| உலகம் விசேட நாளாக கருதிய 12.12.12ல் இறக்க வேண்டுமென எண்ணிய வாலிபர், தற்கொலை செய்து கொண்டார். |
| உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சகர் மாவட்டத்தில் உள்ள நரோரா நகரை சேர்ந்த
கிருஷ்ணபால் (வயது 40), மரக்கன்றுகள் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடவுள் விருப்பப்படி தான், கடந்த 12.12.1972ல் பிறந்ததாக கூறி வந்தார். ஆனால், இறப்பு என்பது கடவுள் விருப்பப்படி நடப்பது இல்லை எனக்கூறிய இவர், 12.12.12ம் திகதி உயிர் விடுவேன் என முன்கூட்டியே தெரிவித்துள்ளார். இதன்படி தனது மரணத்துக்கு நாள் குறித்த கிருஷ்ணபால், 12.12.12ம் திகதி பிற்பகல் 12:12 மணிக்கு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக 12 பக்கத்துக்கு விரிவாக கடிதம் எழுதி வைத்தார். இந்நிலையில் செங்கற்களை எடுத்துக் கொண்டு நேற்று காஜியாபாத் பிரதாப் நகரில் உள்ள 80 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறி உச்சிக்கு சென்றார். கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டிக் கொண்டார். அந்த பக்கம் சென்றவர்களை அழைத்து, தான் வைத்திருந்த 12 பக்க கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பிகளை கீழே வீசினார். அதை படித்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்தனர். கிருஷ்ணபாலை சமாதானம் செய்து கீழே இறங்க கூறினர். அதை அவர் ஏற்கவில்லை. இதற்கிடையில் வாலிபர்கள் சிலர் தண்ணீர் தொட்டி மீது ஏறினர். அவர்கள் மீது செங்கற்களை வீசினார். இதனால் பயந்து போய் அவர்கள் கீழே இறங்கிவிட்டனர். எனினும், பொதுமக்களும் பொலிசாரும் கிருஷ்ணபாலை கீழே இறக்க தீவிர முயற்சி செய்தனர். இதனால் தனது எண்ணம் எங்கே நிறைவேறாமல் போய் விடுமோ என்று பதற்றமானார் கிருஷ்ணபால். 11.05 மணிக்கெல்லாம் கீழே குதித்து விட்டார். பொலிஸ் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்த கிருஷ்ணபாலை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து காஜியாபாத் பொலிஸ் கண்காணிப்பாளர் ஷிவ்சங்கர் சிங் யாதவ் கூறுகையில், கிருஷ்ணபால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். 12.12.12ம் திகதி 12:12 மணிக்கு கடவுள் விருப்பத்தை மீறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியவர் எதிர்பாராதவிதமாக முன்கூட்டியே விழுந்து இறந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வெள்ளி, 14 டிசம்பர், 2012
தன் மரணத்தை 12.12.12ல் தீர்மானித்த இளைஞர் தற்கொலை
ஜனாதிபதிக்கு 5-வது முறையாக மரண தண்டனை விதிப்பு,/
| ஈராக்கின் துணை ஜனாதிபதி
தாரிக் அல் ஹாஷ்மிக்கு, ஐந்தாவது முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் சதாம் உசேனின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், அமெரிக்காவின் உதவியுடன்
ஆட்சி மலர்ந்தது. துணை ஜனாதிபதி பதவியில் இருந்த தாரிக் அல் ஹாஷ்மி, 45 பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி பாக்தாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் துருக்கிக்கு சென்ற ஹாஷ்மி, மீண்டும் நாடு திரும்பவில்லை. இதற்கிடையே ஹாஷ்மி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதித்து பாக்தாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு பிறகு சில நீதிமன்றங்களிலும் அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மற்றொரு நீதிமன்றத்தில், அவருக்கு ஐந்தாவது முறையாக மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. ஹாஷ்மி கடந்த 2006ம் ஆண்டு துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த 2010ம் ஆண்டில் நடந்த தேர்தலில் மீண்டும் துணை ஜனாதிபதியாக தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது |
மலாலாவின் பெயரை சூட்ட பள்ளி மாணவிகள் எதிர்ப்பு
| தலிபான்களின் துப்பாக்கி சூட்டுக்கு
ஆளான சிறுமி மலாலாவின் பெயர், பள்ளிக்கு சூட்டப்படுவதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாவட்டத்தின் மிங்கோரா நகரை
சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய்(வயது 14). பள்ளி மாணவியான மலாலா பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், தலிபான்களின் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடியர். இவர் அமைதி குறித்து பல்வேறு பேச்சு போட்டிகளிலும், தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்நிலையில் மலாலா மீது தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பலத்த காயமடைந்த மலாலா, தற்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறாள். மலாலாவின் பெயரில் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றுக்கு, பாகிஸ்தான் அரசு மலாலா பெயரை சூட்டியுள்ளது. ஆனால் இதற்கு அந்த பள்ளி மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், இந்த பெயரை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் தலிபான்கள் இந்த பள்ளியின் மீது தாக்குதல் நடத்துவார்கள். பாதிக்கப்படப்போவது நாங்கள் தான் என கூறி வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர் |
