siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் மன ஓய்வு!'?

         
Wednesday 31 October 2012 .By.Lovi. ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். இது நோயை விரட்டி ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கிறது. எனவே  எவ்வாறு ஓய்வு எடுப்பது என்று தெரிந்துக்கொள்ளவது மிகவும் அவசியம்.
* காமெடியான படங்கள், சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.
* விருப்பப்பட்ட பாடலைக் கேட்பது, ஒரு சில பாடலுக்கு நடனம் புரிதல் போன்றவையால் எத்தகைய பிரச்சனைகளையும் சந்திக்கும் அளவுக்கு மனம் பக்குவம் அடையும்.
* அதிகாலையில் 5 மணிஅளவில் வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும்.
* இரவு உறங்க செல்வதற்கு முன் முழு தினமும் நடந்த நல்லவை தீயவை என்று அனைத்தையும் மனக்கண்முன் கொண்டு வருவதன் மூலம் மனம் முற்றிலும் தூய்மைப்பெற்று ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
* யோகா செய்தல் மிகவும் நல்லது. யோகா வகுப்புகளுக்கு செல்ல இயலாத நிலையில், வாரம் ஒரு முறை யோகா புத்தகம் அல்லது சிடி போட்டு பார்த்து செய்து வந்தால் மனம் உடல் இரண்டும் நல்ல ஓய்வு நிலையை அடையும் வாய்ப்புகள் இருக்கின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனமே, எனவே உங்கள் மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு உங்கள் கையில் என்பதை மனதில் கொள்ளுங்கள்

314 நாட்கள் நடந்து வந்து ஹஜ் பயணத்தை நிறைவு செய்த யாத்திரிகர்

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah{.காணொளி,புகைப்படங்கள்}
போஸ்னியாவை சேர்ந்த யாத்திரிகர் ஒருவர், 5650 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று ஹஜ் பயணத்தை நிறைவு செய்துள்ளார். போஸ்னியாவை சேர்ந்த செனாத் ஹெட்சிக்(வயது 47) என்பவர் பவோனிசி நகரிலிருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 15 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 கிலோ எடை கொண்ட உடைமைகளுடன் ஹஜ் பயணம் மேற்கொண்டார்.
314 நாட்கள், 5650 கிலோ மீற்றர் தூரம் நடந்து செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளை கடந்து தற்போது சவுதி அரேபியா வந்து சேர்ந்துள்ளார்.
வரும் வழியில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளார் செனாத். இவர் பயணம் மேற்கொண்ட டிசம்பர் மாதத்தில் பல்கேரியா நாட்டில் குளிர் மைனஸ் 35 டிகிரி என்று இருந்ததால், நிலையை சமாளிக்க முடியவில்லை.
அத்துடன் சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால், அந்நாட்டை கடப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
கடைசியில் தான் நினைத்தபடி சவுதி அரேபியா வந்து, ஹஜ் பயணத்தை முடித்து கொண்டார்.


நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தூங்கிய விமானிகள் ???

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானிகள் இருவர் தூங்கி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானிகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன. இந்நிலையில் விமானத்தின் முதன்மை விமானி, கழிப்பறைக்கு செல்வதற்காக, சக விமானிகளிடம் விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
சில நிமிடங்கள் கழித்து முதன்மை விமானி, விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு மற்றொரு விமானியிடம் பேச முயன்றார். அவரிடமிருந்தும் பதில் வரவில்லை. மூன்றாவது விமானியை தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.
நிலைமையை உணர்ந்து கொண்ட கேப்டன் விமானிகள் அறைக்கு சென்று பார்த்த போது, விமானிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அதுவரை நடுவானில் விமானம் பறந்து கொண்டே தான் இருந்தது. கேப்டன் எழுப்பியதும் உரிய இடத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போதும் மூன்றாவது விமானி தூங்கி கொண்டே தான் இருந்தார்.
இவர்களது பெயரை பிரிட்டன் விமானத்துறை வெளியிட மறுத்து விட்டது. இது குறித்து விமானிகள் சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகையில், விமானம் பறக்கும் போது அசதி காரணமாக விமானிகள் தூங்குவது சகஜம் தான் என்றனர்.
விமானிகளின் இந்த பாதுகாப்பற்ற செயல் குறித்து விமான அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம்

