siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 31 அக்டோபர், 2012

Nexus 4 கைப்பேசிகளை அறிமுகப்படு​த்துகின்றது Google

புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012, By,Rajah.{காணொளி}
பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை மக்களுக்கு வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது தனது புதிய தயாரிப்பில் உருவான Google Nexus 4 ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது. Android OS மற்றும் Android 4.2 Jelly Bean ஆகிய இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பதிப்புக்களாக வெளிவரும் இக்கைப்பேசிகள் 4.7 அங்குலமுடைய தொடுதிரை வசதியினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுவதுடன் இதன் Resolutionஆனது 1280 x 768 Pixelsகளாக அமைந்துள்ளது.
மேலும் 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடியதும் Qualcomm Snapdragon S4 தொழில்நுட்பத்தில் உருவானதுமான Processor-னைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 2GB RAM - இனையும் கொண்டுள்ளது.
இவற்றுடன் சேமிப்பு கொள்ளவு 8GB மற்றும் 16GB - இனைக்கொண்டு இரண்டு வகைகளைாக கிடைக்கின்றது.
இவை தவிர 8 Mexapixels உடைய பிரதான கமெரா பொருத்தப்பட்டுள்ளதுடன், வீடியோ அழைப்புக்களுக்காக 1.3 Mexapixelsஉடைய துணைக் கமெரா ஒன்றினையும் கொண்டுள்ளது.


புகைப்படம் எடுப்பதற்கா​க அறிமுகமாகு​ம் நவீன கருவி

 புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012, By.Rajah.{காணொளிபுகைப்படங்கள்}
கூகுள் நிறுவனமானது எந்தவொரு திசையிலும் புகைப்படம் எடுக்கக்கூடிய Photo Sphere எனும் கருவியினை அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகின்றது. இச்சாதனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளமான அன்ரோயிட்டின் புதிய பதிப்பாக வெளிவரவுள்ள Android 4.2 Gelly Bean இயங்குதளத்தினை அடிப்டையாகக் கொண்ட Nexus 4, Nexus 10 மற்றும் புதிய பதிப்பான Nexus 7 ஆகிய Tablet போன்றவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் வெவ்வேறு திசைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றிணைத்து பெரிய அளவுடைய புகைப்படமாக மாற்றியமைக்கவும் முடியும்.
அத்துடன் கூகுள் நிறுவனமானது இந்த நவீன சாதனம் தொடர்பான காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்! ???


Wednesday 31 October 2012By.Lovi.மாம்பழத்தில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட்டிகை கலந்து குடித்தால் தொண்டை சம்பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.

மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டை குரலும் இனிமையாக மாறும். மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு கரகரப்பு சளி நீங்கும். மா இலையை பொடியாக்கி பற்களில் தேய்த்து வர பல்லில் உள்ள காரை மறைந்து பற்கள் முத்து போல ஜொலிக்கும்.

மாம்பழ மலமிளக்கியாக செயல்படுவதுடன் முகத்தில் உள்ள பருக்களையும் போக்ககூடியது. சூடு உடல் கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பாலை பருகினால் சூடு பிடிக்காது.

ஒரு டீஸ்பூன் மாங்கொட்டை பொடியுடன் ஒரு துளி நெய் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி தொல்லை இருக்காது. நகத்தின் மேல் இருக்கும் வெள்ளை புள்ளிகள் நக வெட்டு தோலில் உள்ள வெள்ளை திட்டுகளும் நீங்கிவிடும்.

மா மரத்தின் பட்டையில் வடியும் பாலை கால் வெடிப்பில் தடவினால் வெடிப்பு மறைந்து பாதம் பட்டு போல் மாறிவிடும்..

ஒரு சிட்டிகை மா மர பிசினை ஒரு டம்ளர் மாம்பழ ஜீஸீடன் கலந்து சாப்பிட்டால் தேமல் தழும்பு படை நீங்கி தோல் மிருதுவாகும்

தூய்மையான இரத்ததிற்கு கரிலாங்கண்ணி!

          
Wednesday 31 October 2012By.Lovi.இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.

* இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.

* கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.

* கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும்.

* ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

* இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும்.

* மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு.

* குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும்.

* கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.

* தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.

* கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர்.

இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். கண்ணுக்கு மை அழகு என்ற பழமொழி, அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கயத்துக்கும் சிறந்ததாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்

செவ்வாய், 30 அக்டோபர், 2012

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் மன ஓய்வு!'?

         
Wednesday 31 October 2012 .By.Lovi. ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். இது நோயை விரட்டி ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கிறது. எனவே  எவ்வாறு ஓய்வு எடுப்பது என்று தெரிந்துக்கொள்ளவது மிகவும் அவசியம்.
* காமெடியான படங்கள், சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.
* விருப்பப்பட்ட பாடலைக் கேட்பது, ஒரு சில பாடலுக்கு நடனம் புரிதல் போன்றவையால் எத்தகைய பிரச்சனைகளையும் சந்திக்கும் அளவுக்கு மனம் பக்குவம் அடையும்.
* அதிகாலையில் 5 மணிஅளவில் வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும்.
* இரவு உறங்க செல்வதற்கு முன் முழு தினமும் நடந்த நல்லவை தீயவை என்று அனைத்தையும் மனக்கண்முன் கொண்டு வருவதன் மூலம் மனம் முற்றிலும் தூய்மைப்பெற்று ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
* யோகா செய்தல் மிகவும் நல்லது. யோகா வகுப்புகளுக்கு செல்ல இயலாத நிலையில், வாரம் ஒரு முறை யோகா புத்தகம் அல்லது சிடி போட்டு பார்த்து செய்து வந்தால் மனம் உடல் இரண்டும் நல்ல ஓய்வு நிலையை அடையும் வாய்ப்புகள் இருக்கின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனமே, எனவே உங்கள் மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு உங்கள் கையில் என்பதை மனதில் கொள்ளுங்கள்

