siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 16 நவம்பர், 2012

உகண்டா நாட்டிற்கு சுமார் 1.5 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது ?


16.11.2012.கடந்தசிலதினங்களாஇலங்கையில் முகாமிட்டுசுற்றுப்பயணத்தைமேற்கொண்டுள்ள உகண்டாநாட்டுஜானாதிபதிபலஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.போரில்இறந்தஇராணுவச் சிப்பாய்களில் நினைவுத் தூபிக்குச் சென்று வணக்கம் செலுத்தியஉகண்டநாட்டுஜனாதிபதி,பின்னர் மகிந்தரைச் சந்தித்துள்ளார்.
உகண்டாவில் தொழில் நுட்ப்ப நிலையம் ஒன்றை ஆரம்பிக்கவும், அங்கே இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தி உகண்டா நாட்டவர்களுக்கு பயிற்ச்சி வழங்கவும் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக இலங்கை உகண்டா நாட்டிற்கு சுமார் 1.5 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துள்ளது. அரச ஊடகங்கள் இச் செய்தியை பெரிதாக பிரசுரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

நிதிநெருக்கடியின் எதிரொலி: ஜேர்மனிக்கு புலம்பெயரும்?

16.11.2012.நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஸ்பெயின் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளிலிருந்து மக்கள் ஜேர்மனிக்கு அதிகளவு குடிபெயர்வது தெரியவந்துள்ளது. இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் வருகை புரிந்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை விட தற்போது 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இவர்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் கிரீஸிலிருந்து வந்தவர்கள் மட்டுமே 78 சதவிகிதம் பேர் என்பதும், இது கடந்தாண்டை விட 6900 பேர் அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.
புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் கல்வி மையங்களில் ஜேர்மனி மொழி படிக்க நிறைய பேர் வருகை புரிந்துள்ளனர்.
பலரும் இந்த புலம்பெயர்வை ஆரோக்கியமானதாக கருதுகின்றனர். வேலையில்லாதவர்களுக்கு வேலையும், ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களும் கிடைப்பதால் இருதரப்பிலும் இந்த புலம்பெயர்வு நன்மையளிப்பதாகக் கூறுகின்றனர்.
ஒருங்கிணைப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான ஜேர்மன் அறக்கட்டளைகளின் நிபுணர் குழுவிற்கு தலைவியாக விளங்கும் குனில்லா ஃபின்க் கூறுகையில், ஜேர்மனி கடந்தாண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதால் ஜேர்மனியும், புலம்பெயர்ந்தோரும் பயனடைகின்றனர் என்றார்.
ஆனால் வேறு சிலர் இதன் காரணமாக ஜேர்மன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று அஞ்சுகின்றனர்.

உறைந்த நிலையில் குழந்தைகள், ரத்த வெள்ளத்தில் ???

16.11.2012.By.Rajah..பிரான்சில் இரண்டு குழந்தைகள் இறந்த நிலையிலும், ரத்த வெள்ளத்தில் தாயும் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர், தன்னுடைய பேரக் குழந்தைகளை காணவில்லை என பொலிசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பொலிஸ் நடத்திய தீவிர வேட்டையில், குளிர்சாத பெட்டியில் இறந்த நிலையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளும், ரத்த வெள்ளத்தில் தாயும் மீட்கப்பட்டனர்.
உடனடியாக மூவரின் உடல்களும் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. இதனையடுத்து விசாரணை தீவிரமடையும் என்றும், குழந்தைகளை கொன்றது அவர்களுடைய தந்தையாக இருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

நாவின் சிறப்புப் பிரதிநிதி சிறிலங்காவுக்கு கடும் கண்டனம் !

.          
 
16.11.2012.By.Rajah.சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சிறிலங்கா அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐ.நாவின் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் தனித்துவத்துக்கான சிறப்புப் பிரதிநிதி கப்ரியேலா க்னவுல் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிறிலங்காவின் அரசியலமைப்பின் 107 வது பிரிவின் மூலம் சிறிலங்கா நாடாளுமன்றம், நீதித்துறையின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.

இது சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரப்பகிர்வு என்ற தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக உடன்பாடுகளுக்கு எதிராகவும் இது உள்ளது.

சிறிலங்காவில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் மீதான அழுத்தங்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் கவலையளிக்கின்றன.

சிறிலங்கா நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பதில் நடவடிக்கைகள் மற்றும் தலையீடுகளின் ஒருபகுதியாகவே இந்த நடவடிக்கைகள் அமைவதாக கொள்ள வேண்டி வரும்.