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பொருட்களை சுமந்தபடி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி உள்ளது டிராகன் விண்கலம். விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக, விண்வெளியில் மிதக்கும் சர்வதேச ஆய்வு மையத்துக்கு பொருள்களைக் கொண்டு செல்லும் பணியை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்தது.
சிஆர்எஸ்-1 என்ற இத்திட்டத்தில் “டிராகன்” எனப் பெயரிடப்பட்ட விண்கலம் 450 கிலோ எடையுள்ள பொருள்களைச் சுமந்தபடி விண்வெளி நிலையத்துக்குச் சென்றது.
அங்கு பொருள்களைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து மாதிரிகள், ஆய்வு முடிவுகள், வன்பொருள்கள் உள்ளிட்ட 758 கிலோ எடையுள்ள பொருள்களைச் சுமந்தபடி வெற்றிகரமாகத் திரும்பியது டிராகன்.
பசிபிக் கடலில் பாராசூட் உதவியுடன் இறங்கிய இந்த ஆளில்லா விண்கலம் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் மீட்கப்பட்டது.

இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது!

         
Tuesday 30 October 2012 .By.Rajah.
அரசாங்கத்தின் உயர் பதவிகள் பலவற்றுக்கு இராணுவத்தினரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றத் உறுப்பினர் கரு ஜெயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
மாவட்டஅரசாங்கஅதிபர்களாகஇராணுவ பிரிகேடியர்களயும், பாடசாலை அதிபர்களாக இராணுவகேர்னல்களையும் நியமிக்க அரசாங்கம் நடவடிக்கைஎடுத்துள்ளதாகஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தற்போது உள்ள காவற்துறை மா அதிபர் என்ற பதவியை நீக்கி, காவற்துறை ஆணையாளர் என்ற புதிய பதவியை ஏற்படுத்த விருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இராணுவ ஆட்சியில் நடைபெறும் ஒன்று என்று சுட்டிக்காட்டிய அவர், இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

காங்கேசன்துறையை சூறாவளி தாக்கலாம்!?

Tuesday 30 October 2012.By.Rajah.எதிர்பார்க்கப்பட்டதைப் போல நேற்றைய தினம் இலங்கையை சூறாவளி எதுவும் தாக்கவில்லை, எனினும், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த சூறாவளி இலங்கையை ஊடறுத்து செல்லலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. தற்போது முல்லைத்தீவில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தாழமுக்க நிலையில், இன்று பிற்பகலில் காங்கேசன் துறை ஊடாக இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறும் என்று கூறப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணத்தில் சிறிய அளவிலான சூறாவளி ஒன்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்ற வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. அதேநேரம் மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 29 அக்டோபர், 2012

சேண்டி புயல். கடும் சூறாவளியால் 22 பேர் பலி?


Monday 29 October2012  By.Rajah{.காணொளி}, கடும் சூறாவளி புயல் தாக்கியதால், கியூபா, ஹைய்தி, ஜமாய்க்கா ஆகிய நாடுகளில், 22 பேர் பலியாகியுள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் மையம் கொண்டுள்ள, "சேண்டி' என்ற சூறாவளி புயல், பகாமாஸ் தீவுகளையும், கியூபா, ஹெய்தி, ஜமாய்க்கா நாடுகளையும் தாக்கியுள்ளது.இதனால், இந்த நாடுகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. வீடுகளை கூரைகள் சேதமடைந்துள்ளன. பல நகரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புயலை தொடர்ந்து பலத்த மழை பெய்வதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, இந்த புயலுக்கு, 22 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி, இந்த புயல் நகர்ந்து   நகர்ந்து வருகிறது          
 

கனடாவில் பயங்கர புயல் எச்சரிக்கை. 3 நாட்களுக்கு தேவையான பொருட்களை பத்திரப்படுத்துமா?

By.Rajah.ஒண்டோரியோ பகுதிகளில் சாண்டி புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கபப்டுவதால், அப்பகுதி மக்கள் அடுத்த 72 மணி நேரங்களுக்கான உணவு, மற்றும் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு, கனடிய செஞ்சிலுவை சங்கம் ( The Canadian Red Cross)  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவை நோக்கி சாண்டி என்ற புயல் வந்து கொண்டிருக்கிறது. எனவே அடுத்த மூன்று நாட்களுக்கு கனடாவின் கடற்கரையோரப் பகுதிகளில் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் கனமழை பெய்யும் என கனடிய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் பாதுகாப்பான பகுதிகளில் இருக்கும் ஒண்டோரியோ மக்கள், அடுத்த மூன்று நாட்களுக்கு, அதாவது அடுத்த 72 மணி நேரங்களுக்கு தங்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்களை இப்பொழுதே சேகரித்து பாதுகாத்து வைத்துக் கொள்ளுமாறும், அவற்றை ஒரு சூட்கேஸில் வைத்துக்கொண்டால், வெள்ளத்தின் காரணமாக இடமாறுதல் செய்யும்போது வசதியாக இருக்கும் எனவும், செஞ்சிலுவை சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒண்டோரியோ மக்கள் சேகரிக்க வேண்டிய பொருட்கள்:

1. ஒரு நபருக்கு குறைந்தது 4 லிட்டர் தண்ணீர். ( 2 லிட்டர் குடிப்பத்ற்கு, 2 லிட்டர் மற்ற உபயோகத்திற்கு)

2. 72 மணி நேரங்களுக்கு தேவையான மூடி பாதுகாக்கப்பட்ட உணவுப்பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள்.

