| செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| சுவிட்சர்லாந்தின் வாட் மாநிலத்தில்
கடந்த மூன்று மாதத்தில் இரண்டு முறை சிறைக்கைதிகள் தப்பியோடி விட்டனர்.
ஒர்பேயில் உள்ள குரோய்ஸி சீர்திருத்த மையத்தில் மூன்று அறைகளில்
அடைக்கப்பட்டிருந்த ஆறு கைதிகள் ஞாயிறு அதிகாலை தப்பிச் சென்றனர். இவர்களில் நால்வரை சிறையதிகாரிகள் திரும்பவும் பிடித்து சிறையில் அடைத்தனர். இரண்டு பேரைத் தேடி வருகின்றனர். இத்தகவலை வாட் மாநிலத்தின் தகவல்தொடர்பு துறையின் அரசுச் செய்திக் குறிப்பு தெரிவித்தது. தப்பிச் சென்றவர்கள் சிறைக் கம்பிகளைக் கைவினைக் கருவி கொண்டு அறுத்துத் தப்பிச் சென்றனர். கண்காணிப்பு கமெராவின் உதவியுடன் நான்கு பேர் போனதைப் பார்த்த சிறை அதிகாரிகள் அவர்களின் பாதையை அடியொற்றிச் சென்று பிடித்துவிட்டனர். இதற்கு ராணுவ ஹெலிகப்டரும் காவல்துறையும் இவர்களுக்கு உதவியாக இருந்தது. தப்பிச் சென்றவர்களில் நான்கு பேர் அருகேயுள்ள சுச்சி கிராமத்தில் ஒளிந்திருந்தனர். மற்ற இருவர் கடந்த இடம் தெரியவில்லை. யூலை மாதம் 30ம் திகதி, அல்பேனியா மற்றும் கொசோவா நாட்டு குடிமக்கள் ஐந்து பேர் சிறையின் கூரையைப் பெயர்த்துத் தப்பிச் சென்றனர். இவர்களை இன்னும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 23 அக்டோபர், 2012
வாட் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்
3 வீரர்களுடன் இன்று விண்வெளிக்கு பயணமாகிறது சோயூஸ் விண்கலம்
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்
| செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூன்று
வீரர்களுடன் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து
பூமிக்கு மேல் 410 கி.மீ உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், பிராண வாயு போன்றவை ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்கலங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் சார்பில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ரஷ்ய, ஜப்பானிய வீரர்கள் இதில் பயணித்தனர். இதற்கிடையே சோயூஸ் விண்கலம் மூலம் மூன்று விண்வெளி வீரர்கள் இன்று விண்வெளிக்கு பயணமாகின்றனர். விண்வெளிக்கு புறப்படும் அமெரிக்க வீரர் போர்டு விண்கலத்தை இயக்கும் விமானியாக செல்கிறார். சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை இந்த நிலையத்திற்காக ஆறு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
| முகப்பு |
மெக்காவில் கட்டிடமொன்றில் தீ விபத்து: 13 பேர் காயம்
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்
| செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில்
கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.
ஹஜ் பயணம் மேற்கொண்ட இந்தியா மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள்,
மெக்காவில் உள்ள 9 மாடிக் கட்டிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இக்கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள அறை ஒன்றில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. அங்கிருந்த 179 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த 13 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. |
| முகப்பு |
8 வயது சிறுவன் இறந்து விட்டதாக தவறுதலாக அறிவித்த மருத்துவமனை
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்
| செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
|
அமெரிக்காவில், 8 வயதான தங்கள் மகன் இறந்துவிட்டதாக தவறாக அறிவித்த
மருத்துவ மனைக்கெதிராக பெற்றொர் வழக்குத் தாக் கல் செய்த சம்பவம்
நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தைச் சேர்ந்த பிங் டோர்ஸி, ஷீனா லேன் தம்பதி உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஜேலன் டோர்ஸி என்ற தங்களது 8 வயது மகனை அங்குள்ள மேர்ஸி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இங்கு சிகிச்சை பெற்ற அந்த சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உடலிலும், கண்களிலும் அசைவுகள் காணப்படுவதாக உறவி னர் கள் தெரிவித்ததையும் அலட்சியம் செய்து சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித் திருந் தனர். இந்நிலையில், சிறுவனின் இருதயம் இயங் குவதை உறுதிப்படுத்த ‘அல்ட்றா சவுண்ட்’ பரிசோதனையை மேற்கொள்ள உற வி னர்கள் நிர்ப்பந்தித்ததையடுத்து, சிறு வன் இறந்துவிட்டதாக மருத்துவர் களால் தெரிவிக்கப்பட்டு 5 மணி நேரம் கழித்து சிறுவனது இருதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது கண்டறியப் பட்டது. இந்நிலையில் சிறுவனின் பெற்றோரான பிங் டோர்ஸியும், ஷீனா லேனும் மேற்படி மருத் து வமனை மீது வழக்குத் தாக்கல் செய்து ள் ள னர். |
| முகப்பு |
இணைந்து வாழும் பண்பாடு தேவை: ஜேர்மனி ஜனாதிபதி
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்
| செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
| தலைநகர் பெர்லினில் நடந்த
கூட்டத்தில் ஜனாதிபதி ஜோவாக்கீம் கௌக் மக்களுக்கு மத்தியில் பேருரை ஆற்றினார்.
அலெக்ஸாண்டர் பிளாட்ஸ் அருகே நகர்மன்றத்தில் நடந்த கூட்டத்தில்
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெர்லின் மாநகர் மேயர் கிளாஸ் வோவெரீட் தலைமை வகித்தார். அங்கு ஜனாதிபதி கௌக் சர்வசமய நல்லிணக்கம் குறித்து தன் முதல் உரையை ஆற்றினார். அப்போது அவர் பிறரது சமயக் கொள்கைகளைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக ஒருவர் தமது சமயக் கொள்கைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். இவ்வாறான தெளிந்த நல்லறிவு இருந்தால் ஒருவர் மற்றவருடைய பண்பாட்டை மதித்து அவருடன் இணக்கமாக வாழ முடியும். இணைந்து வாழும் பண்பாடு இன்றைய மனித இனத்தின் இன்றியமையாத் தேவை என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார். பின்பு நியு கோல்ன் மாவட்டத்தில் உள்ள மசூதிக்கு சென்று இளைஞர்கள் நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அக்கூட்டத்திற்கு வந்திருந்த பல இளம் தொழிலதிபர்களின் வர்த்தக மையத்தையும் அவர் பார்வையிட்டார். |
| முகப்பு |
குரங்குகளால் வளர்க்கப்பட்டதாக பெண்ணொருவர் எழுதிய புத்தகம்
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்
| செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,By.Rajah. |
| பிரித்தானியாவில் வசிக்கும்
மரினா சப்மான் என்ற பெண் தான் குரங்குகளால் வளர்க்கப்பட்டதாக அவரது புத்தகத்தில்
எழுதியுள்ளார்.
