siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 29 ஜூலை, 2012

இந்து வாலிபர் முஸ்லிமாக மதமாற்றம்: நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு

 29 யூலை 2012,
இந்து வாலிபர் ஒருவரை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி, பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும், குறிப்பாக இந்து பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்வதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், இந்து வாலிபர் சுனில் என்பவரை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி ஏஆர்ஒய் டிவி சேனலில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது. இதனால் சிறுபான்மை இந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் மனித உரிமை சேவகர் அன்சார் பர்னே கூறுகையில், மயா கான் என்பவரும் எனது சகோதரர் சரீம் பர்னேவும் சேர்ந்து, இந்து வாலிபர் சுனிலை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடியாக நடத்தி காட்டி உள்ளனர்.
இந்த மதமாதற்றம் ஒரு நாடகம். உண்மையிலேயே மதமாற்றத்துக்கு சுனில் விரும்பி இருந்தால், அதை நேரடியாக ஒளிபரப்ப வேண்டிய அவசியம் இல்லை. எனவே, எனது அன்சார் பர்னே அறக்கட்டளையில் இருந்து சகோதரர் சரீம் பர்னேவை நீக்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அன்சார் பர்னே நடத்தும் அறக்கட்டளையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்தான் சுனில். மதமாற்றம் செய்யும் போது தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.
மதமாற்றம் செய்த பின்னர், சுனிலுக்கு என்ன முஸ்லிம் பெயர் வைக்கலாம் என்றும் பார்வையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மேலும் முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு மாதத்தில் மதமாற்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக