13.08.2012.தமிழ்நாடு இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்து மதம் பாரம்பரிய பெருமைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. சேவை மனப்பான்மையுடன் இந்து மக்களுக்காக ஏராளமான பொதுச்சேவைகள் செய்து வருகிறோம். அண்மையில் காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த விழாவொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர் பரத்தை மாணவர்கள் அழைத்தனர். ஆனால் அந்த விழாவில் பங்கேற்க பரத் ரூ.5 லட்சம் கேட்டாராம். அதிர்ந்து போனோம்.
பரத்தை டெலிபோனில் தொடர்பு கொண்டு, மாணவர்களாகிய ரசிகர்கள்தான் உங்களுக்கு அடையாளம் தந்து உயரத்தில் ஏற்றி வைத்துள்ளனர். கல்லூரி விழாவுக்கு வர பணம் கேட்கலாமா என கேட்டேன். போனை துண்டித்து விட்டார்.இந்து மதம் பாரம்பரிய பெருமைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. சேவை மனப்பான்மையுடன் இந்து மக்களுக்காக ஏராளமான பொதுச்சேவைகள் செய்து வருகிறோம். அண்மையில் காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த விழாவொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர் பரத்தை மாணவர்கள் அழைத்தனர். ஆனால் அந்த விழாவில் பங்கேற்க பரத் ரூ.5 லட்சம் கேட்டாராம். அதிர்ந்து போனோம்.
பிறகு நடிகை சினேகாவை அழைத்தோம். அங்கும் இதே பதில்தான் கிடைத்தது. வேறு பல நடிகர்களையும் அழைத்தோம். அவர்களும் பணம் கேட்டார்கள். நடிகர்களை பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இளைஞர்கள் இனிமேல் விழிப்புணர்வுடன் செயல் படவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது
0 comments:
கருத்துரையிடுக