இந்திய கடற்படையை நவீனமயமாக்கும் நோக்கத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 900 ஹெலிகொப்டர்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலக அளவில் ஹெலிகொப்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் போயிங், பெல், சிகோர்ஸ்கை, காமோவ், ஈரோகாப்டர், அகஸ்டர் வெஸ்ட்லேண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இதற்கான டெண்டருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டரின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாகும். முதற்கட்டமாக ரோந்து பணி, தீவிரவாத எதிர்ப்பு, நிவாரண பணி, நீர்மூழ்கி கப்பல் அழிப்பு பணி மற்றும் உளவுப்பணிக்காக 56 ஹெலிகொப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
56 ஹெலிகொப்டர்களுடன் 28 ஸ்பேர் இன்ஜின்கள், பயிற்சி அளிப்பதற்கான சிமுலேட்டர்கள் 3 வழங்க வேண்டும் என டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக கடற்படை தலைவர் நிர்மல் வர்மா தெரிவித்துள்ளார்
0 comments:
கருத்துரையிடுக