siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 11 ஆகஸ்ட், 2012

உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ

11.08.2012.
அது போலவே உயிருக்கு அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே, வலிமைகளில் எல்லாம் உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை பெறுவான். * அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால் உயர்ந்திருப்பவர்களைக ் காட்டிலும், அறிவால் சிறந்தோரே உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும் அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது. இவர்கள் யாருக்கும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள். * பரிபூரணமான அறிவைப் பெற்றிருப்பவர்கள், எப்போதும் தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எந்த இன்பத்திற்கும் அடிமையாகாமல், தம்மை அடக்கி வைத்திருப்பார்கள். ஒரு பொருளை பார்த்தவுடன் அதன் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணிக்காமல், அதன் உட்பொருள் தன்மையையும், உண்மை நிலையையும் எளிதில் கணித்து விடுவார்கள். * மனிதர்கள் சிறந்து திகழ அறிவு தேவை. கடவுளே அறிவின் வடிவமாக இருக்கிறார். அந்த அறிவாகிய இறைவன் உள்ளே வருவதற்கு இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். இதயத்தை சுத்தப்படுத்த இறைவனிடத்தில் பக்தி செலுத்த வேண்டும்
புகைப்படம்: Visit www.pagejaffna.com Right Now...புகைப்படம்புகைப்படம்காணொளி,

0 comments:

கருத்துரையிடுக