siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 5 மார்ச், 2014

திருடர்கள் பற்றி பொலிசார் எச்சரிக்கை

கனடாவின் ரொறன்ரோ பிராந்தியத்தில் திருடர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும், முதியவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவின் ரொறன்ரோ பிராந்திய பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில், திருடர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெரியவர்களின் கவனத்தை திசை திருப்பி அந்நேரத்தில் தங்களது கைவரிசையை காட்டுகின்றார்கள் என்றும், இந்நிலையானது பல்வேறு இடங்களில் இருக்கின்றது எனவும் எச்சரித்துள்ளனர்.
இதுவரையிலும் கிட்டத்தட்ட 12 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன எனத் தெரியவருகின்றது.
இதில் அனேகமான சம்பவங்கள் தனியாக வியாபார தலங்களுக்கு வருகின்ற நபர்களை குறிவைத்தே நடைபெறுகின்றது.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், திருடவரும் நபர்கள், முதலில் தங்கள் மேல் நம்பிக்கை வரும்வகையில் பேசிபழகி பின் திருட்டை அரங்கேற்றுகின்றனர்.
அத்துடன் அவர் கள் தனியாக இல்லாது இருவாராகவோ அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகவோதான் இயங்குகின்றார்கள் எனவும், அவர்கள் முதியவர்களிடம் கொள்ளையிடுவது தமது தொழிலாகக் கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
பல தடவைகளில் போலியான தமது நகைகளைக் காட்டி மக்களிடமுள்ள தங்கத்தைக் களவாடியிருக்கின்றார்கள் எனவும், விரைவில் அவர்களை கைது செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்
 

தற்கொலை செய்யத் துடிக்கும் இராணுவ வீரர்கள்

அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொள்ள துடிக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் மனநலம் குறித்த மிகப்பெரிய ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளின் மூலம் பொதுமக்களைவிட அந்நாட்டின் ராணுவத்தினர் பல வகையான மன நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
தற்கொலை முயற்சிகள் மற்றும் இறப்புகள் தொடர்பான ஆய்வு கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியான மூன்று அறிக்கைகளில் ஜமா மனநல இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கைகளில் இரு பிரிவினருக்கும் இடையே காணப்படும் நோய் விகிதங்கள் குறிப்பிடத்தக்கதாக இருப்பதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின் மூத்த எழுத்தாளரும், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் பேராசிரியருமான ரொனால்ட் கெஸ்லர் ராணுவத்தினரிடையே பெரும்பான்மையாகக் காணப்பட்ட மனத்தளர்ச்சி பொதுமக்களைவிட ஐந்து சதவிகிதம் அதிகமாகவும், இடைப்பட்ட சமயங்களில் வெடிக்கும் தன்மை கொண்ட கோளாறு ஆறு மடங்கு அதிகமாகவும், மனஉளைச்சலுக்குப் பிந்தைய சீர்கேடு 15 சதவிகிதம் அதிகமாகவும் காணப்பட்டதாக ஹார்வர்ட் செய்தி ஒன்றில் மேற்கோள் காட்டியுள்ளார்.

தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்களிலும் 25 வீதமானவர்கள் மன நோய் சோதனைகளில் சாதகமான முடிவையே பெற்றிருந்தார்கள். அதிலும் 11 சதவிகிதத்தினர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தததாக கெஸ்லரின் ஆய்வு குறிப்பிடுகின்றது.
தற்கொலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 14 வீதமானவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்துள்ளனர். 5.3 வீதமானவர்கள் தற்கொலை பற்றித் திட்டமிட்டுள்ளனர். 2.4 வீதமானவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.
மொத்தத்தில் இந்த மூன்று அறிக்கைகளிலும் ராணுவம் மற்றும் மனநோய் பற்றி ஒரு குழப்பமான வெளியீடுகளே காணப்படுவதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவத்தினரிடையே அதிகரித்துக் காணப்படும் தற்கொலை முயற்சிகளுக்கான விபரங்கள் தெளிவாக அறியப்படவில்லை. எனினும், தாங்கள் வெளியிட்டுள்ள இந்த விபரங்கள் ராணுவப் பணிக்கு வருவோருக்கான நலத் திட்டங்களை மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்
 

செவ்வாய், 4 மார்ச், 2014

கேபிளில் தீப்பிடித்ததே நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கு

ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்துக்கு மின்சார கேபிள்களில் தீப்பிடித்ததே காரணம் என்று கப்பற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து கப்பற்படை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த மாதம் 26-ம் தேதி சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பேட்டரி பகுதியில் ஏற்பட்ட பழுதே காரணம் என்று சந்தேகிக்கப்பட்டது.
ஆனால், பேட்டரி பகுதியில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பேட்டரி பகுதிக்கு மேல் உள்ள மின் கேபிள்களில் தீ பிடித்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 2 கப்பற்படை அதிகாரிகள் உயிரிழந்ததும், விபத்துக்குப் பொறுப்பேற்று கப்பற்படைத் தளபதியாக இருந்த டி.கே.ஜோஷி, தனது பதவியை ராஜிநாமா செய்ததும் நினைவுகூரத்தக்கது.

திங்கள், 3 மார்ச், 2014

அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்ட விமானம்

துபாயிலிருந்து மும்பைக்கு வந்த எமிரேட்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.
231 பயணிகளுடன் துபாயிலிருந்து கிளம்பிய ஈகே-506 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானி சந்தேகித்தார். இதனால் நேற்று மதியம் 2.12 மணிக்கு மும்பையில் வந்து இறங்கவேண்டிய சமயத்தில் அவசரத் தரையிறக்கத்திற்கு அனுமதி கோரி அவர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளின்படி தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமானம் தரையிறங்கும் இடத்தின் அருகே தயார்நிலையில் வைக்கப்பட்டன. அதன் பின்னர் விமானம் பத்திரமாக 2.20 மணிக்கு அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கிய பின்னர் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது என்று விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன.
 

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

போக்குவரத்து திட்டத்துக்கு ரூ.19 லட்சம் கோடி

அமெரிக்காவில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மேம்பாட்டுக்கான திட்டப் பணிகளுக்கு 30,000 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18.59 லட்சம் கோடி) அதிபர் ஒபாமா ஒதுக்கீடு செய்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, அதிபராக 2ஆவது முறையாக பொறுப்பேற்ற பின் நிலவும் அரசியல் மந்த நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த அறிவிப்பை ஒபாமா வெளியிட்டிருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிதி ஒதுக்கீட்டுத் திட்டம், செப்டம்பர் மாதம் காலாவதியாகவுள்ள தற்போதைய போக்குவரத்து நிதி மசோதாவுக்குப் பதிலாக இருக்கும்.

போக்குவரத்துக் கட்டமைப்புகளை வரும் ஆண்டுகளில் மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு நிதித் திட்டத்தை அறிவித்துள்ள ஒபாமா, குடியரசு கட்சி எம்.பி.க்களின் அவநம்பிக்கையில் இருந்து வெற்றி காண முடியும் என நம்புகிறார்.
இந்த நிதி தொடர்பான விவரங்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தெரியவரும்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

நீர்மூழ்கிக் கப்பல் விபத்து : 2 உயர் அதிகாரிகள்

 மும்பை அருகே கடலுக்கடியில் சென்று கொண்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் தேடப்பட்டு வந்த 2 அதிகாரிகள் கப்பலிலேயே பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியக் கடற்படையில், ரஷியாவில் இருந்து வாங்கப்பட்ட ஐ.என்.எஸ். சிந்துரத்னா என்னும் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல், மும்பையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் புதன்கிழமை காலை கடலுக்கடியில் சென்று கொண்டிருந்தது. அதில் 70 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இருந்தனர்.

அப்போது நீர்மூழ்கிக் கப்பலின் 3வது தளத்திலுள்ள வீரர்கள் தங்குமிடத்தில், திடீரென புகை பரவியது. இதனையடுத்து நீர்முழ்கியில் இருக்கும் அவசரகால தீயணைப்புக் கருவியை இயக்கி அந்தப் புகையை வீரர்கள் கட்டுப்படுத்தினர். இருப்பினும் புகையில் சிக்கி 7 வீரர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு, ஹெலிகாப்டர்கள் மூலமாக மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்தின்போது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 2 அதிகாரிகளின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை. நீர்மூழ்கியில் உள்ள ஏதேனும் ஓரு அறையில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன், 26 பிப்ரவரி, 2014