செவிலியர் ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை
| லண்டனில் மர்மமான முறையில் தற்கொலை
செய்து கொண்ட செவிலியர் ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பிரிட்டன் பொலிசார்
வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். இவர் லண்டன்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்தார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலையமொன்று அரசு குடும்பத்தினர் போன்று பேசி, இளவரசி குறித்த தகவல்களை சேகரித்தனர். இந்த அழைப்பு செவிலியர் ஜெஸிந்தா தான், இளவரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு இணைப்பு கொடுத்தார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் பயந்து போன ஜெஸிந்தா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து ஸ்காட்லாந்து பொலிசார் விசாரணை நடத்தி ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ஜெஸிந்தா, துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருடன் பணிபுரியும் சக ஊழியரும், மருத்துவமனை பாதுகாவலர்களும் அவர் தூக்கில் தொங்குவதை பார்த்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வேறு எதுவும் சந்தேகப்படும் படியாக இல்லை. மூன்று குறிப்புகளை எழுதி வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
ஜனாதிபதியை தோற்கடித்து வெற்றி பெறும் நிலையில்?
| சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்
அசாத் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், புரட்சிபடையினரின் கை ஓங்கியுள்ளதாகவும்
ரஷ்யா தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத் பதவி விலக கோரி புரட்சிபடையினர் போராட்டம்
நடத்தி வருகின்றனர். இப் போராட்டத்தில் இதுவரையிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதுடன், ஐந்து லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். போராட்டத்தை கைவிடும் படி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தியும், ஜனாதிபதி பதவி விலக மறுத்து வருகிறார். இவருக்கு சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதற்கிடையே சிரியா புரட்சிபடையினரை அங்கீகரிப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ரஷ்ய வெளிவிவகாரத்துறை அமைச்சர் போக் டோனோவ் குறிப்பிடுகையில், சிரியாவில் புரட்சிபடையினரின் கை ஓங்கியுள்ளது. அப்பாவி மக்கள் பலர் மடிவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார். இந்நிலையில் புரட்சிபடையினர் மீது சிரியா இராணுவம் ஸ்கட் ரக ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது |
வியாழன், 13 டிசம்பர், 2012
O/L பரீட்சை எழுதிய மாணவி உட்பட இருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை
|
|
| . |
| மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு வந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மாங்காடு விஸ்ணு ஆலய வீதியில் உள்ள வீட்டில் வினோதினி (வயது - 16) என்ற மாணவியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
பரீட்சை முடிந்து வீட்டுக்குவந்த குறித்த மாணவி உணவருந்தியவேளையில் வீட்டில் உள்ளோர் தமது தோட்டத்துக்குச் சென்றுள்ளனர். இந்தவேளையில் தோட்டத்தில் இருந்து வீடு திரும்பிய பெற்றோர் மகள் சடலமாக தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இது தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் உள்ள விளையாட்டு மைதானத்தானத்துக்கு அருகில் உள்ள மரத்தில் இருந்து நேற்று புதன்கிழமை காலை இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர் காஞ்சிரங்குடாவை சேர்ந்த ப.ஜெகன் (வயது - 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் தூக்கில் தொங்கியிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில்
|
மூன்று வயது குழந்தை சினிமா நட்சத்திரம் தீ விபத்தில்
இங்கிலாந்து நாட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் அடைந்த 3 வயது Sophie Firth என்ற சிறுமி, தன்னுடைய உடலில் தீப்பிடித்த காரணத்தால், படுகாயம் அடைந்து, உயிருக்கு 8 நாட்களாக போராடி, பின் பரிதாபமாக இன்று காலை லண்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Sophie Firth என்ற 3 வயது குழந்தை நட்சத்திரம், Emmerdale என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் Angelica King on ITV soap என்ற வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவர் பல பாராட்டுக்களையும், பரிசுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில், விடுமுறை தினத்தில், தன் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையில் உடையில், கேஸ் அடுப்பின் தீ பட்டு, பின் உடல் முழுவதும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். எட்டு நாட்களாக மருத்துவர்கள் இரவு பகல் பாராது தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சைக்கு பலனளிக்காமல், இன்று காலை லண்டனில் மரணமடைந்தார்.
அவருடைய மரணச்செய்தி கேட்டு, Emmerdale படக்குழுவினர் நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவருடைய இழப்பு இங்கிலாந்து சினிமாத்துறைக்கு மட்டுமல்லாமல், ஹாலிவுட் திரைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்
குஷ்பு மார்பில் இந்து மத கடவுள்கள்: புதிய சர்ச்சை???
| இந்து மத கடவுள்களான ராமர், கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயரின் படம் பதித்த சேலையைக் கட்டியதற்காக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. |
|
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ், நடிகை
குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்துக் கடவுள் படங்கள் உள்ளன. அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார். இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்திருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தெரிந்தே செய்திருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். முன்னதாக குஷ்பு, ருத்ராட்ச மாலையில் பெரிய பிளாஸ்டிக் தாலியைக் கோர்த்து அணிந்து வந்து சர்ச்சையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. |
16 வயது இளைஞனுடன் செக்ஸ் உறவு வைத்த 38 வயது?)
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரில் 38 வயது பெண்ணுக்கு ஒருவர், டீன் ஏஜ் இளைஞனுடன் செக்ஸ் வைத்திருந்த குற்றத்திற்காக 6 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில், Marie Jane என்ற 38 வயது திருமணம் ஆன பெண், 16 வயது இளைஞன் ஒருவருடன் காதல் கொண்டு, அவருடன் செக்ஸ் உறவு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
பின்னர் பிரிஸ்டல் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Marie Janeக்கு நீதிபதி 6 மாத சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மகன் வயதுள்ள இளைஞனுடன் செக்ஸ் உறவு வைத்திருந்த அந்த பெண்ணை நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார். இவரை இரண்டு வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய, இவர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட Marie Janeக்கு எதிராக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் Prosecutor Kenneth Bell, 16 வயது இளைஞனுடன் வெறும் நட்புடன் மட்டுமே பழகியதாக Marie Jane கூறுவதை ஏற்க முடியாது என்றும், அவர் அந்த இளைஞனை பெற்றோரிடம் இருந்து பிரித்து, தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார் என்றும், எனவே அந்த பெண்ணுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வாதாடினார்
பெண்ணுடன் கள்ள உறவு: சிங்கப்பூர் சபாநாயகர் பதவி விலகினார்
|
பெண் ஒருவருடன் தகாத உறவு
கொண்டிருந்ததாக புகார் எழுந்ததால், சிங்கப்பூர் நாடாளுன்ற சபாநாயகர் மைக்கேல்
பால்மர் பதவி விலகினார்.
சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்தவர் மைக்கேல் பால்மர். மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பால்மர், தனது தொகுதி அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்ற உறுப்பினர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும், தகாத உறவு வைத்திருந்தால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள் என கட்சி தலைவர்கள் விமர்சித்தனர். இதனையடுத்து குறித்த பெண் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனை தொடர்ந்து தானும் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் பால்மர் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் செய்தது தவறு தான். என்னுடைய ஒழுக்க கேட்டினால் கட்சிக்கு களங்கம் ஏற்படுவதை விரும்பவில்லை. எனவே பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.{காணொளி, } |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

