சிறிலங்கா நீதித்துறை அதிகாரிகள் மீது நேரடி தாக்குதல்களோ மறைமுக அழுத்தங்களோ இல்லாமல் அவர்கள் தங்களின் தொழில் ரீதியிலான பணிகளை எந்தவித அச்சமும், முறையற்ற தலையீடும், வெளி அழுத்தங்களும் இல்லாமலும், அனைத்துலக கடப்பாடுகளுக்கு அமைவாகவும் மேற்கொள்ளக் கூடிய சூழலை சிறிலங்கா அரசு உருவாக்க வேண்டும்.

சிறிலங்காவின் நீதித்துறை மீதான தாக்குதல்கள் மற்றும் தலையீடுகள் தொடர்பாக சிறிலங்கா அரசு உண்மையான விசாரணைகளை நடத்துவதில்லை.

அதை செய்தவர்கள் அதற்குப் பொறுப்புக்கூற வைக்கப்படுவதில்லை என்று சுதந்திரமான மனிதஉரிமை நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

சிறிலங்கா நீதிபதிகளை பதவிநீக்கம் செய்யமுடியாத தன்மையானது அந்த நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை தாங்கும் முக்கிய தூணாக உள்ளது.

மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த கொள்கையில் தலையீடுகள் இருக்க வேண்டும்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான பதவிநீக்க நடவடிக்கைகள் சங்கடங்களை ஏற்படுத்துகின்றன.

மிகமோசமான நடத்தைகள் அல்லது திறமையற்றதன்மை காரணமாக மட்டுமே நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

அதுவும்கூட முறையான சட்ட நடைமுறைகளின் அடிப்படையிலான நியாயமான வழக்கு விசாரணைகள் நடந்த பின்னரே அவ்வாறு செய்யவேண்டும்.

இந்த வழக்கு நடைமுறைகளின் முடிவுகள் கூட சுயாதீனமான மீளாய்வுக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

சுயாதீனமான நீதிபதிகளை பழிவாங்குவதற்கான ஒரு வழிமுறையாக ஒழுங்காற்று நடவடிக்கைகள் பயன்படுத்துவதை ஏற்கமுடியாது” என்றும் கப்ரியேலா க்னவுல் கண்டித்துள்ளார்.

இலங்கையில் - 8 லட்சத்துக்கும் அதிகமான கருக்கலைப்புக்கள்

 


16.11.2012.By.Rajah.இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் கடந்த 26 ஆண்டுகளில் சுமார் 8, 81, 077 கருக்கலைப்புக்களை மேற்கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட்டஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதில் 877963 கருக்கலைப்புச் சம்பவங்கள் உபகரணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய கருக்கலைப்புச் சம்பவங்கள் மாத்திரைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் சிங்களப் பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் மூலம் சிங்கள இனத்தை இல்லாதொழிக்க சர்வதேச சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சூழ்ச்சித் திட்டத்தில் தமிழ் மக்களும் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர்.

சில வைத்தியர்கள், குடும்பநல உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு இந்த முயற்சிக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களிடம் 800 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுகின்றது.

அவற்றை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கலபொட்டஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்

தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமை ?


16.11.2012.By.Rajah.அதிகாரப் பகிர்வு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அரசாங்கமே நிறுவியது. அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆணைக்குழுவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுத்து வருவதாக ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும், எம்மை விடவும் சில அரசியல் கட்சிகள் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு சட்ட ரீதியான உரிமைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டு தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
நாடு பாரியளவு கடன் தொல்லையில் சிக்கியுள்ளது. எதிர்கால தலைமுறையினரே இந்த கடன் பளுவை சுமக்க வேண்டியேற்பட்டுள்ளது.
விசாலமான அமைச்சரவையை நாம் கொண்டுள்ளோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் தி;ட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

வியாழன், 15 நவம்பர், 2012

ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள்?



 
 அமெரிக்கஅதிபர்ஒபாமாவின் லிமோசின்ரககார்ஜெனரல் மோட்டார்ஸ்கீழ்செயல்படும் கேடில்லாக்நிறுவனத்திடமிருந்து கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டது. ராணுவகவசவாகனம்போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இந்த லிமோசின்ரக காரின் தொழில்நுட்பம், பாதுகாப்புவசதிகள்ஆகியவை மிகவும்ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. தி பீஸ்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார் அமெரிக்க அதிபரின் நடமாடும் அலுவலகமாக கூறப்படுகிறது. இந்த காரின் சிறப்பம்சங்களின் தகவல்களை காணலாம்.

