siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 4 மார்ச், 2013

நிலைய மின் விளக்குகளை அணைக்க முடியாமல்


பல கோடி ரூபாய் செலவில் ஜேர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் டெகெல் மற்றும் ஸ்கோனெபெல்டு என்ற இரண்டு விமான நிலையங்கள் செயல்படுகின்றன.
பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க அதி நவீன வசதிகளுடன் "பெர்" என்ற புதிய விமான நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த ஆண்டில் இவ்விமான நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் எதிர்வரும் 2017ம் ஆண்டில் தான் இவ்விமான நிலையம் தயாராகும்.
இதற்கிடையில் இவ்விமான நிலையத்தை உருவாக்க முதலில் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தாமதத்தின் காரணமாக செலவு இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் எரிவதற்கு மட்டும் ஒரு நாளைக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது.
இந்நிலையில் இந்த விளக்குகளை அணைக்க முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறவில்லை என விமான நிலைய கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும் விமான நிலையத்தின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என சொல்வது "கேலிக்குரியது" என ஜேர்மன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

குழு தாக்கியதில் மலேசியாவில் 5 பொலிஸார்,,,


மலேசியாவின் கிழக்குப்பகுதி சாபா மாகாணம் போர்னியோ தீவில் பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம், லஹாத் டாடு மாவட்டத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 100 பேர் படகில் வந்து இறங்கினர்.
பின்னர், அவர்கள் தங்களை சூலூ ராயல் ராணுவம் என்று சொல்லிக்கொண்டு அப்பகுதி கிராமம் ஒன்றை ஆக்கிரமித்து கொண்டதோடு இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதற்கு 19 நூற்றாண்டு பதிவேடுகளை அவர்கள் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில், நேற்று இரவு பொலிஸார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 5 பொலிஸாரும், 2 ஆயுதம் ஏந்தியவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளியன்று நடந்த தாக்குதலில் 12 பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களும், 2 மலேசியா பொலிஸாரும் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சாபா மாகாணம், 1800-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் மன்னர் சூலு ஜமாலுல் கிராம் சூல்தானின் கட்டிப்பாட்டில் இருந்து, பின்னர் 1963-ம் ஆண்டு மலேசியாவிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

ஞாயிறு, 3 மார்ச், 2013

அசையும் அசையா சொத்துக்களின் முடக்கத்தை


2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப் இங்கிலாந்து மற்றும் ஜக்கிய அரபு நாடுகளில் தஞ்சமடைந்தார்.
பெனாசிர் பூட்டோ அவர்கள் 2007 ஆம் ஆண்டு கொல்லப்பட்டபோது அப்போதைய ஆட்சிப்பொறுப்பில் இருந்த முஷாரப் போதிய பாதுகாப்பு அவருக்கு வழங்கத் தவறியது ஏன் என்பன தொடர்பான வழக்குகள் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தவேளை இந்த வழக்கில் விளக்கமளிக்க வேண்டிய முஷாரப் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதால் அவரை “தலைமறைவாக இருக்கும் நபர்” என அறிவித்த தீவிரவாத தடுப்பு கோர்ட் முஷராப்பின் அசையா சொத்துகள் மற்றும் வங்கிகளில் இருக்கும் ரொக்கப்பணம் ஆகியவற்றை முடக்கவும் உத்தரவிட்டது.
கோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து முஷராப்பின் மனைவி சேஹ்பா முஷாரப் மனு தாக்கல் செய்தார். தான் வசிக்கும் வீடு முஷராப் தனக்கு பரிசாக வழங்கியதாகவும் வங்கிகளில் உள்ள பணம் அனைத்து வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது எனவும் அவ் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சேஹ்பா முஷாரப் வாதங்களை மெய்ப்பிபதற்கான ஆதாரங்களை அவரது வழக்கறிஞர் இலியாஸ் சித்திக்கி தாக்கல் செய்யாததால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்ததோடு முன்னர் வெளியிட்டிருந்த ஆணை தொடர்ந்து நீடிக்குமெனவும் தெரிவித்தார்

சனி, 2 மார்ச், 2013

போதைப்பொருள் கடத்தல் தலைவன் உட்பட 4



மியான்மர் நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் தலைவன் நவ் கம், தாய்லாந்தை சேர்ந்த போராளிகளின் துணையுடன் கடந்த 2011-ஆம் அக்டோபர் மாதம் சீனாவுக்கு உட்பட்ட மேகாங் நதி பகுதியில் 2 சீன சரக்கு கப்பல்களை தாக்கி அதில் பணியாற்றிய 13 பேரை ஈவிரக்கமின்றி கொன்று கப்பலில் இருந்த சரக்குகளையும் கொள்ளையடிது அந்தக் கப்பலையும் கடத்திச் சென்று மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் தலைமறைவாக பதுங்கி வாழ்ந்து வந்தான்.
அந்த நாடுகளை சேர்ந்த போலீசாரின் துணையுடன் சீன பொலீஸார் 8 பேரை கைது செய்து சீன நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்ட நவ் கம், சாங் காம் (தாய்லாந்து), யீ லாய் (நாடற்றவன்), சாசிக்கா (லாவோஸ்) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட கப்பல் ஊழியர்களின் குடும்பத்திற்கு 9 1/2 லட்சம் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க தயாராக இருப்பதாகவும் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் குற்றவாளிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

