siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 29 ஜூலை, 2012

பாஸ் நடைமுறையால் மன்னார் மீனவர்களுக்கு பாதிப்பு

_
29.07.2012.மன்னார் மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருப்பதினால் தாம் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தின் அனைத்து மீன் பிடி துறைமுகங்களுக்கு அருகாமையிலும் கடற்படையினருடைய சோதனைச்சாவடிகள் காணப்படுகின்றன.

மீனவர்கள் குறித்த சோதனைச்சாவடிக்கு சென்று கடற்படையினரிடம் தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய ஆவணங்களை சமர்ப்பித்தால் கடலுக்குள் செல்லுவதற்கான பாஸை வழங்குகின்றனர். அதனைக்கொண்டே கடலுக்குள் செல்ல வேண்டும்.

கடற்படையினர் சில நேரங்களில் கடலில் மீனவர்களிடம் சோதனைகளை மேற்கொள்ளும் போது பாஸ் இல்லாது விட்டால் கடுமையாகத்தாக்குவதாகவும் அச்சுறுத்துவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாஸ் நடைமுறையினால் உரிய நேரத்திற்கு தொழிலுக்குச் சென்று கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடற்தொழிலுக்கான புதிய பாஸைப் பெற்றுக்கொள்ளுவதற்கு மீனவர்கள் ஒவ்வெருவரும் நீண்ட நாட்கள் பாதுகாப்புத்தரப்பினரைத் தேடி அலைந்து திரிவதாகத் தெரிவிக்கின்றனர்.

விண்ணப்பப்படிவம் ஒன்றில் சுமார் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் கையொப்பத்தினை பெற்ற பின்னரே புதிய பாஸ் வழங்கப்படுகின்றது. ஆனால் கடற்படையினரிடம் இருந்து தற்போது பல இடங்களில் தொழிலுக்குச்செல்லும் மீனவர்களுக்கு புதிய பாஸ் இன்னும் வரவில்லை என்றும் இதனால் பல மாதக்கணக்காக தொழிலுக்குச்செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் தமது குடும்பம் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

-மன்னார் சௌத்பார் பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்கள் எவ்வித தங்கு தடையும் இன்றி கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுக்குக் கடற்படையினர் பாதுகாப்புகளை வழங்கி வருகின்றனர்.

ஆனால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்,முஸ்ஸிம் மீனவர்கள் தொடர்ந்தும் பல பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

0 comments:

கருத்துரையிடுக