29.07.2012
மண்டபம்: துப்பாக்கி முனையில் சிறைபிடித்து சென்று சங்கிலியால் கட்டிபோட்டு இலங்கை சிறையில் கொடுமைப்படுத்தியதாக ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் 23 பேரும் கண்ணீருடன் கூறினர்.ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21ம் தேதி இந்திய எல்லைக்குள் மீன் பிடித்தபோது, 3 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை, 5 விசைப்படகுகளுடன் சிறைபிடித்தனர். அவர்களை இலங்கையில் உள்ள தலைமன்னார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதை கண்டித்து 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்தது.இதனிடையே, மன்னார் நீதிமன்றம் நேற்று முன்தினம் 23 மீனவர்களை விடுவித்தது. சர்வதேச எல்லையில் ஒப்படைக்கப்பட்ட மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கப்பல் மூலம் மண்டபம் கடல் பகுதிக்கு நேற்று முன்தினம் (27ம் தேதி) இரவு 8 மணியளவில் அழைத்து வரப்பட்டனர். மீனவர்கள் கடலிலேயே 15 மணி நேரம் காக்கவைத்தனர். நேற்று காலை 10 மணியளவில் கப்பலில் காத்திருந்த 23 மீனவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.விடுதலையான மீனவர் ஒருவர் கூறுகையில், ‘கடந்த 21ம் தேதி இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த எங்களை இலங்கை கடற்படையினர் கத்தி, துப்பாக்கி முனையில் மிரட்டி சிறைப்பிடித்தனர்.
அவர்களுடன் வர மறுத்தால் சுட்டுக்கொன்றுவிடுவோம் என மிரட்டினர். இதனால் அச்சமடைந்த நாங்கள் வேறு வரூ.யின்றி அவர்களுடன் சென்றோம்.இலங்கை சிறையில் எங்களை கரூ.ப்பறையில் சங்கிலியால் கட்டிப்போட்டு துன்புறுத்தினர். இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்ட நாங்கள் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மண்டபம் கடல் பகுதிக்கு வந்தோம். 15 மணி நேரத்திற்கு மேலாக கடலில் எங்களை இந்திய கடலோரக் காவல் படையினர் பட்டினியுடன் காக்க வைத்தனர்‘ என்றார். மீனவர்கள் காத்திருந்தது ஏன்? இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்து வருகின்றன. இம்முறை தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் கொடுமைப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்த தகவல் வெளியே தெரிந்தால் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் நடுக்கடலில் தமிழக மீனவர்களை 15 மணி நேரம் இந்திய கடலோர காவல்படையினர் காக்க வைத்தனர். நேற்று காலை கப்பலில் இருந்து படகு மூலம் மண்டபம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு பத்திரிக்கையாளர்கள் போட்டோ, பேட்டி எடுக்கவும் அனுமதிக்கவில்லை. மேலும், விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் மீனவர்களையும் சந்திக்க முடியாமல் உறவினர்கள் நீண்ட நேரம் தவித்தனர்
0 comments:
கருத்துரையிடுக