அவுஸ்திரேலியா அருகே உள்ள சாலமோன் தீவுகளில் மீண்டும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.5 அலகுகளாக இது பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சாலமோன் தீவுகளில் கடந்த 7ம் திகதி சாண்டா குரூஷ் தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ரிக்டரில் 8 அலகுகளாக இது பதிவாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளாயினர். 13 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உணரப்பட்ட சேத விவரம் தெரியவில்லை. இதனிடையே இன்று கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013
நாய்களுக்கு மைக்ரோசிப்: அரசு அதிரடி உத்தரவு
சனி, 9 பிப்ரவரி, 2013
செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள்
வெள்ளி, 8 பிப்ரவரி, 2013
சாலமன் தீவில் மீண்டும் நிலநடுக்கம்
வியாழன், 7 பிப்ரவரி, 2013
2 தினங்களே ஆன சிசுவை தாயிடமிருந்து பறித்த நோர்வே,,,
ஐ.நா.சபையில் ஒலிக்கப் போகும்
இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை".
பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச் சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல்.
சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்
துனிசியாவின் எதிர்கட்சி தலைவர் படுகொலை
மத்திய கிழக்கு நாடான துனிசியாவின் தலைநகர் டுனிஸ்ஸில் நேற்று, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சொக்ரி பெலாயிட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துனிசியாவின் இடதுசாரி ஜனநாயக தேசப்பற்று இயக்கத்தின் செயலாளரான இவர், தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த போது தலையிலும் கழுத்திலும் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இக்கொலைக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
துனீசியாவில் முன்னால் ஜனாதிபதி பென் அலி என்பவர் 2011ம் ஆண்டு தொடக்கத்தில் பதவியிறக்கப்பட்ட பின் இடம்பெற்ற முதலாவது அரசியல் படுகொலை இதுவாகும்.
இச்சம்பவத்தையடுத்து துனீசிய தற்போதைய ஜனாதிபதி மொன்செஃப் மார்ஷௌக்கி தனது பிரான்ஸுக்கான குறுகிய கால விஜயத்தை ரத்து செய்து நாடு திரும்பியுள்ளார்.மேலும் எகிப்துக்குச் செல்லவிருந்த தனது பயணத்தையும் கைவிட்டுள்ளார்
புதன், 6 பிப்ரவரி, 2013
8 மாதக் குழந்தை டெங்கினால் மரணம்,,,,
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி அஷ்ஷ_ஹதா பகுதியைச் சேர்ந்த றிமாஸா ஸீனத் என்ற 8 மாதக் குழந்தை ஆட்கொல்லி டெங்கு நோயினால் இன்று காலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளது.
டெங்கினால் பாதிக்கப்பட்ட குறித்த 8மாத குழந்தை கடந்த இரு நாட்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமையற்தொழிலில் ஈடுபடும் சபூர்தீன் என்பவரின் மகளே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இவரது ஜனாஸா இன்று காத்தான்குடியில்; நல்லடக்கம் இன்று 10.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ரஷ்யாவில் கடும் பனிப் பொழிவு!
ரஷ்யாவின், தலைநகர் மொஸ்கோவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 216 சென்டிமீட்டர் அளவு பனி பொழிந்துள்ளது. இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது 1.5 மடங்கு அதிகமாகும்.
பனிப்பொழிவால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிற்பதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இது மொஸ்கோ நகருக்கும் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மெட்ரிட் நகருக்கும் இடையேயான தூரத்துக்கு சமமானது .
இந்த பனிப்பொழிவால் விமானப்போக்குவரத்திலும் மாற்றங்கள் செயப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு செல்லும் 155 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யப் பிரதமரின் விமானம் உள்ளிட்ட 56 விமானங்கள் வேறு இடங்களில் தரை இறக்கப்பட்டுள்ளன.
எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி இந்தியா பயணம்
தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
இலங்கையின் அரச தகவலை மேற்கோள் காட்டி இந்திய பிடிஐ செய்திசேவை இதனை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று பீகார் புத்தகாயாவுக்கு செல்லும் ராஜபக்ச, 8 ம் திகதியன்று ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்கு செல்லவுள்ளார்.
இதன்போது பீகார் மாநில முதல்வர் நித்தேஸ்குமாரை அவர் சந்திக்கவுள்ளார்.
இந்தநிலையில் தமிழகத்தில் ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அட்டவணைப்படி ஜனாதிபதியின் பயணம் அமையும் என்று இலங்கை அரச தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






