3. இரண்டு கூடுதல் பேட்டரிகளுடன் கூடிய டார்ச் விளக்கு.

4. இரண்டு கூடுதல் பேட்டரிகளுடன் கூடிய ரேடியோ.

5. கார் மற்றும் வீடுகளின் மாற்று சாவிகள்.

6. மின்சார பிரச்சனையால்  ATM இயங்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதால், கையில் தேவையான அளவிற்கு பணம்.

விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள், தங்களது பயணத்தை உறுதி செய்தபின் கிளம்ப ஆயத்தமாகுமாறு ஏர் கனடா கேட்டுக்கொண்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யக்கூடிய நிலை இருப்பதால், ஏர்கனடாவின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, விமான நேரத்தை உறுதி செய்த பின்பே தங்களின் வீடுகளில் இருந்து கிளம்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். அதுபோலவே Porter Airlines நிறுவனமும் விமானத்தின் காலதாமதம், மற்றும் ரத்து போன்ற செய்திகளை உடனுக்குடன் பயணிகளுக்கு தெரிவிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

மரண அறிவித்தல் {ஏழாலைசிவஞானசுந்தரம்}

திரு கந்தவனம் சிவஞானசுந்தரம்
(பலநோக்கு கூட்டுறவுச் சங்க இளைப்பாறிய முகாமையாளர்)
பிறப்பு : 27 மே 1928 — இறப்பு : 26 ஒக்ரோபர் 2012ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் சிவஞானசுந்தரம் அவர்கள் 26-10-2012 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற காசிநாதர், சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரனும்,
சிவசக்தி(கனடா), ஞானசக்தி(இத்தாலி), சுகுமார்(கனடா), ஞானதர்சினி(பிரான்ஸ்), ஞானசேகர்(இத்தாலி), சிவாஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைரத்தினம், கிருபாகரன், ரேவதி, பகீரதன், விமலினி, விக்கினராஜா, காலஞ்சென்ற பத்மநாதன், குணசிங்கம், தேவநாயகம், இராஜமனோகரி, இராஜசுசீலா, சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
உதயகீதன், ரஜிதா, மகிபா, துஜோன், துசி, துசன், புளோரா, பிரிஷா, ஜனகா, ஜனகன், துவாரகா, பாரதி, பரணி, ராகவேந்தன், வைஷ்ணவி, வினோத், வித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனிஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-10-2012 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிதொடக்கம் மாலை 5:00 மணிவரை கொழும்பிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் யாழ்.ஏழாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று,31-10-2012 புதன்கிழமை அன்று உசந்தி ஓடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவசக்தி — கனடா
தொலைபேசி: +15144952957
ஞானசக்தி — இத்தாலி
தொலைபேசி: +3951364580
சுகுமார் — கனடா
தொலைபேசி: +15142788824
ஞானதர்சினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33141599278
ஞானசேகர் — இத்தாலி
தொலைபேசி: +3951731983
சிவாஜினி — கனடா
தொலைபேசி: +15142732296
 

 

 
:
:
:
:

சுவிஸ் இன்டோர்: இறுதிப்போட்டியில் ஃபெடரர்- டெல் பொட்ரோ மோதல்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, 06:35.47 மு.ப GMT
சுவிஸ் இன்டோர் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரும், அர்ஜெண்டீனாவின் ஜான் மார்டின் டெல் பொட்ரோவும் மோதவுள்ளனர். சுவிட்சர்லாந்தில் சுவிஸ் இன்டோர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் டெல் பொட்ரோ 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் ரிச்சார்டு கேஸ்கியூட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இவர், இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் ஃபெடரரை எதிர்கொள்கிறார். சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் ஃபெடரர், இக்கிண்ணத்தை எளிதாகக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கிண்ணத்தை ஃபெடரர் ஏற்கெனவே 5 முறை வென்றுள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஃபெடரர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் பெளல் ஹென்றி மேத்யூவை வீழ்த்தினார்.
கடைசியாக விளையாடிய 34 போட்டிகளில் 33ல் ஃபெடரர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.