கடந்த 1950ம் ஆண்டு பிறந்த மரினா, 5 வயது சிறுமியாக இருந்த போது கடத்தல்
காரர்களால் கடத்தப்பட்டு காட்டில் விடப்பட்டார். அப்போது குரங்குகளுக்கு மத்தியில் வாழ்ந்ததாகவும் பறவைகளையும் முயல்களையும் பிடிக்க கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மரினா கூறியதாவது, பின்னர் வேட்டைக்காரர்கள் தன்னை ககுடா நகரிலுள்ள விபசார விடுதியொன்றில் விற்றதாகவும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறினார். அதன் பின் பல வருடங்களை வீதிகளில் கழித்த அவர் சில சமயங்களில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. தொடர்ந்து சுமார் 15 வயதில் கொலம்பிய குடும்பமொன்றில் வீட்டுப் பணியாளராக பணியாற்றிய போது, மரினா லுஸ் ௭ன பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நான் வீட்டுப்பணியாளராக பணியாற்றிய கொலம்பிய குடும்பம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பிரித்தானிய பிரட்போர்ட்டில் 6 மாத காலம் தங்கிய போது அவர்களுடன் பிரித்தானியாவுக்கு வந்தேன். பின்னர் தேவாலயமொன்றில் ஜோன் சப்மான் என்பவரை சந்தித்து காதல் கொண்டேன். 1977ம் ஆண்டில் அவருடன் திருமண பந்தத்தில் இணைந்தேன். தற்போது எனக்கு இரு மகள்மார் உள்ளனர். தென் அமெரிக்காவில் நிலவும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் மோசமான நிலைப்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எனது வாழ்க்கை கதையை புத்தகமாக ௭ழுதியுள்ளேன். மேற்படி கதையை தொலைக்காட்சி ஆவணப்படமாகவும் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன் என்றார். |
மதுபான போத்தல்களாலும் கற்களாலும்
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்
செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,By.Rajah.
மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படைஇலங்கைக் கடற்படையினர் தாம் தமிழக மீனவர்களை தாக்குவதில்லை என கூறிவந்தாலும் இன்றும் ராமேஸ்வர மீனவர்களை தாக்கியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 600க்கு மேற்பட்ட மீனவர்கள் 50க்கு மேற்பட்ட படகுகளின் மீன்பிடிக்க இன்று சென்றுள்ளனர்.
தனுஷ்கோடி- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர், மீன்வர்கள் மீது கற்களையும், வெற்று மதுபானப் போத்தல்களையும் வீசி தாக்கியுள்ளனர்.
மேலும் மீனவர்கள் வைத்திருந்த மீன்களையும், பறித்து விரட்டியடித்தனர் என்று கரைக்கு திரும்பியவர்கள் புகார் கூறியுள்ளனர் என தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் மட்டக்களப்பிற்கு விஜயம்
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்
செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012.By.Rajah.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார்.
இவ்விஜயத்தின் போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 15ஆம் விடுதியில் செயற்படும் வலது குறைந்தோருக்கான சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து,வைத்தியசாலையின் விடுதிகள் சிலவற்றையும் தூதுவர் பார்வையிட்டார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தனுடன் கலந்துரையாடினார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த புதிய அமெரிக்க தூதுவர், ஒல்லாந்தர் கோட்டையையும் பார்வையிட்டார். மட்டக்களப்பில் அமெரிக்கத் தூதுவர் இன்றும் நாளையும தங்கியிருந்து பிரதிநிதிகள் பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

நடப்பு அரசியல் சூழ்நிலை இலங்கை-இந்திய
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்
ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் வெளியிட்ட கருத்தினைத் தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தீர்வுத் திட்டமான 13ம் அரசியல் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்தி வருகிறார்.
எனினும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 13ம் திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வினை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ த டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் இரண்டு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பது, இந்திய அரசாங்கத்தை அதிர்சியிலும், கோபத்திலும் ஆழ்த்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனை அண்மையில் ஜனாதிபதி இந்தியா சென்றிருந்த போது, பிரதமர் மன்மோகன் சிங் சீர் செய்ய முற்பட்ட போதும், அது சாத்தியமாகவில்லை என்று த டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்தியாவின் பரிந்துரையை நிராகரிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றமையானது, இந்தியாவை கோபத்தில் ஆழ்த்தி இருப்பதுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது பாரிய விரிசலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து புலம்பெயர் தமிழர்கள் நிபந்தனை
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்
செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் நிபந்தனை விதித்து வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுயாட்சி அதிகாரம், ஈழத் தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளல், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துதல் போன்ற நிபந்தனைகளை புலம் பெயர் தமிழர்கள் விதித்துள்ளதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என புலம் பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளனர்.
நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட சாத்தியமில்லை என உலக தமிழர் அமைப்பின் பணிப்பாளர் பஞ்சலிங்கம் கந்தய்யா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் விரைவில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் என விடுக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)