| 04.09.2012.BY.rajah.கணனிகளின் அடிப்படையில்
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் கற்றலும் மிக பிரதான பங்கை வகிக்கின்றது. இதனால்
அன்றாடம் பல்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள Collins Revision Algebra
எனும் மென்பொருளானது கணித செயற்பாடுகளை துல்லியமாக செய்துபார்ப்பதற்கும், மீட்டல்
செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. இம்மென்பொருளில் 70 வகையான மீட்டல்களும், 290 பயிற்சிகள், மற்றுமு் 30 வீடியோ வழிகாட்டல்களையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் அன்ரோயிட், அப்பிள் சாதனங்களில் செயற்படக்கூடியவாறு இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இணையதள முகவரி |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 4 செப்டம்பர், 2012
Collins Revision Algebra: மாணவர்களுக்கு அவசியமான மென்பொருள்
செவ்வாய், செப்டம்பர் 04, 2012
காணொளி
நகங்களை பராமரிப்பதற்கு
செவ்வாய், செப்டம்பர் 04, 2012
இணைய செய்தி
| 04.09.2012.BY.rajah.நகங்கள்
கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே
அவற்றை பராமரிப்பது மிகவும் அவசியம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில்
நகத்துக்கும் பங்கு உண்டு. உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் நகம் அதை வெளிக்காட்டி விடும். எனவே நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். நகங்களை முறையாக பராமரிக்க பலர் அக்கறை எடுத்து கொள்வது கிடையாது. வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும். சில டென்ஷன் பார்ட்டிகளுக்கும் குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால் எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும். உணவு சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். பெண்கள் பாத்திரம் தேய்த்த பின்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ரசாயனங்கள் நகக்கணுக்களில் தங்கிவிட்டால் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதேபோல் மலம் கழித்த பின்னரும் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். குழந்தை பருவம் முதலே இத்தகைய பழக்கங்களை வாடிக்கையாக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் நக பராமரிப்பில் தனிகவனம் செலுத்துவது அவசியம். கை நகங்களை போலவே கால் நகங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும். பெரும்பாலான நோய்தொற்றுகளுக்கு நகமே முக்கிய காரணமாக உள்ளது. எனவே நகங்களை முறையாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம். பெடிக்யூர், மெனிக்யூர் என நகங்களை பராமரிக்க பிரத்யேக பராமரிப்பு முறைகளும் சாதனங்களும் உள்ளன. இதற்கென அழகு நிலையங்கள் இருந்தாலும் வீட்டிலேயே செய்து கொள்வதும் எளிது. வாரத்தில் 2 அல்லது 3 முறை இந்த பராமரிப்பு முறையை செய்து கொள்ளலாம். நகங்களில் அடிபட்டாலோ, சொத்தை, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் இருந்தாலோ மருத்துவ சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது. மருத்துவ குணம் கொண்ட மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இடுவது நகங்களை பாதுகாப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி தரும். கடைகளில் பொடியாகவும், கூழாகவும் கிடைக்கும் மருதாணியில் மருத்துவ குணம் இருப்பதில்லை. தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு பாதுகாப்பானது. அடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும் போது சதைப்பகுதி பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும். நகங்கள் சிலருக்கு உடைந்து போகும். இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணம். உணவில் அதிகம் கால்சியம் சேர்த்துக் கொள்வதாலும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் இந்த பாதிப்பு சரியாகும். சர்க்கரை நோயாளிகள் இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். காய்கறிகள், பழங்கள் என ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் நகங்களை பாதுகாக்கலாம் |
மம்மூட்டி படத்தில் கிரணின் ஆட்டம்
செவ்வாய், செப்டம்பர் 04, 2012
செய்திகள்

04.09.2012.BY.rajah.தமிழில் உருவாகும் புதுவை மாநகரம் படத்தில் கிரண் ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் ஆடியுள்ளார்.
நடிகை கிரண் மறுபடியும் கொலிவுட்டில் கால் பதிக்க உள்ளார்.
புதுவை மாநகரம் படத்தில் வரும் பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட கிரணுக்கு படத்தின் தயாரிப்பாளர் அன்பான கோரிக்கை விடுத்தார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த கிரண், கூடவே சம்பளத்தையும் மிகவும் உயர்த்தி கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர், இப்பாடலில் நடித்தால் மறுபடியும் தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு கிரண், தங்கத்திற்கு என்றுமே மதிப்பு குறையாது. அது கழுத்தில் கிடந்தாலும் சரி, வீட்டில் பூட்டி வைத்தாலும் சரி தங்கம் தங்கம்தான்.
