29 யூலை 2012, |
8 வயது சிறுமியை கத்தி
முனையில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபருக்கு, 6 1/2 ஆண்டு சிறைத் தண்டனை
விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பாலியல் வன்முறை தவிர பாலியல் துன்புறுத்தல் மற்றும் காயம் ஏற்படுத்துதல்
பிரிவுகளிலும் இவன் மீது வழக்குத் தொடரப்பட்டது. சம்பவ தினத்தன்று அதிகளவு மது அருந்தி விட்டு, கொகைன் என்ற போதைப் பொருளையும் எடுத்துக் கொண்டுள்ளான். இதனால் தான் செய்வது என்னவென்று தெரியாமல் இத்தகைய தவறை செய்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளான். மேலும் தான் செய்த இந்த செயலுக்காக வெட்கப்படுவதாகவும் தெரிவித்தான். அரசு வழக்கறிஞர் ஆண்டிரியா லேப்பிங் வாதிடுகையில், இவன் இரக்கமற்ற முறையில் கொடூரமாக நடந்திருக்கிறான். அந்தச் சிறுமியைப் பிடித்திழுத்துக் கொண்டு போய் கழிப்பறைக்குள் வைத்து கத்தியைக் காட்டி மிரட்டி முகத்தைக் கடித்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டு உள்ளான். சமூகத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இவ்வாறு மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட அவன், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே தான் செய்தான் என்று அவனுக்கு எதிராகக் கடுமையாக வாதாடினார் |
ஞாயிறு, 29 ஜூலை, 2012
கத்தி முனையில் 8 வயது சிறுமி மீது பாலியல் ரீதியான தாக்குதல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக