siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 19 நவம்பர், 2013

றொரண்டோ மேயரின் அதிகாரம் பறிப்பு



    கனடாவில் றொரண்டோ நகர மேயரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் றொரண்டோ நகர மேயர் ராப் போர்டின் சில அதிகாரங்கள்
பறிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக,
1. அலுவலக பட்ஜெட் குறைக்கப்பட்டு மீதமுள்ளவைகள் 2013ல் உள்ள காலாண்டுக்கு மாற்றப்பட்டு, ஜனவரி 1ம் திகதி 2014 முதல் உதவி மேயரின் பெயருக்கு மாற்றம் செய்யப்படுகின்றது.
2. மேயரின் உதவியாளர் வேலைமாற்றம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட உள்ளார்.

3. முதலில் பேசும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
4. அவையின் நிர்வாக குழுத்தலைவர் என்ற பதவி பறிக்கப்பட்டுள்ளதுடன், தலைவர்களை நியமிக்கவும், நீக்கவும் இருந்த அதிகாரம் பிடுங்கப்பட்டுள்ளது.
5. துணை மேயரை நியமிக்க அல்லது பதவியிலிருந்து நீக்க இருந்த அதிகாரமும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சாதாரண அங்கத்தினரை போன்று செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மேயர், கூடவே இருந்து குழிப்பறிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திடீரென என்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு கவுன்சிலர்கள் செய்த சதிச்செயல் என்றும் விமர்சித்துள்ளார்.
 

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாரிக்கும் ஆளில்லா விமானம்


ஈரான் அணு ஆயுதங்களை குவித்து வருவதாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டிவருகின்றன.
இதனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் மிரட்டி வருகிறது. ஈரானுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரான் தனது புதியவகை விமானம் ஒன்றை இன்று காட்சிக்கு வைத்தது. 30 மணி நேரம் வானில் வலம் வரக்கூடிய இந்த மிகப்பெரிய ஆளில்லா விமானம் விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும். அது இஸ்ரேல் வரை சென்று தாக்க வல்லமையுடையதாகும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் விஞ்ஞானிகள் வடிவமைத்து தயாரித்துள்ள இந்த பொட்ராஸ் ஆளில்லா விமானம் 25,000 அடி உயரத்தில் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்குதல் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் வல்லமை படைத்ததாகும் என்று கூறப்படுகிறது.

ஈரானுக்கு எதிராக பல்வேறு தடைகள் இருந்தும், எமது விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள இந்த ஆளில்லா விமானம் ஈரான் ராணுவத்திற்கு அதிக பலம் அதிகரிக்கும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

முன்னதாக ஈரான் தயாரித்த ஷாஹத்- 129 என்ற ஆளில்லா விமானம் 24 மணி நேரம் வரை பயனித்து அதே 2000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியதாகும்.

புயலால் உருக்குலைந்த பிலிப்பைன்சுக்கு நிதியுதவி


சமீபத்தில் பிலிப்பைன்சை தாக்கிய ஹையான் புயலுக்கு, நாடே உருக்குலைந்து விட்டது.

தக்லோபான் நகரில் மின்சார அடியோடு துண்டிக்கப்பட்டதால் இரவில் தெருவிளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிடது. இதனால் 3 ஜெனரேட்டர்களை இயக்கி நேற்று தெருவிளக்குகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் கார்லோஸ் கூறுகையில், தற்போது 4 கிலோ மீட்டர் தூரம் மின்சாரம் கொடுத்துள்ளோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் நகர் முழுவதும் மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புயல் பாதித்த பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உலக வங்கி ரூ.3 ஆயிரம் கோடி(500 மில்லியன் டாலர்) நிதி உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது
 

திங்கள், 18 நவம்பர், 2013

கடும் சூறாவளி : 5 பேர் பலி: நூற்றுக்கணக்கானவர்கள் காயம்

 
 
அமெரிக்காவின் மத்திய கிழக்கு மாகாணங்களில் கடும் சூறாவளிப் புயல் வீசியது. இதனால் இல்லினாய்ஸ், இண்டியானா, கண்டக்கி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இங்கு மணிக்கு 111 கி.மீட்டர் வேகத்தில் கடுமையாக காற்று வீசியது. இதனால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தலைகுப்புற வீசி அடிக்கப்பட்டன. சில இலகு ரக வாகனங்கள் காற்றில் பரந்தன.

‘டன்’ கணக்கில் குப்பைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பலத்த சூறாவளி புயலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

டெலிவோன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பல டெலிபோன் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து சாய்ந்தன. இதனால் டெலிபோன் இணைப்புகள், செல்போன் சேவைகள் முற்றிலும் முடங்கின.

