29 யூலை 2012, |
இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற
பிரிட்டன் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த அனுஜ் பித்வி(வயது 23),
பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து
வந்தார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஸ்டேபில்டன்(வயது 21) என்ற நபர் திடீரென பித்வியை சுட்டுக் கொன்றான். இதன் பிறகு பொலிசார் ஸ்டேபில்டனை கைது செய்தனர். அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே ஸ்டேபில்டன் மீதான கொலை வழக்கு, மான்செஸ்டரின் கிரவுன் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திமோதி கிங் தன் தீர்ப்பில் குறிப்பிடுகையில், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாததால் ஏற்பட்ட விளைவு தான், கொலை செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது. ஸ்டேபில்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன். 30 ஆண்டுகள் வரை ஸ்டேபில்டன் பரோலில் வெளிவர முடியாது என்றார். அனுஜ் பித்வியின் தந்தை சுபாஷ் குறிப்பிடுகையில், நேற்று நீதிமன்றத்திற்கு வந்த போது கூட ஸ்டேபில்டன் தான் செய்த குற்றத்துக்காக கவலைப்படாமல் அலட்சியமாக எங்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் என்றார். |
ஞாயிறு, 29 ஜூலை, 2012
பிரிட்டனில் மாணவரை சுட்டுக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக