siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

வெந்நீர் ஊற்றிய மனைவி!,,,

கணவன் கள்ளத் தொடர்பு பேணிவருவதை பொறுக்கமுடியாத மனைவியொருவர் அவரது ஆணுப்பின் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவமொன்று கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

வடகொலம்பியாவின் சிரேடே நகரில் வசித்துவருபவர் யோலிவெல் லோபஸ். இவரின் கணவர் நெபர் நெடான்.

சம்பவ தினத்தன்று நெடான் அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்துள்ளதுடன் நண்பர்களுடன் இரவுப்பொழுதைக் கழித்ததாகவும் மனைவிக்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் நெடானுடன் கள்ளத்தொடர்பை பேணிவரும் பெண் யோலிவெல் லோப்ஸிற்கு அழைப்பை மேற்கொண்டு அவரது கணவர் தன்னுடன் பொழுதைக் கழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனை ஆத்திரமடைந்த லோபஸ் கணவருக்கு பாடம் புகட்ட திட்டமிட்டுள்ளார்.

நெடான் இதனை அறிந்திருக்காத நெடான் யோலிவெல் லோபஸூடம் பொய்யைக் கூறி படுக்கையறைக்குச் சென்றுள்ளார்.

கணவன் ஆழ்ந்து உறங்கும் வரை காத்திருந்த லோபஸ் வெந்நீரை அவரது ஆணுறுப்பில் ஊற்றியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்ப்பாக்காத நெடான் வலிதாங்காமல் அலறியுள்ளார். அவரது அலறல் தொலைவில் அமைந்துள்ள அயல்வாசிகளுக்கும் கேட்டுள்ளது.

இதனை அடுத்து உடனே அங்கு வந்த அவர்கள் நெடானை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நெடானில் ஆணுறுப்பு மோசமாக சேதமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலை அடுத்து லோபஸ் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேர்ந்த பரிதாபம்: பிரித்தானியா தம்பதியினர் பலி,,


சைக்கிளில் உலகை வலம் வந்த பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியினர் தாய்லாந்தில் நடந்த சாலை விபத்தில் பலியாயினர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஓவியர்கள் பீற்றர் ரூட் (வயது 34) அவரது மனைவி மேரி தாம்சன் (வயது 34) இருவரும் சைக்கிளில் உலகை சுற்றிவர திட்டமிட்டனர்.
கடந்த 2011ம் ஆண்டில் சைக்கிள் பயணத்தை தொடங்கிய இருவரும் ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்ட நாடுகளை கடந்தனர்.
இந்நிலையில் கடந்த 13ம் திகதி, தாய்லாந்தில் பாங்காக் நகரத்தருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர்கள் மீது லாரி மோதியதில் இருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது
 

திங்கள், 18 பிப்ரவரி, 2013

மாணவர்கள் விளையாடிய கற்பழிப்பு விளையாட்டால் அதிர்ச்சி,,,



பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள், "கற்பழிப்பு விளையாட்டு" என்ற பெயரில் விளையாடிய விளையாட்டு பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக "ரேப் கேம்" என்ற பெயரில் வீடியோ கேம் ஒன்று உலகமெங்கும் பிரபலமாகி வருகிறது.
ரயிலில் பயணிக்கும் ஒரு பெண்ணையும் அவரது இரண்டு மகள்களையும் கற்பழிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ கேமுக்கு உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பினாலும் சிலர் அதை ரகசியமாக விளையாடி வருகின்றனர்.
பிரித்தானியாவின் கிழக்கு சசசெக்ஸ் பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் உணவு இடைவேளையின் போது 10 முதல் 13 வயதுள்ள மாணவர்கள், இந்த பெயரில் உள்ள விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஒரு மாணவன் மற்றவர்களை துரத்தி சென்று பிடிக்க வேண்டும் என்பது தான் விளையாட்டின் விதி என்றாலும் ரேப் கேம் என அவர்கள் அதற்கு பெயரிட்டு விளையாடியது தான் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் குழந்தைகள் இவ்வளவு மோசமான வார்த்தையை எப்படி கற்றுக்கொண்டனர் என அவர்கள் கவலையுற்றனர்.
எனினும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையிட்டு அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என மாணவர்களிடம் கேட்டுக்கொண்டதையடுத்து "தப்பிப் பிழைக்கும் ஆட்டம்" என அந்த விளையாட்டுக்கு தற்போது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

பிஸ்டோரியஸ் காதலி கொலை வழக்கில் திருப்பம்.

