13.08.2012.ஏற்கெனவே திருமணம் செய்த பெண்ணை ஏமாற்றி மூன்றாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் மனைவி. திருமணத்தை நிறுத்திய போலீஸார், தொடர்புடைய நபர் மற்றும் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.ஏற்கெனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிரச்னை ஏற்பட்டுப் பிரிந்தவர் 2வதாக சண்முகத் தாயை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2009 ல் வெளிநாடு சென்று திரும்பியவர், தன் மனைவி மீது சந்தேகப் பட்டார்.
இதனால் தனியாக இருந்தவர், முதுகுளத்தூர் கீழச்செல்வனூர் சாத்தன் மகள் நாகஜோதியை 3வதாக திருமணம் செய்ய முயன்றார். அதன்படி, அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. 25.04.2012 அன்று காலை திரு உத்தரகோசமங்கை கோயிலில் திருமணம் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் சண்முகத்தாய் அங்கே சென்று நியாயம் கேட்டுள்ளார். அவரை மற்றவர்கள் அடித்து உதைத்து திருப்பி அனுப்பியுள்ளனர். அதனால் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்ற சண்முகத்தாய், ஊமைத்துரை மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் கொடுத்தார்.
இதனால், கோயிலுக்குச் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர் போலீஸார். போலீஸார் அங்கே வருவது தெரிந்ததும், திருமணத்துக்கு வந்திருந்த பலரும் தப்பித்து ஓடிவிட்டனர். பின்னர் ஊமைத்துரை, அவரது பெற்றோர், மணப்பெண் நாகஜோதி, அவரது பெற்றோர் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் போலீஸார்








0 comments:
கருத்துரையிடுக