நேட்டோ படைகளுக்கான வாகனப் போக்குவரத்தை நிறுத்தியது பாகிஸ்தான் |
29.யூலை 2012, |
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகளுக்கான வாகனப் போக்குவரத்தை பாகிஸ்தான்
தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகளுக்குத் தேவையான எரிபொருட்கள்
பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. கடந்தாண்டு நவம்பர் மாதம் நேட்டோ படைகள் தவறுதலாக தாக்குதல் நடத்தியதில், பாகிஸ்தானிய வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். இதற்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்காத காரணத்தால், ஆப்கானிஸ்தானுக்கான பாதையை பாகிஸ்தான் மூடிவிட்டது. இதனால் நேட்டோ படைகளுக்கான பொருட்களை விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டார். அதன் பின் நேட்டோ படைகளுக்கான எரிபொருள் வாகனங்கள் செல்ல, பாகிஸ்தான் அனுமதியளித்தது. இந்நிலையில் நேட்டோ வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியளித்தால், அந்த வாகனங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என தலிபான்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். பாகிஸ்தான் பகுதியில் இந்த வாகனங்களை தகர்க்க முடியாத காரணத்தால், ஆப்கானிஸ்தானில் உஸ்பெகிஸ்தான் எல்லையையொட்டிய சமாங்கன் மாகாணத்தில் நேட்டோ வாகனங்கள் செல்லும் பாதையில் தலிபான்கள் கடந்த 18ஆம் திகதி வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில் எரிபொருள் நிரப்பிய டாங்கர் லொறி வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீயில், அருகே இருந்த மற்ற 23 லொறிகளும் எரிந்து சாம்பலாகின. இதற்கிடையே கடந்த 24ஆம் திகதி பெஷாவரில் நேட்டோ படைகளுக்கான வாகனத்தை ஓட்டிய டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இது போன்ற தாக்குதலை நடத்த தலிபான்கள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, நேட்டோ வாகனங்களுக்கான போக்குவரத்தை பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தெரியப்படுத்தியுள்ளது. |
ஞாயிறு, 29 ஜூலை, 2012
நேட்டோ படைகளுக்கான வாகனப் போக்குவரத்தை நிறுத்தியது பாகிஸ்தான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக