siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 7 ஜூலை, 2014

உளவு சொல்லும் ஜேர்மன் ஊழியர்கள்?

ஜேர்மனியின் வெளிநாட்டு புலனாய்வு சேவை ஊழியர் ஒருவர் அமெரிக்காவிற்கு உளவு சொல்வதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டுள்ளார்.
பாராளுமன்ற விவகாரத்தில், ஜேர்மனியின் வெளிநாட்டு புலனாய்வு சேவை ஊழியர் ஒருவர், அமெரிக்கவின் வாஷிங்டன் அரசுக்கு உளவு சொல்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
கைதுசெய்ய பட்ட அந்த 31 வயது ஊழியர், பெயர் குறிப்பிடாத மையத்திற்கு, வெளிநாட்டு புலனாய்வு சேவை செய்து வருவதாக அரசு தரப்பில் குறிப்பிடபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஊடகங்கள் அந்த நபர் அமெரிக்க புலனாய்வு சேவை மையத்திற்கு தகவல் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடுகின்றன.
அமெரிக்கா புலனாய்வு சேவை மையம், ஜேர்மனிய ஊழியர்களை குறி வைத்து உளவு சொல்வதற்கு ஆட்களை சேகரிப்பதாக வெளியான செய்திகள
அடுத்து இந்த நபர் கைது செய்யபட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இது போன்ற விடயங்களில் ஈடுபட வேண்டாம் என மற்ற ஊழியர்களை எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மற்றைய செய்திகள்
 
 



 
                     

ஞாயிறு, 6 ஜூலை, 2014

ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற மாணவனின் தாய்

katthi
  பிரான்சில் பள்ளி வகுப்பறையில் ஒரு மாணவனின் தாய், ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பிரான்சில் உள்ள அல்பி என்ற நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் ஒரு மாணவனுடன், அவனது தாயும் பள்ளிக்கு வந்துள்ளார். அவர் தன் மகன் படிக்கும் வகுப்பறைக்குள் சென்று, சிறிது நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியையை குத்தியுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கத்தியால் குத்திய பெண் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை மந்திரிக்கு பிரான்ஸ் அதிபர் ஹொலாண்டே உத்தரவிட்டுள்ளார்.
 
மற்றைய செய்திகள்

சனி, 5 ஜூலை, 2014

அமெரிக்காவுடன் இணைய ரஷ்யா போடும் திட்டம்?

இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்ற அமெரிக்கா, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
இந்த சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் ரஷ்யாவும், அமெரிக்காவும் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஷ்யா ஜனாதிபதி மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
சர்வதேச அளவில் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை ஒட்டுமொத்த உலகின் நலனையொட்டி பாதுகாக்கிற சிறப்பான பொறுப்பு ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் உண்டு என ஒபாமாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1776ம் ஜூலை நான்காம் திகதி இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்கா சுதந்திரம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது
மற்றைய செய்திகள்

வெள்ளி, 4 ஜூலை, 2014

இந்திய- சீன ராணுவ தளபதிகள் முக்கிய பேச்சுவார்த்தை

எல்லைப் பகுதியில் அமைதியை பராமரித்தல், புதிய எல்லை பாதுகாப்புத் திட்டம் உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சீன ராணுவத் தளபதியுடன் இந்திய ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 9 ஆண்டுகளில் சீனாவுக்கு சென்றுள்ள முதல் இந்திய ராணுவ தலைமைத் தளபதியான ஜெனரல் விக்ரம் சிங், அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஃபாங் ஃபெங்குயியை பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.India_china
இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு ராணுவத்தினரிடையேயான கூட்டுப் பயிற்சிகளை அதிகரித்தல், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட எல்லை பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் உள்பட உயர்நிலை அதிகாரிகளிடையிலான தகவல் பரிமாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இந்திய தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, பெய்ஜிங் சென்றடைந்த விக்ரம் சிங்கை வரவேற்று ஃபாங் ஃபெங்குயி கூறுகையில், “இந்தியாவில் புதிய அரசு பதவியேற்றபிறகு முதன்முறையாக வந்துள்ள உங்கள் தலைமையிலான மூத்த ராணுவ அதிகாரிகள் குழுவின் வருகை இருநாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது’ என்றார்.
அதற்கு, “சீனாவுடனான உறவுக்கு இந்தியா அதிகபட்ச முன்னுரிமை அளித்துள்ளதோடு, இருநாட்டுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் உறுதி பூண்டுள்ளது’ என்று விக்ரம் சிங் பதில் அளித்தார்.

மற்றைய செய்திகள்
 

வியாழன், 3 ஜூலை, 2014

விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: 290 பேர் பலி (காணொளி, )

அமெரிக்க போர்க் கப்பல் பாரசீக வளைகுடா மீது பறந்த ஈரான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. இதில் பயணம் செய்த 290 பேரும் கொல்லப்பட்டனர்.
இன்று வரலாற்றில் நடந்தவை,
* 1778 - புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது.
* 1848 - அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.
* 1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
* 1866 - புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய- புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.
* 1944 - இரண்டாம் உலகப் போர்: பெலரஸ்சின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் படையினரால் நாசி ஜெர்மனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
* 1969 - சோவியத்தின் என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.
* 1970 - பிரிட்டன் விமானம் ஸ்பெயினில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.




