siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 11 ஜூன், 2014

ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த உரிமை வழங்கியது

ஆய்வுகளை மேற்கொள்ள ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த உரிமை வழங்கியது அமெரிக்க அரசு
உலகெங்கும் செயல்பட்டுவரும் தீவிரவாதக் குழுக்களை அழிக்க அமெரிக்க அரசு ஆளில்லா விமானங்களை இதுநாள் வரை செயல்படுத்திவந்துள்ளது. இப்போது முதன்முறையாக இந்த வகை விமானங்களின் வர்த்தகப் பயன்பாட்டிற்கும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பன்னாட்டு ஆற்றல் சக்தி நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கும், அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏரோவிரோன்மென்ட்டுக்கும் அலாஸ்கா மாகாணத்தில் வான்வழி ஆய்வுகளை மேற்கொள்ள ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஏரோவிரோன்மென்ட் நிறுவனம் கடந்த 8ஆம் தேதியன்று பிபி நிறுவனத்திற்கான ஆய்வுகளை முதன்முதலாக மேற்கொண்டது. அலாஸ்காவில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் வயலான புரூதோ பேயில் உள்ள உபகரணங்கள், சாலை வழிகள் மற்றும் எண்ணெய்க்குழாய்களை இந்த விமானங்கள் ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுகள் ஆளில்லா விமானங்களின் வர்த்தகப் பயன்பாட்டிற்கான முக்கிய மைல்கல்லாகும். மாறிவரும் தொழில்நுட்பத்தினால் இத்தகைய விமானங்களின் பயன்பாடுகளும் அதிகரிக்கும் என்று போக்குவரத்து செயலர் அந்தோணி பாக்ஸ் குறிப்பிட்டார். இந்த விமானப் பயன்பாடுகளின் மூலம் தங்களுடைய உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை எளிதாக நிர்வகிக்கக்கூடும் என்று பெட்ரோலிய நிறுவனம் கருதுகின்றது. இதன்மூலம் நேர விரயம் தவிர்க்கப்பட்டு, பாதுகாப்பு ஆதரவு அதிகரிப்பதுடன் நுணுக்கமான வடக்குப்புற சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறினார்.

வெள்ளி, 6 ஜூன், 2014

பழமை வாய்ந்த தேவாலயத்தை சூழ்ந்த தீ

ஜேர்மனியில் 650 வருட பழமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜேர்மனியின் நூரெம்பெர்க் நகரில் அமைந்துள்ள 650 வருட பழமையான செயிண்ட் மர்தாஸ் தேவாலயம் தீ விபத்தில் சேதம் அடைந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் மிக வேகமாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர், தேவாலயத்தின் கூரை தீப்பிடித்து எரிந்து, மேலும் கட்டிடத்தின் உள்பகுதியில் சேதம் அடைந்தது.
இந்த தேவாலயத்தில், கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடதக்கது.

திங்கள், 2 ஜூன், 2014

அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களை தகர்க்க சதி

அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தான் உளவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த மலேசிய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி பாகிஸ்தான் உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கியூ பிரிவு பொலிஸாரால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
ஜாகீர் உசேனின் ரகசிய டைரியை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் முகமது உசேன் என்பவரது பெயரும் இடம் பெற்றிருப்பதும், அவரும், ஜாகீர் உசேனும் நெருங்கிய கூட்டாளிகள் என்பதும் தெரிய வந்தது. முகமது உசேனும் இலங்கையைச் சேர்ந்தவர்தான்.
இவரும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதும், அவர்களின் உத்தரவின்பேரில் முகமது உசேனும் பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கும் சதிவேலையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.
ஜாகீர் உசேனுடன், முகமது உசேன் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருப்பதும், அப்போது இருவரும் சென்னையில் அமெரிக்கத் தூதரகம் மற்றும் பெங்களூரில் இஸ்ரேலிய தூதரகம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்ப்பது குறித்து பேசி உள்ளதும் தெரியவந்தது.
மலேசிய பொலிஸார் முகமது உசேனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தையும் தகர்க்க தனக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் இருந்து உத்தரவு வந்ததாகவும், அதற்காக 2 பேருக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
இவரது கைது மற்றும் அவரிடம் நடத்திய விசாரணை பற்றிய விவரங்களை மலேசிய அரசு இலங்கையிடம் பரிமாறிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், பிரான்சை தலைமையிடமாக கொண்ட சர்வதேச பொலிஸாரிடம் முகமது உசேன் கைது குறித்த தகவலை இந்திய தூதரகம் தெரிவித்து தொடர் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தது.
மேலும் மலேசிய அரசு முகமது உசேனிடம் நடத்திய விசாரணை குறித்த தகவல்களை தங்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறும், அது இந்த வழக்கில் தொடர் விசாரணைக்கு உதவும் என்றும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது உசேனை இந்தியாவுக்கு கொண்டு சென்று சென்னை பொலிஸார் விசாரணை மேற்கொள்வதற்கு வசதியாக அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மலேசிய அரசு மேற்கொண்டு வருகிறது



வெள்ளி, 30 மே, 2014

எம்.பிமாருடன் நிஷா தேசாய் கலந்துரையாடல்

 இலங்கை பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராடுதல், இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் பெண்களின் பங்கு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சமாதானம், நல்லிணக்கம் செயற்பாடுகளில் பெண்களின் பங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராடுவது குறித்து அவர்களுடன் கலந்துரையாடியதாக பிஸ்வால் கூறியுள்ளார்.