போயிங் 757 விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கதவுகளுக்கு இணையான தடிமன் கொண்ட கதவுகள் இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் தகடுகள் ராணுவ கவச வாகனங்களில் பயன்படுத்தப்படும் 8 இஞ்ச் தடிமன் கொண்ட உறுதியான தகடுகளால் மூடப்பட்டிருக்கும்.

காரின் கீழ்ப்பாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தடிமன் கொண்ட தகடுகள் கண்ணி வெடி தாக்குதல்களில் கூட சேதமடையாது. இதன் பெட்ரோல் டேங்க்கும் ஏவுகணை தாக்குதலில் கூட தீப்பிடிக்காது. குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. டிரைவர் இருக்கையின் கீழே தற்காப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
அதிபர் ஒபாமா உள்பட 7 பேர் இந்த காரில் பயணம் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. முன்பக்க டிரைவர் வரிசை இருக்கையில் 2 பேர் அமரலாம். கண்ணாடி தடுப்புடன் கூடிய பின்புற கேபினில் பின்னோக்கி 3 இருக்கைகளும், முன்னோக்கி 2 இருக்கைகளும் உள்ளது. இதில், முன்னோக்கி பொருத்த்பபட்டிருக்கும் இரண்டு இருக்கைகளில் ஒன்று அதிபருக்கான ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கை.
இரு இருக்கைகளுக்கு இடையில் மடக்கி விரிக்கும் வசதிகொண்ட டேபிள் உள்ளது. இதில், லேப்டாப், தொலைபேசி ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். காரின் இருக்கைகள் அனைத்தும் உயர்தர லெதர் மூலம் கைவேலைப்பாடுகளோடு மிக சொகுசாக தயாரிக்கப்பட்டுள்ளது
இது அதிபரின் நடமாடும் அலுவலகம் என்பதால் இன்டர்நெட் இணைப்பு, செயற்கைகோள் தொலைபேசி மற்றும் அவசர காலங்களில் ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் துணை ஜனாதிபதியுடன் உடனடியாக பேசும் வகையில் தொலைபேசியும் இருக்கிறது.அதிபர் ஒபாமாவின் அதிகாரப்பூர்வமான இந்த காரின் டிரைவர் அமெரிக்க புலனாய்வு பிரிவான சிஐஏ., அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டவர். எத்தகைய ஆபத்தான சூழ்நிலைகளிலும் காரை வேகமாகவும், சாதுர்யமாகவும் ஓட்டுவதற்கு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
காரின் அனைத்து பக்கங்களிலும் இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் வாய்ந்த நைட் விஷன் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த காரி்ல் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதால், கார் எந்த பகுதியில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை செயற்கைகோள் உதவியுடன் கண்காணிக்க முடியும்.
அதிபர் ஒபாமா உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும்போது, அமெரிக்க வான்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தின் மூலம் இந்த கார் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, அந்த விமானத்தில் சிறப்பு வசதிகளும் இருக்கிறது.
கண்ணீர் புகை குண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள், தீத்தடுப்பு கருவி உள்ளிட்ட ஏராளமான தற்காப்பு பாதுகாப்பு சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. நச்சுப் புகை மற்றும் ரசாயன தாக்குதல்களை சமாளிக்கும் வகையில், உட்புறத்தில் காற்றை சுத்திகரித்து வெளியில் அனுப்பும் விஷேச கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், பஞ்சரானால் கூட காரை வேகமாக ஓட்டிச் செல்ல முடியும். இந்த கார் 5 டன் எடை கொண்டது. 100 கிமீ செல்வதற்கு 30 லிட்டர் வரை எரிபொருளை உறிஞ்சித் தள்ளும். மேலும், அமெரிக்க போக்குவரத்து துறையின் சுற்றுச் சூழல் மாசுபாடு விதிகளிலிருந்து இந்த காருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் அதிபர் ஒபாமா இந்த காரில் செல்லும்போது அமெரிக்க கொடியும், வெளிநாட்டு சுற்றுப் பயணம் செய்யும்போது காரில் ஒரு பக்கத்தில் அமெரிக்க கொடியும், மறுபக்கத்தில் சுற்றுப் பயணம் சென்றுள்ள நாட்டு கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும்

தமிழக இளைஞர்கள் போராட வேண்டும்!தா.பாண்டியன்

          
15.11.2012.By.Rajah.ஈழத்தமிழர்பிரச்சினையில்மத்திய அரசையும், திமுகவையும் சாடியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன். அதேசமயம், தமிழக இளைஞர்கள் போர்க்குரல் எழுப்பி ஒன்றுபட்டி போராடி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சென்னையில் இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