நான் சாகப்போகிறேன்! தூது அனுப்பிவிட்டு சிறுவன்

அமெரிக்காவில் 15 வயது சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி என்ற 13 வயது இச்சிறுவன் 15 நிமிடங்களுக்கு முன் பேஸ்புக்கில் நான் சாகப்போகிறேன் என்று செய்தி வெளியிட்டுள்ளான். தற்கொலை செய்துகொள்வதை பார்த்த சிறுவனின் அக்கா உடனே பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவனின் இறப்பு குறித்து அவனது தாயார் லங்காசாயர் கூறுகையில், கடந்த வருடம் 25ம் திகதி கிரடிட் கார்ட் வாங்கினேன், எனக்கு தெரியாமலேயே எனது கிரடிட் கார்டு அட்டையை எனது மகன் எடுத்துள்ளான். கிரடிட் கார்ட்டை பயன்படுத்தி 422 டொலர்கள் விளையாட்டிற்காக இணையதளம் வழியாக பர்ச்சஸ் செய்துள்ளான். இந்த செய்தி எனக்கு நான்கு நாட்களுக்கு பின்னர் தான் தெரியவந்தது. இதனை நான் வன்மையாக கண்டித்தேன், அவன் இவ்வளவு பணத்தை செலவு செய்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எனது மகன் நேற்று மாலை 4.20 மணி அளவில் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தான், பின்னர் 5 மணிக்கு அழைத்தபோது அவன் வர மறுத்துவிட்டான் அவனது அக்கா மாடிக்கு சென்று அழைத்தபோது அவன் வர மறுத்துவிட்டான் என்றம் பின்னர் 6.30 மணி அளவில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது மிகவும் அதிர்சியை அளிக்கிறது

 

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

பாக்கெட் உணவுகளால் ஆபத்து! மக்களுக்கு எச்சரிக்கை

 பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் ஆபத்தை விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில், உணவு பொருட்களை பேக்கிங் செய்யும் போது பாதுகாப்பாக மற்றும் பதப்படுத்துவற்காக பார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் இந்த பொருள், புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது.

தாகத்தை தணிப்பதற்காக குடிக்கும் குளிர்பானங்களை சேமிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் சாப்பாட்டு மேஜையில் உள்ள தட்டுகள் போன்ற பொருட்களில் பார்மால்டிஹைடு வேதி பொருள் சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது.
இதுதவிர உணவை பாதுகாக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும்.

தற்போது உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவது அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரம் என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்ப்பது நலம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
 

புதன், 19 பிப்ரவரி, 2014

தகவல்அபாய நிலையில் பத்திரிக்கையாளர்கள்!

 உலகம் முழுவதிலும் கடந்தாண்டு மட்டும் 134 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
லண்டனை சேர்ந்த சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம் London-based International News Safety Institute(INSI), ஆபத்தான இடங்களில் செய்திகள் சேகரிக்கும் பத்திரிக்கை நிரூபர்களுக்கு பாதுகாப்பு பயிற்சியை வழங்கி வருகின்றது.
இந்நிறுவனம் கடந்தாண்டு உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளை பற்றி ஆய்வு செய்தது.
இதில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 134 பத்திரிக்கையாளர்கள், ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் 65 பேர் சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்சில் 14 பேரும், இந்தியாவில் 13 பேரும் மற்றும் பாகிஸ்தானில் 9 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான நபர்கள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே குறிவைத்து கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உலகின் முன்னணி செய்தி அமைப்புகளின் நிதியுதவியுடன் கடந்த 1996ம் ஆண்டிலிருந்து ஆய்வில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

வியாழன், 13 பிப்ரவரி, 2014

விமான விபத்து: தவறான தகவல்களால் சர்ச்சை

அல்ஜீரியாவில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வழங்கிய தகவல்கள் தவறானவை என அல்ஜீரிய அரசாங்கமும் இராணுவமும் அறிவித்துள்ளன.
அல்ஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் 103 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

99 இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் பணித்த விமானத்தில் அனைவரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் குறித்த விமானத்தில் 78 பேர் பயணித்ததாக அல்ஜீரிய இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமிருந்த 77 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சீரற்ற வானிலையினால் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.