314 நாட்கள் நடந்து வந்து ஹஜ் பயணத்தை நிறைவு செய்த யாத்திரிகர்

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah{.காணொளி,புகைப்படங்கள்}
போஸ்னியாவை சேர்ந்த யாத்திரிகர் ஒருவர், 5650 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று ஹஜ் பயணத்தை நிறைவு செய்துள்ளார். போஸ்னியாவை சேர்ந்த செனாத் ஹெட்சிக்(வயது 47) என்பவர் பவோனிசி நகரிலிருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 15 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 கிலோ எடை கொண்ட உடைமைகளுடன் ஹஜ் பயணம் மேற்கொண்டார்.
314 நாட்கள், 5650 கிலோ மீற்றர் தூரம் நடந்து செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளை கடந்து தற்போது சவுதி அரேபியா வந்து சேர்ந்துள்ளார்.
வரும் வழியில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளார் செனாத். இவர் பயணம் மேற்கொண்ட டிசம்பர் மாதத்தில் பல்கேரியா நாட்டில் குளிர் மைனஸ் 35 டிகிரி என்று இருந்ததால், நிலையை சமாளிக்க முடியவில்லை.
அத்துடன் சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால், அந்நாட்டை கடப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
கடைசியில் தான் நினைத்தபடி சவுதி அரேபியா வந்து, ஹஜ் பயணத்தை முடித்து கொண்டார்.


நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தூங்கிய விமானிகள் ???

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானிகள் இருவர் தூங்கி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானிகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன. இந்நிலையில் விமானத்தின் முதன்மை விமானி, கழிப்பறைக்கு செல்வதற்காக, சக விமானிகளிடம் விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
சில நிமிடங்கள் கழித்து முதன்மை விமானி, விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு மற்றொரு விமானியிடம் பேச முயன்றார். அவரிடமிருந்தும் பதில் வரவில்லை. மூன்றாவது விமானியை தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.
நிலைமையை உணர்ந்து கொண்ட கேப்டன் விமானிகள் அறைக்கு சென்று பார்த்த போது, விமானிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அதுவரை நடுவானில் விமானம் பறந்து கொண்டே தான் இருந்தது. கேப்டன் எழுப்பியதும் உரிய இடத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போதும் மூன்றாவது விமானி தூங்கி கொண்டே தான் இருந்தார்.
இவர்களது பெயரை பிரிட்டன் விமானத்துறை வெளியிட மறுத்து விட்டது. இது குறித்து விமானிகள் சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகையில், விமானம் பறக்கும் போது அசதி காரணமாக விமானிகள் தூங்குவது சகஜம் தான் என்றனர்.
விமானிகளின் இந்த பாதுகாப்பற்ற செயல் குறித்து விமான அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம்

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பொருட்களை சுமந்தபடி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி உள்ளது டிராகன் விண்கலம். விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக, விண்வெளியில் மிதக்கும் சர்வதேச ஆய்வு மையத்துக்கு பொருள்களைக் கொண்டு செல்லும் பணியை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்தது.
சிஆர்எஸ்-1 என்ற இத்திட்டத்தில் “டிராகன்” எனப் பெயரிடப்பட்ட விண்கலம் 450 கிலோ எடையுள்ள பொருள்களைச் சுமந்தபடி விண்வெளி நிலையத்துக்குச் சென்றது.
அங்கு பொருள்களைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து மாதிரிகள், ஆய்வு முடிவுகள், வன்பொருள்கள் உள்ளிட்ட 758 கிலோ எடையுள்ள பொருள்களைச் சுமந்தபடி வெற்றிகரமாகத் திரும்பியது டிராகன்.
பசிபிக் கடலில் பாராசூட் உதவியுடன் இறங்கிய இந்த ஆளில்லா விண்கலம் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் மீட்கப்பட்டது.

இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது!

         
Tuesday 30 October 2012 .By.Rajah.
அரசாங்கத்தின் உயர் பதவிகள் பலவற்றுக்கு இராணுவத்தினரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றத் உறுப்பினர் கரு ஜெயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
மாவட்டஅரசாங்கஅதிபர்களாகஇராணுவ பிரிகேடியர்களயும், பாடசாலை அதிபர்களாக இராணுவகேர்னல்களையும் நியமிக்க அரசாங்கம் நடவடிக்கைஎடுத்துள்ளதாகஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தற்போது உள்ள காவற்துறை மா அதிபர் என்ற பதவியை நீக்கி, காவற்துறை ஆணையாளர் என்ற புதிய பதவியை ஏற்படுத்த விருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இராணுவ ஆட்சியில் நடைபெறும் ஒன்று என்று சுட்டிக்காட்டிய அவர், இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

காங்கேசன்துறையை சூறாவளி தாக்கலாம்!?

Tuesday 30 October 2012.By.Rajah.எதிர்பார்க்கப்பட்டதைப் போல நேற்றைய தினம் இலங்கையை சூறாவளி எதுவும் தாக்கவில்லை, எனினும், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த சூறாவளி இலங்கையை ஊடறுத்து செல்லலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. தற்போது முல்லைத்தீவில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தாழமுக்க நிலையில், இன்று பிற்பகலில் காங்கேசன் துறை ஊடாக இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறும் என்று கூறப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணத்தில் சிறிய அளவிலான சூறாவளி ஒன்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்ற வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. அதேநேரம் மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.