மற்றைய செய்திகள்
 

புதன், 2 ஜூலை, 2014

முன்னாள் ஜனாதிபதி பொலிஸ் காவலில் வைப்பு

  பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டு வழக்கு, நீதிமன்றத்துக்கு போகுமா என்பது குறித்து தகவல் தருவதற்காக ஒரு மாஜிஸ்திரேட்டுக்கு உயர் பதவி பெற்றுத்தருகிறேன் என வாக்குறுதி

அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் இரு தினங்களுக்கு முன்பு அவரது சட்டத்தரணி மற்றும் இரு நீதவான் நீதிமன்ற நீதிபதிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், சர்கோசியை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிஸார் அழைப்பாணை அனுப்பினர். அதன்படி நேற்று அவர் பாரீசில் பொலிஸார் முன்பு ஆஜர் ஆனார். அவரை காவலில் வைத்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

 அவரை மேலும் ஒரு நாள் தங்கள் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்தவுனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகளின் பின்னர் அவர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படலாம் அல்லது விடுவிக்கப்படலாம். பிரான்சில் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பொலிஸ் காவலில்

வைக்கப்படுவது இதுவே முதல் முறை. 2017ம் ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக சர்கோசி சமீபத்தில் அறிவித்திருந்தார். இப்போது பொலிஸ் விசாரணையில் அவர் சிக்கி இருப்பது, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அவருடைய முடிவுக்கு விழுந்த அடியாகக் கருதப்படுகிறது.

மற்றைய செய்திகள்

ஞாயிறு, 29 ஜூன், 2014

பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில்

பிரான்ஸ் நாட்டில் ஹொட்டல்களுக்கு விதிக்கப்படும் வரிகள் 500 சதவிகிதமாக உயர்த்தப்போவது சுற்றுலாப் பயணிகள் மற்றும் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரம் மற்றும் பிரபல சுற்றுலா தளமான பாரிஸ் நகரத்தில் தற்போது வரி 1 முதல் 1.50 யூரோக்களாக உள்ளது. ஆனால் திட்டமிட்டபடி சட்டம் நிறைவேறினால் வரி 8 யூரோக்கள் வரை உயரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இது 3 நட்சத்திர விடுதிகளுக்கு 5 யூரோக்கள் வரையும், 4 மற்றும் 5 நட்சத்திர விடுதிகளுக்கு 8 யூரோக்கள் வரை உயரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருடத்திற்கு 140 மில்லியன் யூரோக்கள் அதிகம் வரும் வருமானத்தை மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துகாக உபயோகப்படுத்த உள்ளது. மேலும், இந்த சட்டம் விதிக்கப்பட்டால் அரசு மற்றும் வணிகத்துறையினருக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என்றும், இது முற்றிலும் பொறுப்பற்ற செயல் எனவும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மற்றைய செய்திகள்
 

வெள்ளி, 27 ஜூன், 2014

விமான நிறுவனங்கள் பெஷாவருக்கான சேவைகளை இடைநிறுத்தும்

 
பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கான சேவைகளை இடைநிறுத்தும் விமானச் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எமிரேட்ஸ், எத்திஹாட் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து கட்டார் எயார்வேய்ஸ் நிறுவனமும் பெஷாவருக்கான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
பாகிஸ்தான் இன்டர்நெஷனல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மீதான தாக்குதலை அடுத்து, விமானச் சேவைகள் நிறுத்தப்படுகின்றன.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் பயணியொருவர் பலியாகியிருந்தார். இதன் எதிரொலியாக பாகிஸ்தானிய பொலிசார் பலரைக் கைது செய்திருந்தார்கள். எனினும், துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக கருதப்படும் இடத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என அவர்கள் தெரிவித்தார்கள்.
 

ஞாயிறு, 22 ஜூன், 2014

அதிகரிக்கும் மக்கள் தொகை இறப்பு விகிதம் குறைந்ததால்

tokai


ஜேர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்தில் மக்கள் தொகை கூடிக்கொண்டே போவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் வரும் 2032ம் ஆண்டில் 350,000 மக்கள் கூடுதலாக சேரக் கூடும் என பவேரியா மாநில புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது. தென் ஜேர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்தில் 2012ம் ஆண்டில் இருந்த 12.5 மில்லியன் மக்கள் தொகை, வரும் 2023ம் ஆண்டில் 12.9 மில்லியனாக உயரும் என தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான காரணம் பிறப்பு விகிதம் இல்லை என்றும், இறப்பு விகிதம் குறைந்ததே காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த 2000 முதல் 2009ம் ஆண்டில் சராசரியாக ஆண்டிற்கு 9600, குடிபெயர்ந்திருந்தாகவும், ஆனால் கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் 76,000 வெளிநாட்டு மக்கள் குடிபெயர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் பவேரியா மாநிலத்தில் 65 வயதிற்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் அதே சமயம் வடக்கு மாநிலமான பிரான்கோனியாவில் மக்கள் தொகை 18 சதவிகிதம் குறைந்துள்ளது.


!மற்றைய செய்திகள் "

வியாழன், 19 ஜூன், 2014

பிரிட்டனில் அமலுக்கு வந்தது புதிய சட்டம்!

கட்டாய திருமணத்திற்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என, பிரிட்டன் அரசு சட்டம் இயற்றி உள்ளது. பிரிட்டனில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் வாரிசுகளின் திருமணத்தை, வாரிசுகளின் ஒப்புதல் இன்றி, தாங்களாகவே முடிவு செய்து, திருமணம் செய்து வைக்கின்றனர். இதற்காக, தங்கள் சொந்த நாடுகளுக்கு சென்று, கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர்.
   அத்தகையோர், பின், பிரிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்வது வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து, 'கட்டாய திருமணம் செய்து கொண்டால், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்; திருமணத்திற்கு நிர்பந்திக்கும் பெற்றோர், உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவர்' என, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு, புதிய சட்டம் பிறப்பித்து உள்ளது.