siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

ஒன்லைனில் கணனி வைரஸ்களை ஸ்கான் செய்வதற்கு

 30.யூலை 2012,
கணனிகளில் தொற்றிக் கொண்டு தொல்லைகளைத் தரும் வைரஸ்களை இல்லாது ஒழிப்பதற்கு, கணனிகளில் நிறுவிப் பயன்படுத்தும் பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அதேபோல சில ஒன்லைன் வைரஸ் ஸ்கானர்களும் காணப்படுகின்றன.
அவற்றின் அடிப்படையில் தற்போது Avira வும், Cloud Protection எனும் முற்றிலும் இலவசமான தனது ஒன்லைன் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலும் இலகுவாகவும், வேகமாகவும் கணனிகளை ஸ்கான் செய்ய முடிவதுடன், புதிய அப்டேட்களின் பயன்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு காணப்படுகின்றது.
மேலும் கணனியில் இதனுடன் தொடர்பான அதிகளவு கோப்புக்களை சேமிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனினும் 1.5 MB கோப்பு அளவுடைய சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்

உடல் எடை எளிதில் குறைய

 30. யூலை 2012,
ஐஸ் கட்டியை சாப்பிடுறவங்களா நீங்க? அதனால் ஒரு நன்மை இருக்கிறது. என்னவென்றால், ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் உடலில் இருக்கும் அதிகமான பவுண்டுகள் குறையுமாம். 1. எப்போது ஐஸ் கட்டிகளை சாப்பிடுகிறோமோ, அப்போது உடலில் இருக்கும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கரைகிறது.
ஏனெனில் ஏற்கனவே நமது உடலில் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையானது இருக்கும். அதில் மேலும் இந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால், உடலில் வெப்பநிலை அதிகரித்து, உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புகள் மற்றும் கலோரியை கரைத்து விடுகின்றது.
2. ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால் வேறு எந்த உணவையும் உண்ணக்கூடாது என்று கட்டுப்பாடு எல்லாம் இல்லை. எது வேண்டுமானாலும் உண்ணலாம். ஆனால் உண்டப் பின் கண்டிப்பாக ஐஸ்கட்டிகளை சாப்பிட வேண்டும். இதனால் உடல் எடை எளிதாக குறையும்.
3. பசியைக் கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறைகிறதோ, அதேப் போல் தான் ஐஸ் கட்டிகளும் அதில் ஒன்று. ஏனெனில் கிரீன் டீ குடித்தால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே நன்மை தான் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டாலும் கிடைக்கும்.
4. ஐஸ் கட்டியும் ஒரு பசியைத் தடுக்கும் பொருள். இதனால் உட்கொள்வதால் உடல் எடையானது விரைவில் குறையும்.
5. எப்போதெல்லாம் பசி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பசியானது அடங்கிவிடும். ஆகவே உடலில் கலோரிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். அதனால் எடையும் குறையும்.
6. ஐஸ் தண்ணீருடன் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போட்டு குடிக்க வேண்டும். அது பற்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். ஆனால் அப்படியே ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் பற்கள் வலுவை இழக்கும். ஆகவே அதனை தண்ணீராகத் தான் குடிக்க வேண்டும்.
7. எப்போது எடை குறைந்தது போல் உணர்கிறீர்களோ, அப்போது அந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.
அளவுக்கு அதிகமாக ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால், அது பற்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக ஐஸ் கட்டிகளை எந்த காரணம் கொண்டும் கடித்து சாப்பிட வேண்டாம். மேலும் ஐஸ் உடலில் இருமல், தொண்டை வலி போன்றவற்றை ஏற்படுத்தி விடும்.
ஆகவே எடை குறைய வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான்.

ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியாகிறது விண்டோஸ் 8














 30. யூலை2012.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம் பொதுமக்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கணணிகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், தங்கள் கணணிகளில் இதனை பதிந்தே விற்கும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும்.
அதனை மற்ற மதர்போர்டு உள்ள கணணிக்கு மாற்ற முடியாது. எனவே இன்னொரு புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் என எண்ணினால், புதிய விண்டோஸ் 8 ஒன்று வாங்க வேண்டியதிருக்கும்.
ஏற்கனவே உள்ள இயங்குதளங்களை, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திட விரும்புபவர்களுக்கு, அதற்கான கட்டணமாக 40 டொலர் செலுத்திய பின்னர் உரிமம் வழங்கப்படும். மூன்று வாரங்களுக்கு முன்னர், ஒக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நாள் குறிக்காமல், மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.
இப்போது சரியாக என்று கிடைக்கும் என தன் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 இயங்குதளம் அதன் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தினை உண்டாக்கப் போகிறது.
முதல் முறையாக இரு வேறு வகை கணணி சாதனங்களில் இயங்கும் வகையில் ஓர் இயங்குதளத்தினை மைக்ரோசாப்ட் வழங்க இருக்கிறது.
டெஸ்க்டாப் மற்றும் டேப்ள்ட் பிசி மட்டுமின்றி, விண்டோஸ் போனிலும் இது இயங்கும். மைக்ரோசாப்ட் அறிவித்த சர்பேஸ் டேப்ளட் பிசியும் இதனுடன் சேர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
2011ஆம் ஆண்டில் நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான கண்காட்சியில், விண்டோஸ் 8 குறித்த திட்டவரைவை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
சிப் ஒன்றில் இது சிஸ்டமாகக் கிடைக்கும் எனக் கூறிய போது, அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். அடுத்து ஜூன் 1, 2011 அன்று கம்ப்யூட்டக்ஸ் 2011ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.
அன்று அறிவிக்கப்பட்ட விண்டோஸ் மெட்ரோ இன்டர்பேஸ், மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. அதே நேரத்தில் பழையவகை விண்டோஸ் திரையும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் அதிவேகமாக விண்டோஸ் 8 பூட் ஆகும், யு.எஸ்.பி. 3 கிடைக்கும், விண்டோஸ் ஸ்டோருக்கான இணைப்பு தரப்படும்.
யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் இயக்கலாம் என்ற புதிய தகவல்கள் கணணி பயன்படுத்துபவர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன

இரைப்பை புற்றுநோயை தடுப்பது எப்படி?

 29 யூலை 2012,
முறையான உணவு முறை இன்றி வாய்க்கு பிடித்ததை எல்லாம் சாப்பிடுதல், பரபரப்பான வாழ்க்கை முறையால் ஏற்படும் டென்ஷன் போன்ற பல காரணங்கள் இரைப்பை புற்றுநோய் உருவாகுகிறது. அல்சர், வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்பு, புகைபிடித்தல், மது போன்ற பழக்கங்களால் 30 வயதிலேயே இரைப்பை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரைப்பை புற்றுநோய் அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது. இப்போது 30 வயது முதல் 35 வயதுக்குள் இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ளது.
இரைப்பையில் புற்றுநோய் உருவாக ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமியும் காரணம். இது முதலில் இரைப்பையில் அல்சரை உருவாக்குகிறது.
அந்த அல்சரே, புற்றுநோய் எனும் அடுத்த கட்டத்தை அடைகிறது. புகைபிடித்தல், புகையிலை போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கும் இரைப்பையில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
வயிற்றுப் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் காரணமாக இரைப்பையின் உள்பக்க திசுக்களின் மீது பித்தநீர் பட்டுக்கொண்டே இருக்கும். நாளடைவில் இதுவே புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது.
மதுப்பழக்கம் மற்றும் மசாலா கலந்த உணவுகளும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இரைப்பையின் உள்பகுதியில் ஏற்ப டும் பாலிப்ஸ் என அழைக்கப்படும் சிறு சிறு கட்டிகளும் நாளடைவில் புற்றுநோய் கட்டிகளாக மாறலாம். பரம்பரைக் காரணங்களாலும் இந்நோய் ஏற்படலாம்.
இரைப்பையில் ஏற்படும் புற்றுநோய் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். முதல் கட்டமாக பசி குறைந்து எடை குறையும். அப்போதே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஆனால் பசியின்மை மற்றும் எடை குறைதலை மக்கள் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வதால் புற்றுநோயை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்து கொள்ள முடியாமல் போகிறது. வெளிப்புற அறிகுறிகளை வைத்தே எந்த இடத்தில் புற்றுநோய் வந்துள்ளது என தெரிந்து கொள்ள முடியும்.
உணவுக்குழாய் மற்றும் இரைப்பை சேரும் இடத்தில் புற்றுநோய் இருந்தால் உணவு விழுங்குவதற்கு சிரமம் ஏற்படும். உணவுக்குழாய் புற்றுநோய் எனில் அதன் பாதிப்பு இரைப்பையின் மேல் புறத்தில் வரும். சிறு குடலோடு சேரும் இரைப்பையின் கடைசிப் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அப்பகுதி அடைபட்டு விடும்.
இதனால் சிறு குடலுக்குள் உணவைத் தள்ள இரைப்பை சிரமப்படும். அப்போது வயிற்றுக்குள் பந்து உருள்வது போன்ற உணர்வு இருக்கும். பின்னர் வாந்தி ஏற்படும். சிலருக்கு இரைப்பை புற்றுநோய் எந்த அறிகுறியும் இன்றி வளர்ந்து பின்னர் கல்லீரல் அல்லது நுரையீரலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.
இதன் அடுத்த கட்டமாக கல்லீரல் வீக்கம் இருக்கலாம். இது புற்றுநோயின் முற்றிய நிலை. கல்லீரலை அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து கண்டறியலாம். இரைப்பை புற்றுநோய் முற்றும் வரை விடாமல் ஆரம்ப அறிகுறிகளை முறையாக பரிசோதிப்பதன் மூலம் நோயை குணப்படுத்த முடியும்.
பாதுகாப்பு முறை: இரைப்பை புற்றுநோயை தவிர்க்க வயிற்றில் அல்சர் ஏற்படுவதற்கான காரணிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சத்தான உணவுமுறை, உடற்பயிற்சி அவசியம். டென்ஷன் குறைக்க யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட மனப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
அசைவம், மசாலா கலந்த உணவுகள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் அதைக் கைவிடுவது நல்லது.
ஜீரணப் பிரச்னை, பசியின்மை மற்றும் எடை குறைதல் உள்ளிட்ட பிரச்னைகள் துவங்கும் போதே அதற்கான பரிசோதனைகள் செய்து புற்றுநோயா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்

கத்தி முனையில் 8 வயது சிறுமி மீது பாலியல் ரீதியான தாக்குதல்

 29 யூலை 2012,
8 வயது சிறுமியை கத்தி முனையில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபருக்கு, 6 1/2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாலியல் வன்முறை தவிர பாலியல் துன்புறுத்தல் மற்றும் காயம் ஏற்படுத்துதல் பிரிவுகளிலும் இவன் மீது வழக்குத் தொடரப்பட்டது.
சம்பவ தினத்தன்று அதிகளவு மது அருந்தி விட்டு, கொகைன் என்ற போதைப் பொருளையும் எடுத்துக் கொண்டுள்ளான்.
இதனால் தான் செய்வது என்னவென்று தெரியாமல் இத்தகைய தவறை செய்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளான்.
மேலும் தான் செய்த இந்த செயலுக்காக வெட்கப்படுவதாகவும் தெரிவித்தான்.
அரசு வழக்கறிஞர் ஆண்டிரியா லேப்பிங் வாதிடுகையில், இவன் இரக்கமற்ற முறையில் கொடூரமாக நடந்திருக்கிறான். அந்தச் சிறுமியைப் பிடித்திழுத்துக் கொண்டு போய் கழிப்பறைக்குள் வைத்து கத்தியைக் காட்டி மிரட்டி முகத்தைக் கடித்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டு உள்ளான்.
சமூகத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இவ்வாறு மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட அவன், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே தான் செய்தான் என்று அவனுக்கு எதிராகக் கடுமையாக வாதாடினார்

