கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
உற்சவங்களில் மிகப்பெரிய உற்சவமாக பிரம்மோற்சவம் கருதப்படுகிறது. துவஜாரோஹனம் எனப்படும் கொடியேற்றம் முதல் தீர்த்தம்,பூங்காவனம் வரையான உற்சவங்கள் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல் ஆகியவற்றை குறிக்கின்றன.
இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்த்திருவிழாவானது மனிதனிடத்தில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற தத்துத்தை வெளிப்படுத்துகிறது.
கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பிரம்மோற்சவம் கடந்த முதலாம் திகதி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமானது. இத்திருவிழா நாளை மறுதினம் திங்கட்கிழமை பூங்காவனம்,திருவூஞ்சல் பூஜைகளுடன் நிறைவுபெறும்.
0 comments:
கருத்துரையிடுக