siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

போர்க் குற்றவாளிகள் மீது உடன் நடவடிக்கை தேவை

13.08.2012.இலங்கையில் நடந்தேறிய இறுதிப்போரின்போது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா. மூலம் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் இவ்வாறு சென்னையில் நேற்று நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:

 * இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

 * தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்

 * இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது       ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்

 * இலங்கையில் தமிழ் மொழி அடையாளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்

 *இன்றைய இலங்கையில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இராணுவ முகாமாக காட்சியளிக்கிறது இன்றைய தமிழீழம். எனவே தமிழர் பகுதிகளில் வலிந்து குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களவர்களை உடனே வெளியேற்ற வேண்டும்

 *தமிழர் பகுதியில் இயல்பு நிலை திரும்ப இலங்கை அரசை ஐ.நா. வலியுறுத்த வேண்டும்
 அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று சிறைகளில் வாடும் தமிழர்களை விடுதலை   செய்வதில் ஐ.நா. அகதிகள் சபை தலையிட வேண்டும்

 *இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அல்லது  அவர்கள் இந்தியாவில் நிரந்தரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்

 *அகதிகள் தொடர்பான ஐ.நா. வின் ஒப்பந்தத்தை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்

 *ஐ.நா. மூலம் தமிழ் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் .ஈழத் தமிழர்  பிரச்சனை தெற்காசிய பிரச்சனையாக அறிவிக்கப்பட வேண்டும்

 *தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை  செய்யப்பட வேண்டும்

 *தமிழக மீனவர் படுகொலைக்கு முடிவுகட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும்
 தமிழகத்தின் மண்டபம் அல்லது தனுஷ்கோடியில் இந்திய கடற்படை முகாம் அமைக்க  வேண்டும்

 *தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை கண்காணிக்க பன்னாட்டுக் குழு அமைக்க வேண்டும்.

 *இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இலங்கை படையினருக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது
 டெசோ மாநாட்டில் பங்கேற்போரை கண்காணிப்போம் என்ற இலங்கை அரசின் மிரட்டலுக்கு கண்டனம்

 *டெசோ மாநாட்டுக்கு தடை விதித்து இடையூறு செய்த அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம்
 என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

0 comments:

கருத்துரையிடுக