siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 21 நவம்பர், 2012

வங்கி மோசடியாளருக்கு ஏழாண்டுச் சிறைத்தண்டனை

பிரிட்டனின் மிகப்பெரிய வங்கி மோசடியில் ஈடுபட்ட கிவேக்கு அடோபோலி என்பவருக்கு சவுத்வார்க் நீதிமன்றம் ஏழாண்டுச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கானா நாட்டில் பிறந்து வளர்ந்தவர் அடோபோலி(32). சுவிட்சர்லாந்தின் UBS வங்கியில் பணியாற்றிய போது செய்த மாற்றங்களால் வங்கிக்கு இலாபம் கிடைப்பதாகக் கணக்கும் காட்டினார்.
ஆனால், உண்மையில் இவர் செய்த மாற்றங்களால் UBS வங்கிக்கு 12 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இவர் மீது திட்டமிட்ட சதி மற்றும் பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்குகளை விசாரித்த நீதிபதி பிரையன் கீத், "உன்னிடம் ஒரு சூதாடி இருப்பதால் தான் நீ மற்றவர் பணத்தை வைத்து சூதாடி ஜெயிக்க நினைத்திருக்கிறாய். வங்கி விதிமுறைகளை மீறக்கூடிய முரட்டுத்தனம் உன்னிடம் இருந்திருக்கிறது என கூறி தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்

உலக நாடுகளில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறைந்து வருகிறது: ஐ.நா தகவல்

உலகின் பல்வேறு நாடுகளில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறைந்து வருவதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் பாதிக்கும் மேலாக எய்ட்ஸ் பாதிப்பு குறைந்து விட்டது என்றும், குறிப்பாக மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருந்த ஆப்ரிக்க நாடுகளிலும் எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறைந்து விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக மலாவி(73%), போத்ஸ்வானா(71%), நமீபியா(68%), ஜாம்பியா(58%), சிம்பாவே(50%), ஸ்வாஸிலாந்து(41%), தென்னாப்பிரிக்கா(41%) போன்ற நாடுகளில் எச்ஐவி நோய்த்தொற்று பாராட்டத்தக்க அளவில் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மாத்திரிகளை சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை 63 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கழுத்தில் வெடிகுண்டை வைத்து இளம் பெண்ணை மிரட்டிய நபர்

இளம் பெண்ணின் கழுத்தில் வெடிகுண்டை வைத்து 10 மணி நேரமாக அச்சுறுத்திய நபருக்கு, அவுஸ்திரேலிய நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் டக்ளஸ் பீட்டர்ஸ். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மெடிலீன் புல்வர்(வயது 18) என்ற பெண்ணின் கழுத்தில், போலி வெடிகுண்டை வைத்து, வெடிக்க செய்வதாக 10 மணி நேரமாக மிரட்டியுள்ளார்.
உடனே விரைந்து சென்ற பொலிசார், அப்பெண்ணை மீட்டதுடன் டக்ளஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நீதிமன்றத்தில் பெண்ணின் கழுத்தில் போலி வெடிகுண்டை மாட்டி அவரை மிரட்டியதை ஒப்புக்கொண்டார்.
மனைவி விவாகரத்து செய்ததால் மன வருத்தத்தில் இருந்த அதிகப்படியாக மது அருந்தி உள்ளார். இதன் காரணமாகவே இந்த தவறை செய்ததாக அவரது வழக்கறிஞர்கள் வாதாடினர்.
டக்ளசின் இந்த நடவடிக்கையால் மெடிலீன் எந்த அளவு பயந்திருப்பார் என்பதை எங்களால் உணர முடிகிறது. எனவே டக்ளஸ் மீது கருணை காட்டமுடியாது என கூறிய நீதிபதி அவருக்கு பதிமூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் 10 ஆண்டுகளுக்கு அவர் பரோலில் வெளியே வரமுடியாத படி தீர்ப்பு கூறியுள்ளார்.

யாழில் பெரும் தொகையானவர்கள் இராணுவத்தில்

{புகைப்படங்கள்,} }கிளிநொச்சியைஅடுத்துயாழில்இருந்தும்பெரும் தொகையானவர்கள்இராணுவத்தில்இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்று கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு அளவெட்டியில் நடைபெற்றது.
அளவெட்டிமத்தியில்நடைபெற்றஇந்நிகழ்வில்கலந்து கொண்டு பயணாளிகளுக்கான வீடுகளைக் கையளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
ஆராம்ப காலத்தில் இராணுவத்தில் பெருமளவான தமிழர்கள் பணிபுரிந்து வந்தனர். அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் இராணுவத்தில் இருந்து விலகிக் கொண்டனர்

செவ்வாய், 20 நவம்பர், 2012

பாகிஸ்தானில் மலாலாவுக்கு உயர்ந்த விருது

பாகிஸ்தானிய பெண் மலாலாவுக்கு அந்நாடு வீரதீரச் செயலுக்கான விருதை வழங்கியுள்ளது. பெண்களின் கல்விக்காக போராடியதற்காக தாலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார் மலாலா.
இந்நிலையில் நாட்டின் உயரிய விருதான வீரதீரச்செயலுக்கான விருதை உலக சமாதானம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் தலைவர் பிரின்ஸ் அலி கான் வழங்கினார்.
இந்த விருதை மலாலா சார்பில் பிரித்தானியாவுக்கான பாகிஸ்தான் துணைத்தூதர் கர்தேசி பெற்றுக் கொண்டார்

காதல் திருமணம் செய்த வாலிபர் எரிப்பு: உறவினர் வெறிச் செயல்

பாகிஸ்தானில் காதலித்து நீதிமன்ற அனுமதியுடன் திருமணம் செய்த காதலனை பெண் வீட்டு உறவுக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். பாகிஸ்தானின் முசராபாத்தில் உள்ள புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் மொகமது மஜித்.
இவர் கராச்சியைச் சேர்ந்த சமினா பீபி என்ற பெண்ணை அவளது பெற்றோரின் எதிர்ப்பை மீறி நிதிமன்ற அனுமதியுடன் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்தார்.
இதனால் பெண்ணின் குடும்பத்தார் மஜித்தின் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். பொலிசார் அவரது தந்தை மற்றும் சகோதரனையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில் பெண்ணின் சகோதரர் அப்துல் சட்டார் மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்து மஜித்தை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
இதனால் மஜித் உயிருக்கு போராடிய நிலையில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருடைய உடலில் 90 சதவிகித்திற்கும் மேல் எரிந்துள்ளதால் அவர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மஜித்தை எரித்த நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

சவீதா மரணம் குறித்து விவாதிக்க தயாராகும் அயர்லாந்து

கரு கலைப்புக்கு மருத்துவர்கள் மறுத்ததால் இறந்து போன இந்திய பெண் சவீதாவின் மரணம் குறித்து அயர்லாந்து அமைச்சரவை இன்று விவாதிக்க உள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர் சவீதா, 31. இவரது கணவர் பிரவீன், அயர்லாந்து நாட்டின் கால்வே நகரில் இன்ஜினியராக உள்ளார். பல் மருத்துவரான சவீதாவுக்கு, கடந்த மாதம் வயிற்று வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உங்கள் வயிற்றில் வளரும் கரு இயல்பான நிலையில் இல்லாததால் வலி ஏற்பட்டுள்ளது என்றனர்.
இதைக் கேட்ட சவீதா, "17 வார கருவில் கோளாறு இருந்தால் கலைத்து விடுங்கள்” என்றார். ஆனால் மருத்துவர்கள் இது கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு என்பதால் கருவை கலைக்க முடியாது என மறுத்து விட்டனர்.
ஒரு கட்டத்தில், சவீதா வயிற்றில் வளர்ந்த சிசு இறந்து விட்டது. தொப்புள் கொடி வழியாக, சவீதாவின் ரத்தத்தில் விஷம் பரவியதை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன், சவீதா இறந்து விட்டார்.
கரு கலைப்பு செய்திருந்தால், சவீதா உயிர் பிழைத்திருப்பார் அவரது மரணத்துக்கு மருத்துவர்கள் தான் காரணம் என சவீதா பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது இந்த பிரச்னை பூதாகரமானதையடுத்து, அந்நாட்டு பார்லிமென்டிலும் விவாதிக்கப்பட்டது.
"சவீதாவின் மரணத்தை காரணம் காட்டி, நாட்டின் சட்டத்தில் உடனடியாக மாற்றம் செய்ய முடியாது” , அயர்லாந்து பிரதமர் தெரிவித்திருந்தார். கருக்கலைப்பு குறித்த சட்டத்தில் திருத்தம் செய்யும் படி கூறி, நேற்று முன்தினம் டப்ளின் உள்ளிட்ட பல நகரங்களில் ஏராளமானவர்கள் மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் ஜேம்ஸ் ரீலி சவீதாவின் இறப்பு குறித்த சுகாதாரத்துறை அறிக்கையை அமைச்சரவை முன் வைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

போதை மருந்துக்குத் கனடாவில் தடை இல்லை

கனடாவில் Oxycontin எனப்படும் வலி நிவாரணி மருந்தை, கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பலர் போதை மருந்தாகப் பயன்படுத்துவதால் இதனைத் தடை செய்ய இயலாது, என்று மத்தியக் கூட்டரசு மாநில அரசுகளிடம் தெரிவித்தது. இந்த மருந்து எங்கு யாருக்கு விற்கப்படுகிறது என்று கவனிக்கும்படி அரசு, மருந்து விநியோகஸ்தருக்கான உரிம விதிகளில் கூறியிருப்பதால் இனி இந்த மருந்தைத் தவறாக யாரும் பயன்படுத்துவது கடினம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் லியோனா அக்லுக்காக் கூறியுள்ளார்.
மேலும் இந்த மருந்தைத் தவறாகப் பரிந்துரைக்கும் மருத்துவர், விற்கும் மருந்தாளுநர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதுபோல நூறு மருந்துகள் கனடாவில் உள்ளதால் இந்த மருந்தைத் தடை செய்வதால் எவ்விதப் பயனுமில்லை.
இவையனைத்தையும் தடை செய்தால், மருந்து தேவைப்படும் நோயாளிகள் தவித்துப் போவார்கள்.
அவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற உறுதுணையாய் இருப்பது அரசின் தலையாய கடமை ஆகும் என்றார்.
ஒண்ட்டேரியோவின் சுகாதாரத் துறை அமைச்சர் டெப் மேத்யூஸ், இந்த ஆக்ஸ்கோட்டினுக்குத் தடை விதிக்கக் கோரி பிரச்சாரம் செய்தார்.
இந்த மருந்து கிடைக்கப்பெற்றால் நாட்டில் பலர் எந்நேரமும் போதையிலேயே மிதந்து கொண்டிருப்பர்.
இதனால் உடனடியாக இதன் விற்பனையைத் தடுக்க வேண்டும் என்று மத்தியக் கூட்டரசிடம் கோரியிருந்தார்.
வரும் 25ம் திகதியுடன் ஆக்ஸி கோண்ட்டினின் தேசிய அனுமதி முடிவுபெறும் நிலையில் மத்தியக் கூட்டரசு மீண்டும் அதற்கு அனுமதி வழங்கிவிட்டது.
ஒரு மருந்தை ஏற்பதும் மறுப்பதும் அரசியல்வாதிகளின் பணி அன்று எனக் கூறிய அக்லுக்காக், ஒண்ட்டேரியோவும் மற்ற மாநிலங்களும் இந்த மருந்துக்குத் தடை கோருவது ஏன் என்று புரியவில்லை.
மருத்துவர்களும் மருந்தாளுநரும் தவறு செய்தால் அவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கின்றது.
இந்நிலையில் இந்த மருந்து எவ்வாறு போதை விரும்பிகள் கைக்குப் போய்ச் சேரும்.
அதைத் தடுக்க மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் கடுமையாக மேற்கொள்ள முடியும் என்று மாநில அரசின் கடமையையும் அதிகாரத்தையும் விவரித்தார்.
மாநில அரசுகளால் கடுமையான நடவடிக்கை எடுத்து ஆக்ஸி நியோவின் (ஆக்ஸி கோண்ட்டின் புதிய பெயர்) முறைகேடான விற்பனையைத் தடுக்க முடியாவிட்டால் மத்தியக் கூட்டரசு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும்.
ஏற்கெனவே மெத்தடோன் என்ற மருந்தின் முறைகேடான விற்பனையை நாம் கட்டுப்படுத்தி இருக்கிறோம் என்று உறுதிபடத் தெரிவித்தார்

ஆடைப் பொதிகளுக்குள் மறைத்து கஞ்சா கடத்திய நபர் கைது

 
கேரள கஞ்சாவைக் கடத்திய நபர் ஒருவர், கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை ஆடைப் பொதிகளுக்குள் மறைத்து, கடத்திய மாத்தளை பிரதேச நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 23 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களின் இரவு ஆடைப் பொதிகளுக்குள் மறைத்தே சென்னையிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த நபர் இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வருபவர் என்றும் இவர் ஆடை வியாபாரத்தில் ஈடுபடுபவர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்

பீதியில் உறைந்துள்ள முல்லைத்தீவு மக்கள்?


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று காலை பேரிரைச்சலுடன் வட்டமிட்டு தாழப் பறந்து சென்ற “கிபீர்” குண்டு வீச்சு விமானங்களால் அப்பிரதேச மக்கள் பீதியில் உறைந்து காணப்பட்டனர்.
நேற்று காலை 8 மணியளவில் திடீரெனப் பேரிரைச்சலுடன் முல்லைத்தீவு பிரதேசத்துக்குள் நுழைந்த கிபீர் விமானங்கள் தாழப் பறந்து வட்டமடித்தன.
தாக்குதலுக்கு வட்டமிடுவதைப் போன்று இவ்விமானங்கள் தாழப்பறந்து சென்றதால், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பதற்றத்தில் பாதுகாப்புக்காக மறைவான இடங்களைத் தேடி ஓடினர்.
புதுக்குடியிருப்பு, கேப்பாபிலவு, ஆனந்தபுரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் முல்லைத்தீவுக் கடல் பிரதேசத்திலும் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை அவை பேரிரைச்சலுடன் சுற்றிவளைத்தன.
போர் முடிவடைந்து 3 ஆண்டுகளின் பின்னர் இந்த மாதம் 10 ஆம் திகதி மற்றும் 13 ஆம் திகதி தீபாவளித் தினத்தன்றும் கிபீர் விமானங்கள், முல்லைத்தீவில் தாழப் பறந்து மக்களை அச்சுறுத்தின. இது மூன்றாவது தடவையாக மக்களை அச்சுறுத்தியள்ளதாக அப்பிரதேச மக்கள் அச்சம் கலந்த தொனியுடன் விசனம் வெளியிட்டுள்ளனர்