிய கட்டுகள் போடப்பட்டிருந்தன. வவுனியா சிறைச்சாலையிலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். அதே பாணியில் ௭னது கணவரும் தாக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் ௭னது கணவர் காலி சிறையில் தனக்கு பிரச்சினை இருப்பதாக கொழும்பு நீதிமன்றத்தில் மூன்று தடவைகள் தெரிவித்துள்ளார். இதே விடயத்தை புதிய மகஸின் சிறை அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து கவலைப் படாமல் அவரை காலி சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
௭னது கணவரது உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை ௭டுக்கும்படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
யுத்தத்தின் பின்னர் ஐந்து நாட்களுக்கு ஒருவர் ௭ன்ற ரீதியில் காணாமல் போகும் சம்பவங்கள்
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
இணைய செய்தி
02.09.2012.BY.rajah.இலங்கையில் யுத்தத்தின் பின்னர் ஐந்து நாட்களுக்கு ஒருவர் ௭ன்ற ரீதியில் காணாமல்
போதல் சம்பவங்கள் தொடர்வதாக கிறவுண்ட் வியூவ்ஸ் ௭ன்னும் இணையத்தளம் இலங்கை ஆங்கில
ஊடகங்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. 2012 ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம்
வரையில் 57 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உலக காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற போராட்டமொன்றில் கலந்து கொண்டோரி டம் இந்தத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்கள் இந்தப் போராட் டத்தில் கலந்து கொண்டனர். வவுனியாவைச் சேர்ந்த வசந்தமாலா ௭ன்ற 32 வயது பெண், தம்மை குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை செய்து வருவதாக உறவினருக்கு செல்லிடப் பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார். ௭னினும்.
வசந்தமாலா காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப் பாடு செய்யச் சென்ற அவரது பெற்றோரின் முறைப்பாடு முதலில் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை ௭னத் தெரிவிக்கப்படுகிறது. ‘உங்களது மகள் யாருடனாவது ஓடி யிருப்பாள்’ ௭ன பொலிஸார் தெரிவித்து முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை ௭ன பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை ௭ன பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் 56 பேரில் 18 பேரே உண் மையில் காணாமல் போயுள்ளதாகத் தெரி வித்துள்ளது. சர்வதேசத்தில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற் படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது
ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு கோழி, ஆடுகள் ஒப்படைப்பதற்கான தடை நீக்கம்
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
இணைய செய்தி
முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு கோழிகள், ஆடுகளை பக்தர்கள்
ஒப்படைப்பதற்கு நேற்றுக்காலை பொலிஸார் விதித்திருந்த தடை சிறிது நேரத்தில்
ஜனாதிபதியின் இந்து சமய இணைப்பாளர் சிவஸ்ரீ பாலரவிச்சங்கர சிவாச்சாரியாரின்
தலையீட்டை அடுத்து நீக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பா ளர் சிவஸ்ரீ பாலரவிச் சங்கர சிவாச்சாரியார் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்குச் சென்று வேள்வி மற்றும் மிருக பலி தொடர்பாக கலந்துரையாடலொன்றை நடத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தர்மகர்த்தா காளிமுத்து சிவபாதசுந்தரம் மற்றும் சிலாபம் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புனித கபிலவஸ்து இலங்கையின் முக்கிய விகாரைகளில் மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுவதால் ஜனாதிபதி மிருக பலியை இடை நிறுத்தும்படி கோரியுள்ளதை ஏற்று மிருகபலியை பின் போடுவதாக இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிர்வாகத்துறை உறுதியளித்தது.
அத்துடன் இன்றைய தினம் பக்தர்கள் தமது நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காக ௭டுத்து வரும் கோழி, ஆடுகளை ஆலயம் பொறுப்பேற்றுக் கொள்ளுமெனவும் இந்தக் கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது. இருந்தும் நேற்றுக் காலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஒப்படைக்கவென பக்தர்கள் ௭டுத்து வந்த ஆடு, கோழிகளை பொலிஸார் ஆலயத்துக்குள் ௭டுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து ஆலய நிர்வாகம் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியாருடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தது. சிவாச்சாரியார் உடனடியாக பொலிஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் ௭ட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்து விளக்கியதும் பொலிஸார் தடையை நீக்கினர். நேற்று ஆலயத்தில் மிருக பலி இடம்பெறவில்லை. ௭னினும் பூஜைகள் வழமை போல நடைபெற்றன.