இவர்களின் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், மரண தண்டனையை உறுதிசெய்து கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பையடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கும் விஷஊசி போட்டு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

வெள்ளி, 1 மார்ச், 2013

புரட்சிப்படைகளுக்கான உதவிகள் தொடருமென ?


சிரியாவில் கடந்த 2 வருடமாக அதிபர் ஆட்சிக்கு எதிராக புரட்சிப்படையினர் சண்டையிட்டு வருகின்றனர். இந்த தாக்குதலின் போது பொதுமக்கள் 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரித்து வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட நாடுகளும் அதிபர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு, புரட்சிப்படைக்கு நேரிடையாக உதவிகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் புரட்சிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு 60 மில்லியன் டாலர் உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். ரோமில் நடைபெறும், சிரியா தேசிய கூட்டணியின் அமைதி கூட்டத்தில் ஜான் கெர்ரி கலந்து கொண்டிருக்கிறார்

புதன், 27 பிப்ரவரி, 2013

சீனாவின் வடிவமைப்பில் புதிய டைட்டானிக்,,,


அவுஸ்திரேலியா பணக்காரரின் செலவில் உருவாக உள்ள டைட்டானிக் கப்பலை சீனாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமொன்று வடிவமைக்கிறது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பில்லியனர் கிளைவ் பால்மர், டைட்டானிக் கப்பலை உருவாக்குவதாக அறிவித்திருந்தார்.
நேற்று நியூயார்க்கில் உள்ள இன்டர்பிட் சீ அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர், டைட்டானிக்கை கட்டும் பணி சீனாவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இது, 2016ம் ஆண்டில் முடிவடைந்து கப்பல் பயணத்தை தொடங்குமென கூறினார். இந்தக் கப்பலின் முதல் பயணத்தின் டிக்கெட்டுகளை வாங்க 40 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
டைட்டானிக் கப்பலைப் போலவே இந்த புதிய கப்பலும் இங்கிலாத்தில் உள்ள சவுத்ஹெம்டன் பகுதியிலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் வரை முதல் பயணத்தை மேற்கொள்ளும். இந்த கப்பலில் பயணிப்பவர்கள் அனைவரும் 1912ம் ஆண்டில் இருந்த பழைய பாணி உடைகளை அணிவார்கள்.அவர்களுக்கு டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட அதேவிதமான உணவுகளே பரிமாறப்படும் என்பது கூடுதல் தகவல்கள் ஆகும்.{புகைப்படங்கள்,}


செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மின் நிலையத்தில் திடீர் கோளாறு: இருளில்,,,

 
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு திடீர் மின்சார தடை ஏற்பட்டு தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.
குறிப்பாக ராவல்பிண்டி, கராச்சி, பெஷாவர், ஐதராபாத், குவெட்டா ஆகியவை இருளில் மூழ்கின.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள 1,200 மெகாவாட் தனியார் அனல் மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும்.
பின்னர் இஸ்லாமாபாத் மின் துறையினர் மாற்று ஏற்பாடுகள் செய்து இஸ்லாமாபாத் உள்பட சில நகரங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்தனர்.
இந்த திடீர் தடையால் நாட்டில் 80 சதவீதப்பகுதி மின்சாரம் இன்றி இருந்ததாகவும், இதன் விளைவாக விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது
 

திங்கள், 25 பிப்ரவரி, 2013

மருத்துவராக ஆங்கிலம் அவசியம்: பிரிட்டன் ?