காதலியைச் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் வீரர் ஓஸ்கர் பிஸ்டோரியஸ் வீட்டிலிருந்து ரத்தக்கறை படிந்த கிரிக்கெட் மட்டை ஒன்றை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிஸ்டோரியஸ் தனது காதலியான ரீவா ஸ்டீன்கேம்ப்பை காதலர் தினத்தன்று சுட்டுக் கொன்றதால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிஸ்டோரியஸ் வாக்குமூலத்தில் திருடன் வந்து விட்டான் என்று கருதி சுட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் பிஸ்டோரியஸுக்கும், அவரது காதலிக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு அதன் பின்னர்தான் பிஸ்டோரியஸ் துப்பாக்கியால் சுட்டதாக பொலிசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் பிஸ்டோரியஸின் காதலி கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது இதற்கிடையே, ரீவாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்துயுள்ளதையடுத்து அதில் ரீவாவின் மண்டை ஓடு முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், நசுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஸ்டோரியஸ் வீட்டிலிருந்து ஒரு ரத்தக்கறை படிந்த கிரிக்கெட் மட்டையும் சிக்கியுள்ளதால் ரீவாவை பிஸ்டோரியஸ் முதலில் மட்டையால் சரமாரியாக அடித்துக் காயப்படுத்தினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கிரிக்கெட் மட்டை சிக்கியிருப்பதையடுத்து பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதை தொடர்ந்து இந்த வழக்கில் பிஸ்டோரியஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 16 பிப்ரவரி, 2013

விமான தளத்தை கைப்பற்ற நிகழ்ந்த சண்டையில்,,,


சிரியாவின் அலெப்போவில் அமைந்திருக்கும் சர்வதேச மற்றும் முக்கிய இராணுவ விமான தளத்தை கைப்பற்றுவதற்கு நிகழ்ந்த முற்றுகைப் போரில் கடந்த இரு நாட்களில் மட்டும் மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை பிரித்தனை தளமாக கொண்டு சிரியாவைக் கண்காணிக்கும் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநரான ராமி அப்துல்-ரஹ்மானும் உறுதிப் படுத்தியுள்ளார்.
சிரிய கிளர்ச்சிப் படை அலெப்போவின் சர்வதேச விமான நிலையத்தைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த புதன்கிழமை முதல் பாரிய முற்றுகை போரை ஆரம்பித்தனர். தமது கடும் முயற்சியின் பின்னர் இராணுவ சோதனைச் சாவடி அமைந்துள்ள பாதுகாப்புப் பிரதேசமான பிரிகேட் 80 தளத்தை கிளர்ச்சிப்படையினர் கைப்பற்றினர்.
எனினும் விமான நிலையமும் இராணுவ விமான ஓடு பாதைகளும் அரச படைகளின் கைவசமே தொடர்ந்து உள்ளன. இரு தரப்பினரும் ஷெல் வீச்சுக்கள் மூலம் பரஸ்பரம் தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு கிளர்ச்சிப் படைத் தளபதி அப்துல் ஜப்பார் தகவல் அளிக்கும் போது சர்வதேச விமான நிலையத்தைக் கைப்பற்றும் வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிழக்கேயுள்ள நகரமான டெயிர் எல்-ஷௌர் இன் பெரும்பாலான பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் கிளர்ச்சிப் படையினர் இதை இழக்காமல் இருக்கக் கடினமாகப் போராடி வருகின்றனர்.
இங்கு அரச படைகளால் விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், அரச படைகள் இரு குழந்தை உட்பட 11 பேரைக் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் கிளர்ச்சிப் படையினர் அரச படைகளின் இரு யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2011 மார்ச் மாதம் தொடங்கிய சிரிய புரட்சி இதுவரை 70 000 பேரின் உயிரை காவுகொண்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது.
இங்கு நடைபெறும் வன்முறைகளை நினைவில் கொண்டு சிரிய ஜனாதிபதி அசாத் பதவி விலக வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல அரபு நாடுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு மாறாக ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சிரிய அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன.
சிரியாவுக்கு ஆயுதம் வழங்கும் முக்கிய நாடான ரஷ்யா அங்கு நடைபெறும் உயிரிழப்புக்களைக் கருத்திற் கொண்டு தனது ஆயுத விற்பனையை நிறுத்தப் போவதில்லை என தெரிவித்துள்ளது
 