 

வியாழன், 29 மே, 2014

புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டமை குறித்து ஐ.நா. கவனம்

மலேசியாவிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள ஒருங்கிணைப்பதற்கு முயற்சித்ததாக குற்றம் சுமத்தி மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை மலேசியா அண்மையில் இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தது. பிரச்சாரப் பணிகளுக்காக குறித்த சந்தேக நபர்கள் நிதி திரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை நாடு கடத்தும் பணிகளை கால தாமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம்; மலேசிய அரசாங்கத்திடம் கோரியிருந்தது. புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்ய சந்தர்ப்பம் அளிக்காது துரித கதியில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மலேசிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

ஞாயிறு, 25 மே, 2014

இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து உன்னிப்பாக

 இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சில இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில்ழ முறைப்பாடு செய்யப்பட்டு;ள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
1978ம் ஆண்டின் அரசியல் சாசனத்தின் 14ம் இலக்க சரத்தின் அடிப்படையில் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
பிரசூர சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,
எவ்வாறெனினம் தேசிய நலன்கள் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் 14ம் சரத்தில் சில வரையறைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் 11ம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமையைப் போன்று கருத்துச் சுதந்திரத்தில் முழு அளவிலான சுதந்திரம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எட்டு செய்தி இணைய தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

வெள்ளி, 23 மே, 2014

ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்

தாய்லாந்தில் நிலவி வரும் அரசியல் நெருக்கடியில் முக்கிய திருப்பமாக, அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.
தாய்லாந்து பிரதமராக இருந்த யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக் கோரி சுமார் ஒன்பது மாதங்களாக எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த போராட்டத்தினால் அந்நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வந்த நிலையில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றம் யிங்லக் ஷினவத்ராவை பதவியிலிருந்து நீக்கியது.
அதனையடுத்து நிவட்டும்ராங் பூன்சாங்பைசன் என்பவர் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டும், அது முழுமையாக செயல்பட முடியாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அங்கு ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அந்நாட்டு ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டாலும், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றாது என அப்போது தெரிவிக்கப்பட்டது.
எனினும், தாய்லாந்து ராணுவ தலைமை தளபதி பிரயுத் சான்-ஓ-சா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “”நாட்டில் சகஜநிலையை விரைவாகக் கொண்டு வருவதற்காக, ராணுவம், விமானப்படை மற்றும் காவல்துறை அடங்கிய தேசிய அமைதி காக்கும் குழு, வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மக்கள் அனைவரும் அமைதி காக்குமாறும், அரசு ஊழியர்கள் தங்கள் வழக்கம்போல் தங்கள் அலுவல்களில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்றார்.
ஊரடங்கு: இதனிடையே, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை ராணுவம் பிறப்பித்துள்ளது.
தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, தேசிய அமைதி காக்கும் குழுவின் அறிவிப்புகளும், நாட்டுப்பற்று இசையும் மட்டுமே ஒலிபரப்பப்படுகின்றன.
மக்களிடம் துல்லியமாக செய்திகள் சென்றடைவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை என ராணுவம் அதற்கு விளக்கமளித்துள்ளது.
எதிரெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கட்சியினர் தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
அவர்களை ஆர்ப்பாட்டப் பகுதிகளிலிருந்து வெளியேற்ற சிறப்புப் பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாய்லாந்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்த 1932-ஆம் ஆண்டு முதல், அந்நாட்டு ராணுவம் இதுவரை 18 முறை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு, அதில் 11 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 22 மே, 2014

முன்னாள் அதிபருக்கு 3 ஆண்டு சிறை


எகிப்தில் கடந்த 1981–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரை 30 ஆண்டு காலம் அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். 2011–ம் ஆண்டு மக்கள் கிளர்ச்சிகளை அடுத்து அவர் பதவி பறிக்கப்பட்டது. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். உடல் நலக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே அரசு நிதி 125 மில்லியன் எகிப்து பவுண்டுகளை திருடிவிட்டதாக முபாரக் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கெய்ரோ கோர்ட்டு நீதிபதி ஒசாமா ஷஹீன், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், முபாரக்கிற்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அவரது மகன்களுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் முபாரக்கிற்கும், அவரது மகன்களுக்கும் நீதிபதி ரூ.17.88 கோடி அபராதமும் விதித்தார். திருடிய அரசு பணம் 125 மில்லியன் எகிப்து பவுண்டுகளை திரும்பத்தரவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதன், 21 மே, 2014

நைஜீரிய குண்டு வெடிப்பில் 118 பேர் மரணம்

நைஜீரியாவில் இரட்டைக் குண்டு வெடிப்பு இடம்பெற்ற  பகுதியிலிருந்து  குறைந்தபட்சம் 118 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய நைஜீரியாவின் ஜோஸ் நகரிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை மேற்படி  இரட்டைக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. மிகவும் பரபரப்பாகவுள்ள சந்தைப் பகுதியில் முதலில் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையொன்றுக்கு அருகில் மற்றைய குண்டு வெடித்தது.
இந்த இரட்டைக் குண்டுவெடிப்புக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை. ஆனால், அண்மைய காலங்களில் போகோ ஹராம் போராளிகள் அங்கு  இவ்வாறான குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திங்கள், 19 மே, 2014

தொடர் மாடியிலிருந்து கீழே விழுந்து பலி

கோட்டே, ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள ஆடம்பரம்பர  தொடர்மாடி குடியிருப்பில் வர்ணம் பூசி கொண்டிருந்த போது தவறுதலாக கீழே விழுந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.