பிரிட்டனில் பொதுமருத்துவராகப் பணிபுரிய நோயாளிகளின் கருத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலம் அவசியம் என்ற உத்தரவை அரசு உறுதி செய்துள்ளது.
அண்மையில் ஜேர்மனியைச் சேர்ந்த மருத்துவர் டேனியல் உபானிக்கு(Daniel Ubani) ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் நோயாளிக்குத் தவறான சிகிச்சை அளித்தன்மூலம் லீட்ஸ் பிரைமரி கேர் அறக்கட்டளை நடத்திய மருத்துவமனை இவரை வெளியேற்றியுள்ளது.
இனி இதுபோன்று நடக்க கூடாது என்பதால் ஆங்கிலம் தெரியாத மருத்துவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் இதனால் இவர்களை யாரும் வேலைக்கு அமர்த்தகூடாது எனவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது மருத்துவக் குழுவின் தலைமை நிர்வாகியான நியால் டிக்சன்(Niall Dickson) நோயாளிகளின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் சுகாதார அமைச்சர் டேன் போல்ட்டர்(Dean Royles) கூறுகையில், நாம் சொல்வது மருத்துவருக்குப் புரியும் எனவும் நம் சிரமத்தை அவர் அறிவார் என்ற நம்பிக்கை நோயாளிகளுக்கு வரவேண்டும். அதற்கு நோயாளி பேசும் ஆங்கிலத்தை மருத்துவர் புரிந்து கொள்ளும் மொழித்திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து நோயாளிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகியான கேத்தரீன் மர்ஃபி(Katherine Murphy) இதனை வரவேற்றுள்ளார்.
 

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நிர்வாணமாக போஸ் கொடுத்த தாய்மார்கள்


குழந்தைகளின் பள்ளிப்பேருந்தை காப்பாற்றுவதற்காக தாய்மார்கள் நிர்வாணப் போஸ் கொடுத்துள்ள சம்பவம் ஸ்பெயினில் நடந்தேறியுள்ளது.
ஸ்பெயினின் மான்ட்செர்ராட் நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி நிர்வாகம் பெருகி வரும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பள்ளிப் பிள்ளைகளுக்கான பேருந்து சேவையை குறைத்தது.
இதனால் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பாதிப்புக்குள்ளானார்கள். இதை எதிர்த்து பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திப் பார்த்தனர். ஆனால் நிர்வாகம் இறங்கி வரவில்லை.
இதையடுத்து தாய்மார்கள் சிலர் கூடிப் பேசி அதிரடி முடிவு ஒன்றை எடுத்தனர். அதன்படி 10 பெண்மணிகள் சேர்ந்து நிர்வாணமாக போஸ் கொடுத்து காலண்டர் தயாரிப்பது என்றும் அதை விற்று அதில் வரும் காசை பள்ளி நிர்வாகத்தின் பேருந்து சேவைக்குத் தருவது என்றும் முடிவெடுத்தனர்.
இதையடுத்து 10 பேரும் விதம் விதமாக போஸ் கொடுத்தனர். சிலர் டாப்லெஸ்ஸாவும், சிலர் முழு நிர்வாணமாகவும் போஸ் கொடுத்தனர். இந்த காலண்டரை விற்பனைக்கும் விட்டனர்.
அதில் அவர்களுக்கு நல்லவரவேற்பும், வருமானமும் கிடைத்தது. இதையடுத்து தற்போது அவர்களிடம் வருகிற யூன் மாதம் வரைக்கும் பேருந்தை இயக்குவதற்குத் தேவையான நிதி கிடைத்து விட்டதாம்.
இதைத் தொடர்ந்து அடுத்த வருடமும் இதேபோல நிர்வாண காலண்டர் போட்டு நிதி சேகரித்து தங்களது பிள்ளைகளுக்குத் தேவையான செலவுகளை சமாளிக்க திட்டமிட்டுள்ளனராம்
 

சனி, 23 பிப்ரவரி, 2013

நினைவு நிகழ்வில் உயிரை விட்ட கணவன். .


மனைவியின் மறைவை தாங்க முடியாத கணவரொருவர் அவரது நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள செல்லும் வழியில் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த நோர்மன் ஹெண்ட்ரிக்ஷன்(வயது 94) இரண்டாம் உலகப்போரில் பணியாற்றியுள்ளார்.
இவரது மனைவி குவண்டோலின் (வயது 89), பிரித்தானிய ரோயல் வான்படையில் பணிபுரிந்துள்ளார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
பின்னர் குவண்டோலின் பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் 1947ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
கடந்த 66 வருட காலமாக இணைபிரியாத ஜோடிகளாக இவர்கள் இருந்தார்கள்.
இந்நிலையில் கடந்த 8ம் திகதி குவண்டோலின் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவை நோர்மனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் தான் விரைவில் வந்து சேர்வேன் என அவரது மனைவியின் பூதவுடலைப் பார்த்துக் கூறியுள்ளார்.
இந்நிலையில் குவண்டோலினின் இறுதி நிகழ்வு கடந்த 16ம் திகதி நடைபெற இதில் பங்கேற்கும் பொருட்டு புறப்பட்டுச் சென்ற நோர்மன் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
அவர் தனது மனைவிக்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்றியுள்ளதாக அவரது பிள்ளைகளை தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதிவாசிகள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.