இலங்கையில் நடைபெற்ற போரின் கடைசி நாட்களில் நடந்த படுகொலைகள் இதுவரை நடைபெறாத படுகொலையாகும். இலங்கையில் நடைபெற்ற படுகொலை பற்றி ஐக்கிய நாடுகள் சபை மறைத்துவிட்டது. அதன் பிரதிநிதிகள் தங்கள் கடைமைகளில் இருந்து தவறிவிட்டார்கள் என்று அவர்களை குற்றம்சாட்டுவதற்கு முன்பு நாம் நம்நாட்டில் செய்யவேண்டிய கடைமைகளை முறையாக செய்தோமா? என்பதை இப்போது நம்மை நாமே பரிசோதித்து கொள்ளவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

ஐ.நா. சபையின் பிரதிநிதிகள் தங்கள் கடமையில் தவறிவிட்டார்கள் என்ற செய்தி வந்தபிறகு, இன்றைக்கு ஐ.நா. சபையை மட்டும் குற்றம்சாட்டி பயன் இல்லை. நாம் இந்திய அரசின் மூலமாகத்தான் பேசியாகவேண்டும். மத்திய அரசு ஐ.நா. சபையில் ஆற்றவேண்டிய கடமையை ஆற்றியதா? என்பதுதான் நாம் கேட்கவேண்டிய கேள்வி.

மத்திய அரசு தமிழ் மக்களின் குரலுக்கு மதிப்பு கொடுத்ததா? என்பது நாம் கேட்கவேண்டிய முக்கியமான கேள்வி. ஐ.நா. சபையின் குழுவே தன் குற்றத்தை ஒப்பு கொண்டு செய்தி வெளியிட்ட பிறகுகூட, தமிழக மக்களும், தமிழ்நாட்டு கட்சிகளும்தான் கண்டித்து குரல் கொடுத்து வருகின்றன.

டெல்லியில் உள்ள மகான்கள் இதுவரை இது பற்றி பேசவில்லை. 2009 மே மாதம் 17-ந் திகதி இலங்கையில் உலகம் கண்டிராத படுகொலை நடந்த நேரத்தில் டெல்லி மந்திரி சபையில் இருந்த தமிழர்கள் யார்? இவர்களும் இலங்கையில் நடந்த படுகொலையை தெரிந்து கொள்ளாமல் அவர்கள் கேபினட் அமைச்சர்களாக இருந்ததால் அவர்கள்தான் தமிழ் மக்கள் முன்பு முதல் குற்றவாளிகளாக ஒப்புதல் வாக்குமூலம் தரவேண்டும். அதற்குரிய தண்டனையையும் ஏற்க தயாராக வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள சிங்கள அரசு முன்வராவிட்டால் ஐ.நா. சபையில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்றும் இந்திய அரசு வாதிடவேண்டும்.

இவை எல்லாம் வாதிடவைக்கவேண்டும் என்றால் ஐ.நா. சபையில் ஒரு கிளார்க்கிடம் மனு கொடுத்துவிட்டு வருவதின் மூலம் நடக்காது. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் போர்க்கால உணர்வுகளுடன் போராளிகளாக மாறவேண்டும்.

நாம் இங்கிருந்து போர்க்கோலம் பூண்டு போர்க்குரல் எழுப்பாவிட்டால், மத்திய அரசை அந்த கடமையை செய்யவைக்கமுடியாது. முல்லைத்தீவில் இன்றும் படுகொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த செய்திகளை எல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் அரசியல் கட்சி தலைவர்களிடமிருந்து தாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு முழு உரிமை பெற்றுத்தரும் வரையில் இனி எதிலும் கவனம் செலுத்தமாட்டோம் என்ற போர்க்குரலை தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எழுப்பினால் மத்திய அரசு பணியும். பணிய தவறினால் மத்திய அரசின் தன்மை மாற்றப்படும். பிறகு நியாயம் பிறக்கும். இலங்கையில் இறந்தவர்களின் உயிரைத்தான் மீட்க முடியாது. உரிமைகளை மீட்கமுடியும்.

இலங்கை தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு உயிரை கொடுப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்றார் அவர்

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்தே செயற்பட்டோம்!?


