siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 29 நவம்பர், 2013

ஈரானில் பூமியதிர்வு; 8 பேர் உயிரிழப்பு


ஈரானில் இடம்பெற்றுள்ள பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  59 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு ஈரானிலுள்ள அணு மின் நிலையத்திற்கு அருகில்  நேற்று வியாழக்கிழமை மாலை இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையிலுள்ளனர்.
இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் குடியிருப்புக் கட்டடங்கள் சேதமாகியுள்ளதுடன், மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பூமியதிர்ச்சியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கேள்விப்பட்டு கவலையடைந்துள்ள ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரூஹானி,  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்

வியாழன், 28 நவம்பர், 2013

ஜேர்மன் அரண்மனையில் பற்றி எரிந்த தீ

ஜேர்மன் நாட்டில் 1000 ஆண்டு பழமைவாய்ந்த ரெனேசான்ஸ் அரண்மனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ரெனேசான்ஸ் அரண்மனையாது பல்லாயிரம் யூரோக்களால் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்தாகும்.
இந்த அரண்மனையாது சரியான முறையில் பராமரிக்கப்படாததால் 1956ம் ஆண்டு பள்ளிக்கூடமாக சோவியத் ராணுவத்தினரால் மாற்றப்பட்டது.

பின்னர் 1971ம் ஆண்டு அரண்மனையில் சீரமைப்பு பணிகள் நடந்தபோது அருங்காட்சியாகவும், நூலகமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் 100 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்களால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
மேலும் இவர்களில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி பதவி நீக்கம் - தேர்தலில் போட்டியிட தடை


வரி மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் அவர், நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்புக்கு முந்தைய விவாதத்தின்போது பெர்லுஸ்கோனியின் ஆதரவாளர்கள் சிலர், அவரை நெல்சன் மண்டேலாவுக்கு இணையாகப் புகழ்ந்தாலும் அவரது நீக்கம் தவிர்க்க இயலாததாகிவிட்டது. பின்னர் தனது இல்லத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பெர்லுஸ்கோனி, இது ஜனநாயக துக்கநாள் என்று விமர்சித்ததுடன் தனது போராட்டம் ஓயாது என்றும் தெரிவித்தார்.
   
இந்த நீக்கத்தின்மூலம், 3 முறை பிரதமர் பதவியை வகித்துள்ள பெர்லுஸ்கோனி, அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் அவர் உடனடியாகக் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இருப்பினும் கைதுக்கு வாய்ப்பில்லை என அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 

புதன், 27 நவம்பர், 2013

56 தாய்மார்கள் படுகொலை! பாகிஸ்தானில் பயங்கரம்

பாகிஸ்தானில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த காரணத்திற்காக 56 தாய்மார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.
இதன்படி கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 56 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தகவலை மனித உரிமைகள் ஆர்வலர் ஐ.ஏ.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிராக ஆசிட் வீச்சில் 90 வழக்குகளும், உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் 72 வழக்குகளும், குடும்ப வன்முறையில் 491 வழக்குகளும், கற்பழிப்பு வழக்கில் 344 வழக்குகளும் மற்ற வன்முறை சம்பவங்களில் 835 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

செவ்வாய், 26 நவம்பர், 2013

கனடாவில் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

கனடாவில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கனடா நாடாளுமன்றத்தில் சீர்திருத்த ஆராய்ச்சியாளர் Howard Sapers சமர்பித்த அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், சிறுபான்மை இனத்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 75 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், 12,000 என்ற எண்ணிக்கையில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 15,000ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிவாசி பூர்விக குடிமக்களின் தொகை 80 சதவிகிதம் உயர்ந்துள்ளது, கருப்பினத்தை சேர்ந்த மக்களும் இதில் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் கடுங்காவல் தண்டனைக்குட்பட்டவர்கள், பிணையில் கூட வெளிவர தகுதி இல்லாதவர்கள்.

2,700 புதிய சிறைச்சாலை அறைகள் கட்டப்பட்டும், இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது.
கணக்கெடுப்பின்படி கனடா அரசாங்கம் ஆண்டுக்கு ஆண் கைதி ஒருவருக்கு 1,10,000 டொலர்களும், பெண் கைதிக்கு 2,20,000 டொலர்களும் செலவழிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இஸ்லாத்திற்கு தடை விதித்தோமா? விளக்கம் அளித்த அங்கோலா

 இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மசூதிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும் நீதி மற்றும் மனித உரிமை அமைச்சகம் இஸ்லாத்தை சட்டப்படி ஏற்றுக் கொள்ள அனுமதி அளிக்கவில்லை என்று அங்கோலாவின் கலாச்சாரத் துறை அமைச்சர் ரோசா க்ரூஸ் இ சில்வா கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியதாக ஆப்பிரிக்க ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வந்தன.
இந்நிலையில் இது குறித்து வாஷிங்டனில் உள்ள அங்கோலா தூதரக செய்தித் தொடர்பாளர், மத விவகாரங்களில் தலையிடாத நாடு அங்கோலா.

எங்கள் நாட்டில் ஏராளமான மதங்கள் பின்பற்றப்படுகின்றன. மக்கள் தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றும் சுதந்திரம் உள்ளது, கத்தோலிக்கர்கள், ப்ராடஸ்டன்ட்கள், பாப்டிஸ்ட்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர்.
எங்கள் நாட்டில் இஸ்லாத்துக்கு தடை விதிக்கப்படவில்லை, மசூதிகள் இடிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
 

திங்கள், 25 நவம்பர், 2013

ஜேர்மன் பத்திரிக்கையாளர் மர்ம மாயம்

ஜேர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் எகிப்தில் காணாமல்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனில் ஹமீத் அப்தல் என்பவர் பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். மேலும் இவர் 2009ம் ஆண்டில் இஸ்லாமியம் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்நிலையில் இவர் அல் அக்ரா பூங்காவில் அருகில் இருந்தபோது திடீரென காணாமல் போயுள்ளார்.
இவர் இஸ்லாமியர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

உலகில் முதன்முறையாக இஸ்லாத்திற்கு தடை! மசூதிகளை இடிக்க உத்தரவு


உலக நாடுகளிலேயே முதன் முறையாக இஸ்லாம் மதத்துக்கு அங்கோலா நாடு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அங்கோலா நாட்டின் கலாசாரத்துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை இஸ்லாத்துக்கு அங்கோலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை மசூதிகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
இத்தடையின் ஒருபகுதியாக நாடு முழுவதும் இருக்கும் மசூதிகள் இடிக்கப்படும்.
இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அங்கோலா ஜனாதிபதி ஜோஸே ஈடுர்டோ, இந்நாட்டில் இஸ்லாமிய செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 

திடீரென தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு

சிறியரக வாடகை விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் இதர வாகன வரிசைகளுடன் ஓடிய சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பால்மவுத் பகுதியை சேர்ந்த சச்சின் ஹெஜெஜி என்பவர் தனியார் வாடகை விமான நிறுவனத்திடம் இருந்து சிறியரக 'செஸ்னா' விமானத்தை வாடகைக்கு எடுத்தார்.

வாட்டர் வில்லியில் இருந்து போர்ட்லேண்ட் நோக்கி அவர் பறந்துக் கொண்டிருந்த போது விமான இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் இயந்திரம் இயக்கம் முற்றிலுமாக நின்றுவிட்டது.
அவ்வேலையில் விமானம் கம்பர்லேண்ட் நெடுஞ்சாலைக்கு மேலே வானத்தில் பறந்துக் கொண்டிருந்தது. உடனடியாக தரையிறங்கா விட்டால் விமானம் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் எனனபதை உணர்ந்த விமானி, வாகன போக்குவரத்து மிகுந்த போர்ட்லேண்ட் நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கினார்.

விமானம் சாலையில் இறங்குவதை கண்ட இதர வாகன ஓட்டிகள் திகைத்துக் போய் தங்களது வாகனங்களை ஓரம்கட்டி விட்டு விமானம் செல்ல வழி விட்டனர்.
விமானத்தின் இயந்திரம் இயக்கம் இழந்து சில கிலோமீட்டர் தூரம் வரை ஓடி சாலை தடுப்பு சுவற்றின் மீது மோதி நின்றது.
எனினும் இந்த சம்பவத்தினால் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஒபாமாவுக்கு நோபல் பரிசு பெறும் தகுதியில்லை: நடிகை அதிரடி


அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசை பெறும் தகுதியில்லை என்று ஹாலிவுட் நடிகை சூசன் சாரன்டோன் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சூசன் சாரன்டோன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், மக்கள் விடுதலைக்காக ஒபாமா பெரும் சாதனைப் படைக்கவில்லை என்றும் இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக படை வாபஸ் பெறாமல் உள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும் அவருக்கு நோபல் பரிசு பெறும் தகுதியில்லை என்று தாம் உணர்வதாக கூறியுள்ளார்.