வட மாகாணசபைத் தேர்தல் 2013 பெப்ரவரியில் நடத்த தீர்மானம்

 
 29 யூலை 2012,
வட மாகாணசபைக்கான தேர்தலை 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பெப்ரவரி மாத இறுதியில் அதாவது 26 ம் திகதியளவில் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ
முன்னதாக இந்தத் தேர்தலை அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதிலும், ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வுகள் அடுத்த வருட பிற்பாதியில் நடைபெறவுள்ளதன் காரணமான முந்திக் கொண்டு தேர்தலை நடத்துவதற்கு முனைப்பு காட்டிவருகின்றது.
இதேவேளை வடமாகாணசபைத் தேர்தலின் முதலமைச்ர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.
வடமாகாணத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த அரசு தீர்மானித்திருந்த போதும், தற்போது இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்திருக்கும் அரசாங்கம், வட மாகாணத்தில் பிரபல்யம் பெற்ற புத்திஜீவி ஒருவரை தேர்தல் களத்தில் ஈடுபடுத்துவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் போராசிரியர்கள் சிலரினதும் ஓய்வு பெற்ற கல்விமான்கள் சிலரினதும் பெயர்களும் இதற்காக பரீசீலிக்கப்பட்டு வருவதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆண்டுதோறும் 2000 பேர் வரை வாய்ப் புற்று நோயினால் பாதிப்பு!

 
 29 யூலை 2012,
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் வரை வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரக் கல்விப் பணியகம் தெரிவித்துள்ளது..
அத்துடன் நாளாந்தம் இருவர் வீதம் உயிரிழப்பதாகவும், குறித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் ஆண்களாகவே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
புகைத்தல், போதைப்பொருள் பாவனை, வெற்றிலைப் பாவனை போன்ற காரணங்களினாலேயே வாய்ப்புற்று நோய் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாய்ப்புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் நோயை முற்றாக குணப்படுத்த முடியும் என சுகாதார கல்விப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது

நல்லூர் உற்சவம் கொடியேற்றம் தொடங்கி இற்றைவரை 20 பவுண் தங்க

 
 29 யூலை 2012,
நல்லூர்க் கந்தன் கோவிலில் கொடியேற்ற நாள் தொடக்கம் நேற்று வரையான காலப்பகுதியில் 20 பவுன் நகைகள் வரை கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திருவிழா நாட்களில் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதன் காரணமாக திருட்டுச் சம்வங்களும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
கோவில் வளாகத்தில் பெண்களும், பக்தர்களின் வேடமணிந்து திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கோயிலில் தற்போது 600 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் 150 பேர் கூடுதலாக அண்மையில் இணைக்கப்பட்டுள்ளனர்

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட படகு விபத்து: நடுக்கடலில் பயணிகள் தத்தளிப்பு

 
 29 யூலை 2012,
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்டு நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி தத்தளித்துக் கொண்டிருந்த 28 பேர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து 300 மீற்றர் கடல் எல்லை தூரத்தில் இவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், படகில் சென்றவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு, இன்று அதிகாலை காலி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இவர்கள் கடந்த 13ஆம் திகதி வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்களில் பெண்கள் நால்வரும் சிறுவன் ஒருவரும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ். அரியாலையில் இனந்தெரியாதோரால் காந்தி சிலை உடைப்பு

 
 29 யூலை 2012,
யாழ். அரியாலை மகாத்மா காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்னால் உள்ள மகாத்மா காந்திசிலை நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிலை உடைப்பு தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி குணசேகர தெரிவித்துள்ளார்.