        15.11.2012..By.Rajah..யுத்தத்தின்போதுஇலங்கையில்செயற்பட்டஐக்கியநாடுகள்சபையின்  முகவர்நிறுவனங்களுக்கோஐ.நா.வின்பணியாளர்களுக்கோ அரசாங்கம்ஒருபோதும்எவ்விதமானஅழுத்தங்களையோபிரயோகிக்கவில்லைஎன்கிறது இலங்கை அரசு.
அச்சுறுத்தல்களைபிரயோகிக்கவில்லை.ஐ.நா.பணியாளர்கள் எவராலும்அழுத்தங்களுக்கு உட்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபைக்குஒருநாடு அழுத்தமோ கட்டாயப்படுத்தலையோ பிரயோகிக்க முடியுமா? மஹிந்த சமரசிங்க கேள்வியெழுப்பினார்.
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகள் செயற்பட்டவிதம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஐ.நா. உள்ளக விசாரணைக்குழுவின்அறிக்கைஉத்தியோகபூர்வமாக வெளியிடப்பட முன்னர் அதுதொடர்பில் எதுவும் கூறமுடியாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கையில் செயற்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களுக்கோ ஐ.நா. பணியாளர்களுக்கோ அரசாங்கம் ஒருபோதும் எவ்விதமான அழுத்தங்களையும் வெளியிடவில்லை. அவர்கள் எவராலும் அச்சுறுத்தலுக்கு உட்படவில்லை.
ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு நாடு இவ்வாறு அழுத்தமோ, கட்டாயப்படுத்தலையோ பிரயோகிக்க முடியுமா? அவ்வாறு எவ்விதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. யுத்தகாலத்தில் நாம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்தே செயற்பட்டோம்.
ஐ.நா எம்முடன் இணைந்தே செயற்பட்டது. அதனை எடுத்து அழுத்தங்கள் எதுவும் இருக்கவில்லை. அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக கூறப்படுவதை மறுக்கின்றேன்.
எதிர்வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு நாங்கள் போருக்குப் பின்னரான நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்றங்களை வெளிப்படுத்துவோம்.
அதில் சிறந்த முன்னேற்றங்களைக் காட்டமுடியும் என்பது எமது நம்பிக்கையாகும் என தெரிவித்தா.
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இலங்கையில் ஐ.நா செயற்பட்டவிதம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு,
அந்த அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. அறிக்கையின் உள்ளடக்கங்கள் சில கசிந்துள்ளனவே தவிர எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனவே அதுதொடர்பில் நான் தற்போது கருத்து வெளிவிடுவது சரியல்ல எனப் பதிலளித்தார்

ஊடகங்களுக்குள்ளும் புலிகள் - சிறீலங்கா அரசாங்கம் !


15.11.2012.By.Rajah.புலிகளின் தளபதி கேணல் பரிதி அவர்களைக் கொலைசெய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் பிரான்சில் இரண்டு இலங்கையர்கள் கைதாகியுள்ளனர் என்பது யாவரும் அறிந்தவிடையம். ஆனால் இவர்களில் ஒருவர் தாம் இலங்கை அரசிடம் 50,000 யூரோக்களைப் பெற்று, இக் கொலையை செய்ததாக ஒப்புதல் வாகுமூலம் அளித்துள்ளார் என பிரான்சில் இருந்து வெளியாகும் ஊடகம் தெரிவித்துள்ளது.
இச் செய்திகள் வெளியானதை அடுத்து இலங்கை அரசு ஆடிப்போயுள்ளது. இலங்கை அரசுக்கும் இக் கொலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று பிரான்ஸ் பொலிசார் கடுமையாக வீசாரிக்க ஆரம்பித்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.

இந் நிலையில், பிரான்ஸ் ஊடகங்களுக்குள்ளும் புலிகள் ஊடுருவிட்டதாக இலங்கை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் தான் இதுபோன்ற செய்திகளை பிரெஞ்சு ஊடகங்கள் மூலம் வெளியிடுவதாக அது மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள இனவாத ஊடகமான த ஐலண்ட் நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரமுகர் ஒருவர், பிரெஞ்சு ஊடகங்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவி அழுத்தங்களை பிரயோகித்து வருவதன் காரணமாகவே தமது முகவர்கள் மீது பரிதியின் படுகொலைக்கான பழி சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பரிதியின் கொலையுடன் தமது முகவர்களை தொடர்புபடுத்தி பிரெஞ்சு ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் குறித்து பிரெஞ்சு அரசாங்கத்துடன் பாரிசிலுள்ள தமது தூதரகத்தினர் பேச்சுக்களை நிகழ்த்தியிருப்பதாகவும் த ஐலண்ட் நாளேட்டிற்கு சம்பந்தப்பட்ட சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரமுகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்