siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் நடிக்கும் 21ம் நூற்றாண்டின் காதலைச் சொல்லும் படம் – நந்தனம்

13.08.2012.சுபா கிரியேசன்ஸ் எஸ். தங்கராஜ் தயாரிக்க… N. C . ஷியாமளன் இயக்கத்தில் செவாலியே சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் – மித்ரா குரியன் நடிக்கும் நந்தனம்.

காதல் பலவிதத்தில் சினிமாவில் கையாளப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் காதலிக்க ஏழு வருடங்கள் தேவையில்லை. ஏழு நாட்கள் போதும்…என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம்தான் நந்தனம்.

இன்றைய பெண்களும் சரி பசங்களும் சரி வாழ்க்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முன்னிறுத்தியே தங்கள் சக துணையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு மென்மையான காதலை அழகான நேர்த்தியுடன் சிற்சில திருப்பங்களுடனும், இறுதியில் சொல்லப்பட்டிருக்கும் தீர்வும் இன்றைய காதலர்கள் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

செவாலியே சிவாஜியின் பேரன். சிங்கக்குட்டி படத்தின் மூலம் மிகப் பிரமாண்டமாக அறிமுகம் செய்யப்பட்டவர் சிவாஜி தேவ். தன் தாத்தாவின் பெயரையே தனக்கும் வைத்து அழகு பார்க்கப்பட்டவர். ராம்குமார் அவர்களின் புதல்வன். சிங்கக்குட்டி முடித்த கையோடு லண்டனில் நடிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சென்றவரின் அடுத்த படம் நந்தனம். நந்தனம் தனக்கு ஒரு காதல் நாயகன் அந்தஸ்த்தைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறார் சிவாஜி தேவ்.

காவலன் நாயகி மித்ரா காவலனுக்குப் பிறகு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தவர் இதன் கதையில் ஒன்றி நடிக்க ஒப்புக்கொண்டார்.

மற்றொரு கதாநாயகனாக கையில் ஒரு கோடி ரிஷி நடிக்கிறார். காமடி களத்தை அயன் ஜெகன் களைகட்ட வைக்க, ஈசனுக்குப் பிறகு ஒரு மிரட்டலான கதா பாத்திரத்தில் நடிக்கிறார் ஏ. எல் அழகப்பன். ஆர் பாலு, ஏ. வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்த என். சி. ஷியமலன் முதன்முறையாக கதை திரைக்கதை வசனம் எழுதி அறிமுகமாகிறார்.

முதல் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் உள்ள நந்தனம் மற்றும் ஹெச் சி எல் போன்ற பிரபல ஐ டி நிறுவனங்களில் அனுமதி பெற்று நடைபெற்றது. அன்வர் படத்திற்கு இசையமைத்த கோபி சுந்தர் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார். ஆறு பாடல்கள் படமாக்கப்பட்டு வருகிறது. எல். மோகன் ஒளிப்பதிவு செய்ய, வி. டி. விஜயன் எடிட்டிங் செய்ய சங்கர்தாசின் தயாரிப்பு மேற்பார்வையில் நந்தனம் வேகமாக வளர்ந்து வருகிறது

0 comments:

கருத்துரையிடுக