காத்தான்குடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினரின் வாகனம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
புகைப்படங்கள்
ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012,BY.rajah.
காத்தான்குடியிலுள்ள வாகனத் திருந்தும் நிலையமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்படி வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வாகன திருத்த நிலையத்தின் உரிமையாளரால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வாகன திருத்த நிலையத்தின் உரிமையாளரால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆண்ட்ராய்ட் கைபேசிகளை முழுமையாக பக்கப் செய்வதற்கு
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
இணைய செய்தி
| ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, BY.rajah. |
| தற்போது ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளின்
பாவனை அதிகரித்துள்ளது. அதில் சேமிக்கப்படும் தகவல்கள் அப்பிளிகேஷன்கள்
அதிகரித்துச் செல்லும் போது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்ட்ராய்ட் டிவைஸை பக்கப் செய்ய
வேண்டிய நிலை உருவாகலாம்.
ஏற்கனவே ரூட்டிங்க் செய்து அல்லது Bootloader Unlock மூலம் பக்கப் செய்வது
அனைவருக்கும் ஏற்ற முறையல்ல. ஏனெனில் சிறிய பிழை ஏற்பட்டால் கூட முழுமையாக டிவஸை
ரீஸெட் செய்தே மீண்டும் பயன்படுத்த முடியும். இவற்றுக்கெல்லாம் தீர்வாக Gigadroid என்ற பிரபல ஆண்ட்ராய்ட் கருத்துக்கள டெவெலப்பர்கள் Ultimate Backup Tool ஒன்றை உருவாக்கியுள்ளனர். விண்டோஸில் இயங்கும் இந்த டூலைக்கொண்டு ஆண்ட்ராய்ட் 4.0 டிவைஸ்களை முழுமையாக பக்கப் செய்து பின்னர் ரீஸ்டார் செய்யவும் முடியும் என்கிறார்கள். Galaxy Nexus, Galaxy S II தொலைபேசிகளிலும் பரிசோதனை செய்துள்ளனர். Ultimate Backup Tool பின்வரும் முறைகளில் பக்கப் செய்கின்றது. • Backup all without system apps. • Backup all with system apps. • Backup app and device data. • Backup apps. • Backup device shared storage/SD card contents. முழுமையாக பக்கப் செய்ய முன்னர் உங்கள் ஆண்ட்ராய்ட் டிவைஸில் setting இல் இருக்கும் Developer option சென்று USB debugging ஐ தெரிவு செய்யுங்கள். அதன் பின்னர் Desktop Backup password ஆப்ஸனில் பாஸ்வேர்ட் தந்து சேமிக்குமாறு அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு செய்த பின்னர் கணனியில் ஆண்ட்ராய்ட் டிவைஸின் யுஎஸ்பியை செருகியதும் கிடைக்கும் ஸ்கீரினில் பக்கப்பை செயற்படுத்த அல்லது நிறுத்துவதற்கு முடிகின்றது. |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச்செல்ல இலங்கை தீர்மானம்
ஞாயிறு, செப்டம்பர் 02, 2012
இணைய செய்தி
ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, BY.rajah.
கடந்த மார்ச்சில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றியமையை அடுத்து இலங்கை குறித்த தீர்மானத்தை ஆட்சேபித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தது.
இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஆணைக்குழு அமர்வில் ஆராயப்படவுள்ளது.
இதன்போது தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச்செல்வது என்று இலங்கை தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் முன்னேற்ற அறிக்கை, ஐக்கிய நாடுகளின் இணையத்தளத்திலும் கடந்த வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரவிநாத் ஆரியசிங்க, கடந்த வாரங்களி;ல் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளித்த மற்றும் எதிர்ப்பு வெளியிட்ட அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைக்குறித்து விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு செல்லவுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)