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

துப்பாக்கி ஏந்திய காவல்படையுடன் நடந்த ஜனநாயகத்



வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் தலைநகர் அகர்த்லாவில் உள்ள வாக்குச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கி ஏந்தியபடி சாவடியைக் கண்காணிக்கிறார். இடதுசாரிகளின் கோட்டையாக திகழும் திரிபுரா மாநிலத்தில் ஐந்தாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி சாதிக்கும் என்று இடதுசாரிகள் எதிர்பார்த்து வரும் வேளையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமைதியாக நேற்று வாக்குப்பதிவுகள் நடந்தேறின.

மின் உற்பத்தி நிலையத்தை சீனாவுக்கு விற்பனை,,,


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தினை இலங்கை அரசாங்கம் சீனாவிற்கே விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாங்கிய கடனை அடைக்க முடியாமை, தொடர்ந்து இயங்க வைக்க பணம் இல்லாமை ஆகிய காரணங்களினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மின்சார செலவைக் கட்டுப்படுத்த முடியாமை காரணமாகவே இந்த அனல் மின் நிலையத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக இலங்கை அரச தரப்புத் தகவல் தெரிவித்துள்ளது.
குறித்த மின் நிலையம் 1350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த நிலையத்துக்காக சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து உபகரணங்களும் பழையவை என்றும் செயற்பாட்டுக்கு உதவாதவை எனவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 14 பிப்ரவரி, 2013

கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது:,,


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நவநீதம்பிள்ளை, போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் 13 பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

நவநீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒருதலைப்பட்சமானது.

சனல்-4 காணொளி, வவுனியா, வெலிக்கடைச் சிறைச்சாலை சம்பவம், புலிகளின் நினைவுத் தூபிகள் அழிக்கப்பட்டமை, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஹோட்டல் ஒன்று நிர்மானிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் குறித்தும் நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார்.

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

எனினும், இந்தக் கோரிக்கைகள் ஒரு தலைப்பட்சமானது எனவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது

காதலர் தின வாழ்த்துக்கள்,,,,

அன்பே!
உன் பார்வை
பட்டால் போதும்
உன் பாதம்
தொட்ட இடத்தில்
... நான்
சாதம் போட்டு
சாப்பிடுவேன்..!

எல்லா நண்பர்களுக்கும் எனதுகாதலர் தின வாழ்த்துக்கள்,,,காதலிப்பவரை மட்டும் அன்புடன் காதலியுங்கள் வெற்றி நிச்சயம் வாழ்க வளர்க வளமுடன் ,,நன்றி ,,,,,,

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

கமலேஸ் சர்மா உறுதியளித்ததாக வெளியான செய்தி பிழையானது

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் நவம்பரில் இலங்கை கொழும்பில் நடைபெறும் என்பதை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா உறுதிப்படுத்தினார் என்று வெளியான செய்தி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் அவ்வாறான உறுதிமொழி எதனையும் கமலேஸ் சர்மா வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு அறிக்கை வெளியிடப்படுமானால் அதனை பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரிச்சட் உகு’வால் வெளியிடப்படும். இந்தநிலையில் கமலேஸ் சர்மா தற்போது இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று மாத்திரமே உகு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பதை பொதுநலவாய அமைப்பு செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அனுமுகமவை கோடிட்டு நேற்று உள்ளுர் ஊடகங்களில், பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடக்கும் என்பதை கமலேஸ் உறுதிப்படுத்தினார் என்ற செய்தி வெளியாகியிருந்தது. இந்தநிலையில் இது பிழையான செய்தி என்று குறிப்பிட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரிச்சட் உகு, இலங்கையில் தற்போது பயணம் மேற்கொண்டுள்ள சர்மா, தமது பயணத்தை நாளை 13ம் திகதி முடித்துக்கொண்ட பின்னர், தமது அமைப்பினால் நிலைப்பாட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய செய்தி பொதுநலவாய மாநாடு இலங்கை நடைபெறுவதை கமலேஸ் சர்மா உறுதிப்படுத்தினார்: இலங்கை அரசாங்கம்