சூறாவளி புயலுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது. அப்போது டென்னிஸ் பந்து அளவில் ஐஸ்கட்டிகள் விழுந்தன. இந்த புயலுக்கு இல்லினாய்ஸ் மாகாணம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

இங்கு மட்டும் சூறாவளிப் புயலுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். வாஷிங்டனில் ஒருவரும், தெற்கு மால்சேக் பகுதியில் 2 பேரும்
யிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் தவிர சூறாவளி புயலில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர்.

சூறாவளி புயலினால் சுமார் 5½ கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இல்லினாய்ஸ் மாகாணம் ஒரு போர்க்களம் போன்று காட்சி அளிக்கிறது. இது போன்ற பாதிப்புகள் தான் இண்டியானா மற்றும் கண்டக்கியில் ஏற்பட்டுள்ளன.

திங்கள், 11 நவம்பர், 2013

தாயின் வயிற்றிலிருந்து மருத்துவரின் விரலை


மருத்துவரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசுவின் படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ரான்டி அட்கின்ஸ்- அலிசியா அட்கின்ஸ் தம்பதிக்கு, கடந்தாண்டு நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு நிவியா என பெயரிட்டுள்ளனர். மனைவிக்கு பிரசவம் நடந்த போது, ரான்டி உடனிருந்தார்.

அப்போது தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த குழந்தை, மருத்துவரின் கை விரலை அழகாக பிடித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த மருத்துவர், இதுகுறித்து ரான்டியிடம் தெரிவிக்க அவரும் அதை படம்பிடித்தார். தற்போது இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர்

சனி, 9 நவம்பர், 2013

துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 9 வயது மாணவனால் பரபரப்பு


 அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 9 வயது மாணவர் ஒருவர் சக மாணவர்களிடம் காண்பிப்பதற்காக தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை, பாடசாலைக்கு எடுத்து வந்ததால் கைது செய்யப்பட்டார்.
புதன்கிழமையன்று பாடசாலை வாகனத்தில் வந்த அந்த மாணவர், கையில் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்ட வாகன ஓட்டுனர் உடனடியாக பாடசாலை நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார்.

பாடசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் குறித்த மாணவனை கைது செய்தனர்.
விசாரணையின் போது முதலில் அந்த துப்பாக்கி தனது தாயுடையது என்றும், பின்னர் அந்தத் துப்பாக்கியை பூங்கா ஒன்றிலிருந்து கண்டெடுத்ததாகவும் முன்னுக்குப் பின் முரணாக அந்த மாணவன் பதிலளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

புதன், 6 நவம்பர், 2013

நானும் வந்தேன் கண்கள் ஈரமாக...



காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை, சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை, வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக, வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக... என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம்... இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்¤....

காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை, சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை, வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக, வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக... என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம்... இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்¤...

திங்கள், 4 நவம்பர், 2013

ரேபிஸ் நோய்த் தொற்று: 10 பேர் மருத்துவமனையில்


 
பிரான்சில் ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகளுடன் 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் இரண்டு மாத பூனைக்குட்டி ஒன்று பாரிசுக்கு 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதியில் இருந்து தத்தெடுக்கப்பட்டது.

மூன்று நாட்கள் கழித்து இந்த பூனைக்குட்டி உயிரிழந்தது விட்டது, அப்போது தான் பூனைக்கு ரேபிஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த பூனையுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 5 பேருக்கு தற்காப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
இவர்கள் பூனையில் அருகில் இருந்ததால், நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மற்ற உயிரினங்களுக்கு நோய் பரவியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக கடந்த 1998ம் ஆண்டு நரி ஒன்றுக்கும், 2008ம் ஆண்டு நாய் ஒன்றுக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

படகு கவிழ்ந்து மியான்மரில் பரிதாபம்: 62 பேர் பலி


 மியான்மரில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 62 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு நேற்று பெண்கள்,

 குழந்தைகள் உட்பட 70 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று வங்காள விரிகுடா கடலில் சென்றது.
அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றியதாலும், தற்போது மழை காலம் என்பதால் கடுமையான காற்று வீசியதாலும், எதிர்பாராத விதமாக படகு சேதம் அடைந்தது.

இதனால் கடல்நீர் புகுந்ததும், பாரம் தாங்காமல் நடுக்கடலில் கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த குழந்தைகள் உள்பட 70 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர்.

இதில் இன்று காலை குழந்தைகள் உள்பட 8 பேரை மீட்டதாக மியான்மர் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ளவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி பலியாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மியான்மரில் நடைபெறும் வன்முறைகளுக்கு பயந்து கடந்த 18 மாதத்தில் மட்டும் 2.5 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
 

ஞாயிறு, 3 நவம்பர், 2013

செட்டிபாளையம் பிரதான வீதியில் பாரிய விபத்து



மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் செட்டிபாளையம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் பாரிய பஸ் விபத்தொன்று இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற தனியார் பஸ் ஒன்றும் மட்டக்களப்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

பஸ்களில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை. தனியார் பஸ் சாரதி ஒருவரே காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்