அதுபோலத்தான் நானும் என்று கிரண் பதிலளிக்க தயாரிப்பாளர் அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து இப்படத்தில் ஆட வைத்திருக்கிறார்
கோச்சடையானில் டைட்டானிக் தொழில்நுட்ப கலைஞர்கள்
செவ்வாய், செப்டம்பர் 04, 2012
செய்திகள்

04.09.2012.BYrajah.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படம் விறுவிறுவென வளர்ந்து வருகின்றது.
ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையிடுகிறார்.
தீபிகா படுகோனை நாயகியாக நடிக்க ஆதி, நாசர், சரத்குமாருக்கு முக்கிய வேடங்கள் தரப்பட்டிருக்கின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடிக்கிறார் என்பது சிறப்பம்சம்.
லண்டன் டெஸ்ட்ராய்டு ஸ்டுடியோ, கேரளா திருவனந்தபுரத்தில் இருக்கும் அக்ஸல் ஸ்டுடியோவில் ரஜினி, தீபிகா படுகோன் தொடர்பான காட்சிகளை படம் பிடித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து 'டைட்டானிக்' படத்துக்கு பணியாற்றிய 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் 3 பேர் சென்னை வந்துள்ளனர்.
இப்போது கோச்சடையான் படத்துக்கான கிராஃபிக்ஸ் வேலையில் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
எந்திரன் இசைவெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்தியது போல கோச்சடையான் இசை வெளியீட்டை ஒக்ரோபரில் ஜப்பானில் நடத்துகிறார்கள்.
இதற்காக ரஜினி ஜப்பானிய மொழி கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜியா பயணத்தை முடித்து விட்டு சென்னை வந்தார் ஆர்யா
செவ்வாய், செப்டம்பர் 04, 2012
செய்திகள்

04.09.2012.BYrajah.செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்த ஆர்யா சென்னை திரும்பியுள்ளார்.
ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படம் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியிருக்கிறார் ஆர்யா.
இந்த விடயம் விஷ்ணுவர்தனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் அஜித்- விஷ்ணுவர்தன் இணையும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற போது ஆர்யா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்கினார்கள்.
அதற்கு பிறகு ஆர்யா இரண்டாம் உலகம் படத்திற்காக ஜார்ஜியா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆர்யா திரும்பி இருப்பதால், சென்னையில் அஜீத்- ஆர்யா சம்பந்தப்பட்ட இதர காட்சிகளை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன்.
அதுமட்டுமன்றி ஆர்யா- டாப்ஸி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இப்படத்தின் பெயர் 'ஜெய்தேவ்', 'சுராங்கனி' என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் போஸ்டர்கள் எதுவுமே அதிகாரபூர்வமானது இல்லையாம்.
விரைவில் படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன். இதற்கான புகைப்பட படப்பிடிப்புகள் விரைவில் நடைபெற இருக்கிறது
28ஆம் திகதி வெளியாகிறது தாண்டவம்
செவ்வாய், செப்டம்பர் 04, 2012
செய்திகள்
| 04.09.2012.BY.rajah. |
| யு டிவி நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பான "தாண்டவம்" வருகிற 28ஆம் திகதி வெளியாகிறது. |
|
சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திற்கும் தாண்டவம் படத்தை, இயக்குனர் விஜய்
இயக்கி உள்ளார். ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளன. முக்கியமாக சந்தானத்தின் நகைச்சுவை, விக்ரமின் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது. இந்த படம் சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் சிறந்ததொரு படைப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை |
அழகு பெண்ணின் (உண்மை)புலம்பல்...கவிதை
செவ்வாய், செப்டம்பர் 04, 2012
கவிதைகள்
| ||||||||
கவிதை என்றொரு ஊடகமாம் - அது
களைகள் அனைத்தும் களைந்திடுமாம்.
சிந்தனை சிந்திடும் சான்றோரின் - உயர்
சிந்தைகள் யாவும் சுமந்திடுமாம்.
அரும்பென கற்பனை பூத்திடுமாம் - கட்டிக்
கரும்பென கலைச்சொல் இனித்திடுமாம்.
விருந்தென இதனை படித்திட்டால் - மேலும்
அறுந்திடும் ஆசை பிறந்திடுமாம்.
சாதிக் கொடுமையை சாடிடுமாம் - உயர்
நீதிக்கு தொள்தனை தந்திடுமாம்.
கருவகம் ஆகிடும் உருவகமாய் - அந்த
உருவகம் ஆகிடும் உயிரகமாய்.
