| ஈரான் தனது சொந்த தயாரிப்பான
நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல்களை வெளி உலகிற்கு காட்டியுள்ளது.
இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஹேர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள
பந்தர் அபாஸில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது, 2 காதிர் ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. காதிர் ரக நீர்மூழ்கி கப்பல்கள் ஒரே நேரத்தில் ஏவுகணைகளையும், டொபிடோக்களையும் பயன்படுத்தி தாக்கமுடியும் என ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் ஈரானானது மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டை தயாரித்து வருவதை நிரூபிக்கும் வகையில் ஆதாரமொன்றும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சந்தேகம் கொண்டுள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடனான ஈரானின் உறவை இது மேலும் சீர்குலைக்கலாம்{புகைப்படங்கள்,} |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வெள்ளி, 30 நவம்பர், 2012
நீர்மூழ்கி மற்றும் போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியது?
போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கில் அதிகாரிகள் விடுவிப்பு
| போர்க்குற்றங்கள் தொடர்பான
வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் மற்றும் அவரது சகாக்கள் இருவரை சர்வதேச நீதிமன்றம்
விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
கொசாவா முன்னாள் பிரதமரும், கொசாவா விடுதலைப்படை முன்னாள் தளபதியுமான ரமூஸ்
ஹரடினாஜ் மற்றும் இவரது சகாக்களான இத்ரிஸ் பலாஜ், லாஹி பிராஹிமாஜ் ஆகியோர் மீது
போர்க்குற்றங்கள் புரிந்ததாக தி ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தனிநாடு கோரி போராடிய அல்பேனிய கொரில்லா படையினருக்கும், செர்பிய படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அப்போது செர்பியர்களையும், அல்பேனியர்கள் அல்லாதவர்களையும் கொன்றதாகவும், சித்ரவதை செய்ததாகவும் ஹரடினாஜ், இத்ரிஸ் பலாஜ் ஆகியோருக்கு எதிராக 6 போர்க் குற்ற வழக்குகளும், லாஹி பிராஹிமாஜ் மீது 4 போர்க்குற்ற வழக்குகளும் பதிவாகின. இந்த வழக்கின் மறுவிசாரணையில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி மூவரையும் விடுதலை செய்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. |
தூதரகத்தில் தஞ்சமடைந்த அசாஞ்ச் நுரையீரல் நோயால் கடும் அவதி
| அமெரிக்கா உட்பட பல்வேறு
நாடுகளின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணையத்தள
நிறுவனர் அசாஞ்ச்.
இவர் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயார் நிலையில் இருந்த போது, சுவீடன்
நீதிமன்றத்தில் அசாஞ்ச் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே இங்கிலாந்தில் தங்கியிருந்த அசாஞ்சை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார் அசாஞ்ச். பல மாதமாக தூதரக கட்டிடத்திற்குள்ளேயே முடங்கி கிடப்பதால் அவரது உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. மருத்துவரை வரவழைத்து சிகிச்சை கொடுக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவருக்கான அனைத்து சிகிச்சை செலவையும் ஈக்வடார் அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது அசாஞ்சே நுரையீரல் கோளாறால் மிகவும் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி இங்கிலாந்து நாட்டிற்கான ஈக்வடார் தூதர் அனா ஆல்பின் கூறுகையில், அசாஞ்சே கடுமையான நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். இது எந்த நேரத்திலும் மேலும் மோசமான நிலையை அடையலாம். முழு மருத்துவ செலவுகளையும் ஈக்வடார் அரசாங்கமே ஏற்றுள்ளது. மருத்துவர்கள் தினமும் சென்று அவருடைய உடல்நிலையை சோதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று தெரிவித்தார். |
ஆசிட் ஊற்றி முகத்தை சிதைத்த கணவன்: வங்கதேச பெண்ணின் சோக கதை
| வங்கதேசத்தில் முகத்தில் ஆசிட்
ஊற்றி சிதைத்த கணவனுடன் மறுபடியும் குடும்பம் நடத்தும் வேதனைக்கு
தள்ளப்பட்டிருக்கிறார் பெண் ஒருவர்.
வங்கதேசத்தின் ஷக்திரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நூர்பானு. இவர் கடந்த 18
வருடங்களாக தனது கணவரிடம் பல்வேறு விதமான கொடுமைகளை அனுபவித்து வந்தார். இதனால் மனம் வெறுத்துப் போன இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். இதை அறிந்து கோபமடைந்த இவரது கணவர் மனைவி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் நூர்பானுவின் இரு கண்களும் பாதிக்கப்பட்டன. பார்வை நரம்புகள் சேதமடைந்ததால் பார்வை பறிபோனது. முகமும் அகோரமாகிப் போனது. இந்த நிலையில் நூர்பானுவுக்கு விவாகரத்து கிடைத்தது. மனைவி மீது ஆசிட் ஊற்றிய பின்னர் 10 மாதம் தலைமறைவாக இருந்து வந்த நூர்பானுவின் கணவரை, பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு வருடம் சிறையில் இருந்த அவரை அவரது தாயார் ஜாமீனில் வெளியே அழைத்து வந்தார். அதன் பிறகு நூர்பானு, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு அவரது மாமியார் மிரட்டியும், வற்புறுத்தியும், வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார். இதனால் மறுபடியும் நரகத்திற்குத் தள்ளப்பட்ட நூர்பானு, தற்போது மறுபடியும் அதே அடி உதையுடன் கஷ்டத்தில் சிக்கியுள்ளாராம். இவரது நிலை குறித்து விஎஸ்ஓ என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆவணப் படமாக தயாரித்துள்ளது.{புகைப்படங்கள்,} |
வியாழன், 29 நவம்பர், 2012
மிட் ரோம்னிக்கு விருந்து கொடுத்தார் ஒபாமா
| அமெரிக்க ஜனாதிபதி
தேர்தலில் தோல்வியுற்ற மிட் ரோம்னிக்கு ஜனாதிபதி ஒபாமா மதிய விருந்து கொடுத்தார்.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஒபாமா மீது
பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் ஒபாமா வெற்றி பெற்ற பின்பு ஆதரவு தருவதாக
கூறினார். இந்நிலையில் வெள்ளை மாளிகை விருந்துக்கு ரோம்னி அழைக்கப்பட்டு இன்று நடந்த விருந்தில் கலந்து கொண்டார். விருந்தில் ரோம்னி- ஒபாமா இருவர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு பயன் உள்ளதாக இருக்கும் விடயங்களைப்பற்றியே பேசியதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜெய்கார்னி தெரிவித்தார். |
கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 54ஆக உயர்ந்தது
| சிரியாவில் இரு கார்
வெடிகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 54 பேர் பலியாயினர், 120க்கும்
மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக புரட்சிபடையினர் கடுமையாக போராடி
வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஜராமனா நகரில் கிறிஸ்தவ ட்ரூஸ் இன சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு 2 கார் வெடிகுண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென வெடித்ததில் அப்பகுதியில் இருந்த 20 பேர் பலியாயினர். குறுகலான சாலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்களின் மீது விழுந்ததாகவும், எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் இடிபாடுகளுக்கு இடையே சிதறி கிடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குண்டுவெடிப்பில் 20 பேர் இறந்ததாக முதலில் கூறிய சிரியா மனித உரிமைகள் அமைப்பு, பின்னர் 54 பேர் இறந்ததை உறுதி செய்தது, 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜராமனாவில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 4 முறை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.{காணொளி, புகைப்படங்கள்} |
கண்டம் விட்டு கண்டம் பாயும் பாகிஸ்தானின் ஏவுகணை
| அணு ஆயுதங்களை சுமந்து
சென்று 1300 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்ககூடிய அதிநவீன ஹத்ஃப்-5 ஏவுகணையை
பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
கோரி என்றழைக்கப்படும் ஹத்ஃப்-5 என்ற கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை
பாகிஸ்தான் இராணுவம் வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. சாதாரண மற்றும் அணு குண்டை தாங்கிச் சென்று 1300 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் தடுப்புத்திறன் மற்றும் தேசியப் பாதுகாப்பை இச்சோதனை வலுப்படுத்தி உள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இந்த ஆண்டில் மட்டும் 60 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் திறன் படைத்த ஹத்ஃப்-9 முதல் ஹத்ஃப்-4 வரை பல்வேறு அதிநவீன ஏவுகணைகளைச் சோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.{காணொளி,} |
பயணிகளின் பொருட்களை திருடிய 13 பேர் கைது
| பிரான்சின் பாரிஸ் விமான
நிலையத்தில் பயணிகளின் பொருட்களை திருடியதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ரோஸி சார்லஸ் டி கவ்லி விமான நிலையம்
உள்ளது. இங்கு ஜோக்னஸ்பர்க், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய பகுதிகளிலிருந்து விமானங்களில் வரும் பயணிகளின் பெட்டிகள் கிடங்கில் அடுக்கி வைக்கப்படும். இந்த கிடங்கில் கண்காணிப்பு கமெரா பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கமெரா இல்லாத ஒதுக்கு புறமான பகுதிகளில் உள்ள பெட்டிகளிலிருந்து நகைகள், துணிகள், தோல் பொருட்கள் போன்றவை திருடு போனது தெரியவந்தது. இத்திருட்டு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகம் எழுந்த மற்ற 9 பேரின் வீடுகளில் சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகள், அவர்களையும் கைது செய்தனர் |
வடகொரியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்
| வடகொரியாவுக்கு
எதிரான தீர்மானம் முதன் முறையாக வாக்கெடுப்பின்றி ஒருமனதாக ஐ.நாவில் நிறைவேறி
உள்ளது.
ஆள் கடத்தல் மற்றும் இதர விதிமீறல்கள் தொடர்பான பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண
வேண்டும் என வடகொரியாவை வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஐ.நா பொதுச் சபையின் மூன்றாவது குழுவிடம் வருவதற்கு 8 ஆண்டுகள் ஆன போதிலும், வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேறியது இதுதான் முதன் முறையாகும். எனினும் சீனா, கியூபா மற்றும் வெனிசூலா உள்ளிட்ட சில நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை |
புதன், 28 நவம்பர், 2012
பாட்டு கேட்டு கொண்டிருந்த கறுப்பின வாலிபர் சுட்டுக் கொலை??
| பாட்டை சத்தமாக வைத்து
கேட்டு கொண்டிருந்த கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில் நகரில் ஷாப்பிங் செய்ய மைக்கேல்
டன்(வயது 45) என்ற தொழிலதிபர் தன் மனைவியுடன் வந்திருந்தார். அப்போது அதிகளவு சத்தம் போட்டு கொண்டு கறுப்பின வாலிபர்கள் சிலர் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தனர். உடனே சத்தத்தை குறைக்கும் படி கூறினார், ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். கோபமடைந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியை எடுக்கவே, இதை பார்த்த டன் துப்பாக்கியை பிடுங்கி சரமாரியாக வாலிபரை நோக்கி 10 முறை சுட்டார். இதில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவத்துக்கு பிறகு டன் அங்கிருந்து தப்பி சென்றார். ஆனால் கண்காணிப்பு கமெரா மூலம் அவரை பொலிசார் பிடித்தனர். இறந்த வாலிபர் டேவிஸ் என்பதும், கைது செய்யப்பட்ட டன் வெள்ளை இனத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





