அணிநயம் ஆகிடும் அணிகலனாய் - அந்த
அணிகலன் எய்திடும் நனிபயனாய்.
உலகில் இதுபோல் கலையுண்டோ - உடன்
உரைத்திட வாரீர் உயர்ந்தோரே .....
உன்னில் தொலைந்தது,
ஒரு கண்சிமிட்டலால்தான்,
அந்த கண்சிமிட்டும்,
நேரத்தில்தான்,
என் உலகம்,
நனைத்து போகிறது.
ஒரு மழை சாரலை போல
ஒரு கண்சிமிட்டலால்தான்,
அந்த கண்சிமிட்டும்,
நேரத்தில்தான்,
என் உலகம்,
நனைத்து போகிறது.
ஒரு மழை சாரலை போல
கவிதை மழை{பெண் குழந்தையின் எச்சரிக்கை!!!!!]
செவ்வாய், செப்டம்பர் 04, 2012
கவிதைகள்
04.09.2012.BYrajah.அடிக்கடி சண்டை,அவனுக்குரியவளிடம்,
அடுப்பு,
எரிக்க விறகு இல்லை,
ஆனாலும்
ஆண் குழந்தை,
இல்லையென்ற,
சோகம்,
அவனுக்கு.
எப்பொழுதும்,
வெறுப்பின்,
வெளிப்பாடு,
எல்லோர் மீதும்,
பால் சாப்பிட்டு,
முடித்த,
அவனுடைய குழந்தை ,
அரை நித்திரையில்,
திடுக்கிட்டது.
அம்மாவின்,
வயிற்றை ,
தொட்ட போது,
தயார் நிலையில்,
அடுத்த குழந்தை,
எச்சரிக்கை விடுத்தது குழந்தை,
அந்த உயிரிடம்,
வரு முன் யோசி,
ஏற்கனவே இங்கு இருக்கும்,
எல்லோருக்கும்,
அப்பாவின் வாயில்,
சனியன்தான்.
"நீ அடுத்த சனியன்,
ஆகிவிடுவாய் "
நீ பெண்ணாக இருந்தால்,
எச்சரிக்கை,
வெளி வரு முன்னே,
எச்சரிக்கை
அடுப்பு,
எரிக்க விறகு இல்லை,
ஆனாலும்
ஆண் குழந்தை,
இல்லையென்ற,
சோகம்,
அவனுக்கு.
எப்பொழுதும்,
வெறுப்பின்,
வெளிப்பாடு,
எல்லோர் மீதும்,
பால் சாப்பிட்டு,
முடித்த,
அவனுடைய குழந்தை ,
அரை நித்திரையில்,
திடுக்கிட்டது.
அம்மாவின்,
வயிற்றை ,
தொட்ட போது,
தயார் நிலையில்,
அடுத்த குழந்தை,
எச்சரிக்கை விடுத்தது குழந்தை,
அந்த உயிரிடம்,
வரு முன் யோசி,
ஏற்கனவே இங்கு இருக்கும்,
எல்லோருக்கும்,
அப்பாவின் வாயில்,
சனியன்தான்.
"நீ அடுத்த சனியன்,
ஆகிவிடுவாய் "
நீ பெண்ணாக இருந்தால்,
எச்சரிக்கை,
வெளி வரு முன்னே,
எச்சரிக்கை
தமிழ்நாட்டுக்கு செல்வதை தவிருங்கள்: சிங்கள மக்களுக்கு இலங்கை அரசின் வேண்டுகோள்
செவ்வாய், செப்டம்பர் 04, 2012
செய்திகள்
இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு வரும் சிங்களவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறும் இலங்கை வெளிநாட்டமைச்சு, எனவே இலங்கை குடிமக்கள் தங்களது பாதுகாப்பை மனதில் கொண்டு, இனி மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்றும் அது கூறியிருக்கிறது.
சமீப காலங்களில் தமிழ் நாட்டுக்கு வந்த இலங்கை சுற்றுலா பயணிகள், யாத்ரிகர்கள், விளையாட்டு மற்றும் கலாசார துறை தொடர்பானவர்கள், தொழில் முறை பயிற்சிக்காக வருபவர்கள் என பல்தரப்பட்டவர்கள் இது போன்ற அச்சுறுத்துலுக்கு ஆளாவதாக அது கூறியிருக்கிறது.
அதேவேளை, இந்த விடயத்தில் சிங்கள பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை இலங்கை கேட்டிருக்கிறது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















